காதல்

“நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது?”: சிறையில் இருக்கும் பேரா.சாய்பாபா தனது மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்திருக்கிறோமா? ஏன் நம்முடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டது? நம்முடைய கனவுகள் ஏன் குற்றமாக்கப்பட்டன?

சிறையிலிருந்து பிறந்தநாள் வாழ்த்து!

அன்புள்ள வசந்தா,

பிறந்த நாள் வாழ்த்துக்களை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். பிறந்த நாளின் போது இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நாளில் உனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும். நான் இல்லாத இந்த நாள் குறித்து எப்படி வருந்துவாய் என நான் அறிவேன். இந்த அரசு நம்மை பிரிப்பதிலேயே தீர்மானமாய் இருந்தது; சொல்லப்போனால் நம்மை அழிக்கவும் திட்டமிட்டது. திருமணமான இந்த 26 வருடங்களில், நாம் ஒருபோதும் தனிப்பட்ட நலன்களுக்காகவோ வளர்ச்சிக்காவோ எதையும் எதிர்பார்த்ததில்லை. நம்முடைய 36 ஆண்டுகால வாழ்க்கையில் இந்த சமூகத்துக்காக நம்பிக்கையை மட்டுமே கொண்டு இணைந்து உழைத்தோம். இதையொட்டி நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இல்லாத இந்த சூழ்நிலையில், இதே நம்பிக்கையுடன் நீ மக்களுக்காக பணி செய்ய வேண்டும். என்னுடைய இல்லாமையும் சிறைதண்டனையும் உன்னை எந்தவிதத்திலும் அசுவாசப்படுத்திவிடக்கூடாது. உன்னுடைய பிறந்த நாளான இன்று, நீ ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும்…இந்த துன்பத்தையும் நம் மீது ஏவப்பட்ட மிருகத்தனத்தையும் நம்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை… இந்த தீர்ப்பும் சிறைச்சாலையில் நான் அடைக்கப்பட்டிருக்கும் விதமும் நமக்கு அவமானம் அல்ல! அரசின் இந்த நடவடிக்கைகள் உண்மையில் ஜனநாயகத்துக்குத்தான் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் ஒரு நல்ல சமூகத்துக்காக கனவு கண்டோம்; சமத்துவமின்மைக்கு முடிவு வரும் என நம்பினோம். மனித உரிமைக்கான சுதந்திரத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோரின் ஜனநாயக, பொது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தோம். ஒதுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து, இந்த சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, நாம் இந்த மதிப்புகளை ஒருபோதும் கைவிடாது தொடர வேண்டும்.

அவர்கள் நமது கனவை, நம்பிக்கையை நசுக்க முயற்சிக்கலாம்; ஆனால், நாம் இன்னமும் கனவுகண்டுகொண்டிருப்பதையோ, நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருப்பதையோ அவர்களால் தடுக்க முடியாது. பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட தீர்ப்பு, பொய்யான வழிகளில் என்னை சிறையில் வைத்திருப்பது உன்னுடைய ஊக்கத்தை குலைக்கக்கூடாது. நம்பிக்கையை ஒருபோதும் நீ இழக்கக்கூடாது. எனக்கு, உன்னுடைய பிறந்த நாள் எப்போதும் முக்கியமானது, எப்போதும் என்னை உற்சாகமூட்டக்கூடியது. நீ இந்த நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்திருக்கிறோமா? நாம் யாரையாவது தாக்கி இருக்கிறோமா? ஏன் நம்முடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டது? நம்முடைய கனவுகள் ஏன் குற்றமாக்கப்பட்டன? நம்முடைய கனவு ஏன் நசுக்கப்பட்டது? நம் கனவுகள் மீதான, மனிதத்தன்மையற்ற தாக்குதலை எதிர்த்து, நம்முடைய சின்னஞ்சிறு கனவுலகில், நாம் நம்முடைய உலகத்தில் வாழ முடியுமா? இந்த மணித்துளியில் உனக்கும் எனக்கும் உந்துசக்தியாக இருப்பது எது?

இவ்வாண்டின் பிறந்த நாளில் நான் உனக்கு என்ன தருவேன்? நான் உனக்காக என்ன வைத்திருக்கிறேன்? அதே காதலைத்தான். பள்ளிக் காலத்தில் நாம் முதன்முதலாக சந்தித்த போது உண்டானதே அதே காதல்! உனக்கு நான் நம் வாழ்நாள் முழுக்க அளித்த அன்பை காட்டிலும் நீ அதிக அன்பை செலுத்தியிருக்கிறாய். பதின்பருவ காதல் காலத்தில் உனக்களித்த அதே கனவை இப்போதும் என்னால் அளிக்க முடியும்.

நீ இப்போது என்னுடைய சுதந்திரத்துக்காக தனித்து போரிடுகிறாய். உன் இதயத்தை வலுவிழுக்க விடாதே. இருள் நிரந்தரமாக வெளிச்சத்தை மறைத்துவிடமுடியாது என்பதைப்போல இருள் சூழந்த இந்த நாட்களில் நீ நம்பிக்கையையும் கனவையும் இழந்துவிடாதே. இவை வெறுமையான சொற்கள் அல்ல. நமது நம்பிக்கை முட்டாள்தனமான சிந்தனையல்ல, நாம் வெற்றி பெறுவோம்.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு, இவ்வாண்டின் பிறந்த நாளின்போது, நான் எனது காதலை மறுபடியும் உனக்கு காணிக்கையாக்குகிறேன். என்னுடைய தைரியத்தை, நம்பிக்கையை, கனவுகளை உன் காதால்தான் நான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்நாளில் இதுவரை என்னென்ன செய்தேனோ, அதற்கெல்லாம் காரணமாய் இருந்தது கலங்கரை விளக்காக நீ என் மீது பொழிந்த காதல்தான்.

இந்நாளில் அனைத்தும் திரும்ப வாழ்த்துகிறேன்

அளவில்லா காதலுடன்
உன்னுடைய
ஜி.என். சாய்பாபா

மாவோயிஸ்டுகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, தன்னுடைய மனைவி வசந்தாவுக்கு எழுதிய கடிதம் இது. இந்தக் கடிதத்தை வசந்தா, அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜி.என். சாய்பாபா

Birthday greetings from Prison

Dear Vasantha,

I wish you have a happy birthday to you. I hope this letter reaches the day of your birthday. Many happy returns of the day. I know how bad you feel without my presence on this day. The state has determined to separate us. It has even determined to destroy us. In 26 years of our married life, we have not looked forward to individual comforts and growths. 36 years of our companionship only hoped and worked for the society. In this context, I can only say you should continue hope and works for the rights of the people in my absence. My imprisonment and my absence should not discourage you. On your birthday today, you take a resolve to face this adversity, this brutality inflicted on us, this violence perpetrated on us.

This case, this judgement and my incarceration in this prison are not a shame for us. These acts of the state are really a shame for the democracy. We dreamed for a better society, we hoped for the end to the inequalities, for human rights freedom, civil and democratic rights of the oppressed people, Dalits, Adivasis, women, the disabled the minorities. We continue to uphold these values and work for the betterment of the marginalised sections of the people to bring real democracy in our society.

They can try and crush our hopes, our dreams, but they can’t stop us still dreaming, still nurturing hopes in our hearts. The false case, the fabricated judgement, and the dubious ways to keep me in prison should not discourage you, should not force you to lose hopes. For me, your birthday is always important, always brings cheers to me. You should feel happy on this day. We are small people working for small people’s rights in small ways. Why does this gigantic state fear our hopes, our love, our dreams? Have we done anything wrong to anyone? Did we have to harm anyone? Why are our lives violated? Why are dreams criminalised.? Why are hopes crushed? Can we live in our own world, in our little dreamy world on our own, dashing against brutal and inhuman violent attack on our dreams? What gives us strength at this hour to you and me?

On the day of this birthday this year what can I give you? What do I have with me left? The same love. The same love that sprang between us when we met first during school days. You have given more love than I could ever extend to you in all our lives. I can still give you the same dreams that we shared since our adolescent love days.

