இரா. முருகப்பன்
₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாவட்டம் மங்களம் பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தமிழ்மாறன் கைது செய்யப்பட்டதற்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் மங்கலம்பேட்டை காவல்நிலைம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இவர் விழுப்புரம், தொழுதூர் போன்ற பகுதிகளில் பணியாற்றியபோது பழங்குடி இருளர்கள் மற்றும் குறவர் சமூக மக்கள் மீது பொய்யான பல்வேறு திருட்டு வழக்குகளைப் போட்டு திருட்டு நகைகளை எடுத்துக்கொண்டவராகும்.
திருக்கோவிலூர் போலீசாரால் 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்பெண்களின் உறவினர்கள் 9 பேரை விழுப்புரத்தில் ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவராகும்.
குறவர் சமூக மக்களை சித்திரவதை செய்தது தொடர்பாக இவர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நிலுவையில் உள்ளது.
இரா. முருகப்பன், ஊடகவியலாளர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.