செய்திகள்

தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம்:

“வணக்கம்…

இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும்கூட.

ஊரே கூடி ஊழல், ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

‘ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா’ என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.

நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வர வைக்கிறது.

ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்…! அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி…?

இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக் கொண்டபடி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பி வைக்கும் ஒரு வேண்டுகோளே.

நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள்.

எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.

தற்கால அமைச்சர்கள்விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்.

அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ!

பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இத்தனை லட்சம் பேரை, கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.

நிற்க.. செய்தி சரியாகப் புரியாதவர்களுக்கு…

“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க.

கார்டு, கவர்ல, கடுசுதால வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”

எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக் காட்டுகிறேன்.

சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச் சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவெரல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல்.

துணிவுல்ல சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

மக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.

விரைவில் அது கேட்கும். தெளிவாக

உங்கள்

கமல்ஹாசன்

அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி :

http://www.tn.gov.in/ministerslist

Advertisements

One comment

  1. ஊழல்,இலஞ்சம், பதில்தர கடமைப்பாடின்மை, மந்தகரச் செயற்பாடு இத்தியாதிகளை எதிர்ப்பது தம்மட்டில் தாமே ஒரு அரசியல்தான். இந்த இரசியல் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இது ஜனநாயக நாட்டின் பிறப்புரிமை. ஆனால் இவ்விதம் எதிர்ப்பவர்கள் எல்லாம் கட்சி அரசியலுக்கு வந்துதான ஆகவேண்டும் என்பதுவோ அல்லது கட்சி அரசியலில் இருப்பவனுக்குத்தான் இத்தகைய உரிமைகள் உண்டென்பதுவோ அப்பட்டமான சர்வாதிகாரம். கமலின் குறிக்கோள் உண்மையிலேயே ஊழல் எதிர்ப்புத்தான் என்றால், அன்னா ஹசாராபோல் அவர் கட்சி அரசியலுக்கு வராமல் இருப்பதுவே மேல்.
    அரசியல் களத்தில் நில்லுங்கள் ஆனால் பணவேட்டையை மையமாகக் கொண்ட இன்றைய கட்சி அரசியலுக்கு வராதீர்கள். உங்களுக்கு உள்நோக்கம் வேறெதுவும் இல்லையானால், கட்சி அரசியலுக்கு வெளியால் உள்ள கட்சி
    சார்பற்ற அரசியலில் நின்று கொள்ளுங்கள். நடு நிலையாக நின்று பல காரயங்கள் சாதிக்கலாம். போத்தீச் துணிக்கடை உங்களைப் பாவித்து தமது துணிமணிகளை விற்பதுபோல், பணநாயகக் கட்சிகள் உங்களை வீச்சுவலையாகப் பயன்படுத்தி தமக்குத் தேவையான மீன்களைப் ( வாக்குகளை ) பிடித்துக் கொள்வார்கள். தமது ஊழலில் நிச்சயம் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். நல்ல முடிவாக எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு விளம்பர அரசியலிலிருந்து விலகி விவகாரமைய அரசியலை நோக்கி நகர்கிறது என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புவோம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: