செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு பயிற்சி: சுப. உதயகுமாரன் அழைப்பு

இது நீங்களே தலைவராகும் காலம் தோழர்களே! நீங்கள் இல்லையென்றால், வேறு யாராலும் முடியாது. இப்போது இல்லையென்றால் வேறு எப்போதும் முடியாது!

பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“கூடங்குளத்தில் இரு அணு உலைகளைக் கட்டாதே” என்று போராடினால், “ஆறு அணு உலைகளைக் கட்டுவோம்” என்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஒரு கதிராமங்கலம் வேண்டாம் என்று களமாடினால், அரை சதம் கதிராமங்கலங்களுக்கு அறிவிப்பு வெளியாகிறது. அணுத்தீமை முதல் நீட் தேர்வு வரை, ஏராளமான பிரச்சினைகளுக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். நம் வளங்கள் சுரண்டப்படுகின்றன, வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன, வருங்காலம் நசுக்கப்படுகிறது.

“என்னுடைய ஒருதலைக்காதலை ஏற்கவில்லையென்றால், உன்னுடைய வாழ்வை ஆசிட் வீசி அழிப்பேன்” என்றியங்கும் சைக்கோ காதலனைப் போல ஒரு தேசியக் கட்சி அலைந்துகொண்டிருக்கிறது. “எங்கள் வீட்டுக்குள் புகுந்து யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள், என் நாற்காலியையும் அதன் கீழேயிருக்கும் பணப்பெட்டியை மட்டும் தொந்திரவு செய்யாதே” என்று ஒரு மாநில கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்மில் சிலரோ சினிமாக்காரர் யாராவது வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று அவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ காலாவதியாகிப்போன கட்சிகளின் அலுவலகங்களில் தவம் கிடக்கின்றனர். இது நீங்களே தலைவராகும் காலம் தோழர்களே! நீங்கள் இல்லையென்றால், வேறு யாராலும் முடியாது. இப்போது இல்லையென்றால் வேறு எப்போதும் முடியாது!

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகரப் பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12,524 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள மன்ற உறுப்பினர் (வார்டு கவுன்சிலர்) முதல் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வரையிலான பல்லாயிரக்கணக்கானப் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழரின் தலைவிதியை மாற்ற வேண்டுமென்றால், ஏதாவது ஒரு பதவியை இலக்காகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அணியமாகுங்கள்.

பச்சைத் தமிழகம் கட்சி சார்பாக முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி அளிக்க விரும்புகிறோம். காலை முதல் மாலை வரையிலான இந்தப் பயிற்சியில், உள்ளாட்சி அமைப்பு முறை, இந்திய அரசியல் சட்டம், உள்ளாட்சி சட்டத் திட்டங்கள், உள்ளாட்சி அமைப்புக்களின் அதிகாரங்களும் மற்றும் கடமைகளும், முன்னாள் உள்ளாட்சித் தலைவர்களின் அனுபவங்கள் என பல தலைப்புக்களில் சிறந்த ஆளுமைகள் பலர் பயிற்சி அளிப்பார்கள்.

உணவு, தேநீர், பயிற்சிப் பொருட்கள் என அனைத்துக்குமாக ஒரு நாளைக்கு ரூ. 1,000 (ஆயிரம் மட்டும்) கட்டணமாகப் பெறுகிறோம். “தமிழ், தமிழர், தமிழகத்துக்கு உண்மையாக, நேர்மையாக, உறுதியாக, ஒழுக்கமாக நின்று உழைப்பேன்” எனும் எழுத்துபூர்வமான உறுதிமொழியை எடுக்க முன்வருகிறவர்களை மட்டுமே இப்பயிற்சியில் இணைத்துக் கொள்வோம். பச்சைத் தமிழகம் கட்சியில் இணைய வேண்டியத் தேவையில்லை. ஆனால் இணைகிறவர்களுக்கு எங்களாலான கூடுதல் உதவிகளைச் செய்வோம்.

பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தோழர் தமிழ்செல்வன் அவர்களை அணுகவும். எண்: 7010106215.

பச்சைத் தமிழகம் கட்சி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.