Now you are the lone fighter fighting for my freedom. Don’t get disheartened in these dark days we should not lose our hopes and dreams for the darkness can’t permanently overshadow the light. These are not empty words. These are not rhetorical phrases. The history proved several times over that our dreams are not empty ones. Our hopes are not idealistic nonsense. We will win.

On your birthday this year from behind these bars, I re dedicate myself to your love. I sustain my courage my hopes my dreams because of your love. Whatever I did in my life so far I could do it because you stood like a lighthouse showering love all along me.

WISH YOU MANY RETURNS OF THE DAY
Yours , With lot of love,

2 கருத்துக்கள்

 1. தனித்தமிழ்நாடு கோரிக்கை, தென்னிந்திய பெடரேஷனுக்கு வழிவகுக்கும்:

  “பாரத்மாதா எனும் சீக்கு பிடித்த தேவ்டியாமுண்டையின் துர்நாற்றம் வயித்தை குமட்டுகிறது. இனி எவ்வளவு நாளைக்கு இந்த பாப்பார பண்டார பரதேசிகளின் அட்டூழியங்களை பொறுப்பது?. எவ்வளவு பேரால் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்க ஓட முடியும்?. எவ்வளவு பேருக்கு அவர்களால் வேலை தரமுடியும்?. தனக்கு மிஞ்சித்தான் தானம் எனும் மனநிலை அங்கேயும் வருகிறது. சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியவில்லை, சொந்த கடலில் மீன் பிடிக்க முடியவில்லை, சொந்த ஆற்றில் தண்ணீரில்லை… இனியும் தேவையா இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா?” எனும் கேள்வி நாடு முழுதும் 130 கோடி மக்களின் மனதில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.

  வடக்கே காஷ்மீர், காலிஸ்தான் மற்றும் கிருத்துவர் பெரும்பான்மையாக வாழும் ஜீஸஸ்தான் என சொல்லப்படும் அருணாச்சல், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் விடுதலை நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. இந்திய ராணுவம் பல துண்டுகளாக உடையும் நிலை வந்துவிட்டது.

  இந்த சூழ்நிலையில், பூனைக்கு மணி கட்டுவது யார்?. “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு நாடில்லையே” என புலம்புவதால் என்ன பயன்?. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா?.

  தமிழகத்தின் ஆறுகள் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. தனித்தமிழ்நாடு என பேச்செடுத்தால், குடிக்க தண்ணியில்லாமல் தமிழன் சாவான் எனும் பயமும் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது?. அதே சமயம், முக்கடலின் பெரும்பகுதி, நான்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. யார் முட்டுக்கட்டை போட்டாலும் கடல் வழி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும்.

  தென்னிந்தியாவின் ஜனத்தொகை 25 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 100+ கோடி. தென்னிந்தியாவில் அனைத்து ஆறுகளும் வளங்களும் உள்ளன. முக்கடல் தென்னிந்தியாவில் உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு சிறு துரும்பு கூட தென்னிந்தியாவுக்கு தேவையில்லை. வெறும் பாஸ்போர்ட் தருவதற்கு டெல்லிக்காரன் தேவையா?. தென்னிந்தியா தனிநாடாக பிரியாவிட்டால், வட இந்தியாவின் ஜனத்தொகை வெள்ளத்தில் தென்னிந்தியா மூழ்கிவிடும்.

  ஆக கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை என்பது நடக்காது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீர வேண்டுமானால், தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடெனும் “சுதந்திர தென்னிந்திய பெடரேஷன்” ஒன்றே தீர்வு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  பார்ப்பன பாசிஸத்துக்கெதிராக, திராவிட, தலித் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்தில் ஒன்று சேர்ந்துவிட்டன. அதே சமயம் ஷரியா எனும் எரிமலையை சீண்டிவிட்டு, 40 கோடி இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து விட்டான் முட்டாள் பாப்பான்.

  இன்று தென்னிந்திய பெடரேஷனை உருவாக்கும் பொன்னான வாய்ப்பு தமிழனின் கையில் இருக்கிறது. இந்த கருத்தை கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக தலைவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை திராவிட, தலித் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் ஏற்க வேண்டும்….

  சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். இது காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்க வழி வகுக்கும்.

  இன்ஷா அல்லாஹ், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வர்….

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: