இலக்கியம்

நூல் அறிமுகம்: ‘இலங்கையின் சுஜாதா ‘ அ.முத்துலிங்கம் எழுதிய “நாடற்றவன்”!

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

‘தமிழ் ஈழம் கிடைக்கும் போது கிடைக்கட்டும்; அதுவரைக்கும் இதுதான் என்நாடு’ என்று கனடா நாட்டின் ‘ ரொறொன்ரோ’ ( Toronto ) நகரில் தன் மனைவியுடன் (இந்தப் பெரிய சிரிப்பைத் தாங்கிக் கொள்ள இந்த முகம் காணாது. இன்னும் பெரிய முகம் ஒன்றுக்கு ஓடர் பண்ண வேணும்) வாழ்ந்துவருகிறார் இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

இலங்கை , ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் பணிபுரிந்த காரணத்தால் பல அனுபவங்கள், ஆளுமைகளின் தொடர்பு ஆசிரியருக்கு இயல்பாகவே கிடைத்திருக்கிறது. இதனை ஓரிரண்டு பக்கங்களில் சுவாரசியமான கட்டுரைகளாக (அரைக் கதைகள் என்று சொல்லலாமோ?) பல காலக்கட்டங்களில் சஞ்சிகைகளிலும், இணையத்திலும் எழுதியுள்ளார் முத்துலிங்கம். அவ்வாறு எழுதப்பட்ட 58 அத்தியாயங்கள் இந்த 279 பக்க நூலில் உள்ளன.

படிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. பல இடங்களில் மனம் விட்டு சிரிக்கலாம். சுஜாதா எழுதிய ‘ கற்றதும் பெற்றதும் ‘ எப்படி இருக்குமோ அந்த தொனியில், அதே பாடுபொருளில்தான் இந்த நூலும் இருக்கிறது.

‘2012 இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருவர் ( தெற்கு சூடான்) மரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்க முடியும் ?’ அதுதான் இந்நூலின் பெயர் – நாடற்றவன்.

பழம்பாடல்களை இலகுவாக கையாள்கிறார் ( பனியும் பனி சார்ந்த நிலத்துக்கு பாடல்கள் இல்லை ); ‘பராசக்தி படத்தில்  சிவாஜி கொஞ்சம் முயன்றிருந்தால் ஏறக்குறைய தம்மைப்போல உணர்ச்சிகரமாக பேசியிருக்கக்கூடும்’என அங்காலாய்க்கிறார்;’ நாகரீகமும் , புளிக்க வைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ‘ என்று ‘ஆறு கோப்பைகளில் ‘ சொல்லுகிறார். ‘ பசி அது கூட நோய்தானே அது மட்டும் இன்னமும் ஒழியவில்லை ‘ என்று கவலைப்படுகிறார்.’ துனிசியா புரட்சி ‘ ‘ சர்வதேச தேதிக்கோடு ‘ ‘ ‘ஷோபாசக்தி ‘ ‘தேவி பாரதி’பற்றி எழுதுகிறார். சோமாலியா பொங்கல், சூடான் பொங்கல், கனடா பொங்கல் பற்றி எல்லாம்  எழுதுகிறார்.

அ.முத்துலிங்கத்தை இலங்கையின் சுஜாதா என்று அழைத்தால் என்ன ?

நாடற்றவன் / கட்டுரைகள் / அ.முத்துலிங்கம் / 279 பக்கம் / ரூ. 225/ நற்றிணைப் பதிப்பகம்.

 பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s