தலித் ஆவணம்

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

20 வருடத்திற்கு முந்தய டாக்டர் க்ருஷ்ணசாமியின் அரசியல் பாதையை, அவருக்கே கூட நினைவுபடுத்தும் கட்டுரையாக இது அமையலாம் என்பதில் சந்தேகமில்லை.

**************

ஷோ.வா: இன்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நீங்கள். இந்த நிலையை அடைவதற்காண பயணம் கரடு முரடாக இருந்ததா ?

கி.சாமி: ஆம். மிகக் கரடுமுரடான பயணம்தான் அது. கோவையில் மிக பின் தங்கிய கிராமத்திலிருந்து வந்தவன் நான். தலித்துகள் பள்ளிக்குச் செல்வது என்பது அங்குள்ள உயர் சாதிகளால் தடுக்கப்படுகிற ஒன்றாகவே இருந்தது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த “ஆண்டைகள்” பெரும்பான்மையாக இருந்த அந்தக் கிராமத்தில், மத்தியதர விவசாயக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த என்னுடைய பெற்றோருக்கே, என்னை பள்ளிக்கு அனுப்புவது பெரும் சிரமமாக இருந்தது. தலித்துகள் (They did not like the idea of us, dalits, going to school and studying) பள்ளிக்கு செல்வதையும், கல்வி கற்பதையும் அவர்கள் ஒருபோதும் விரும்பினார்களில்லை. இத்தனைக்குப் பின்னும், என்னுடய பெற்றோர் என்னை பள்ளிக்கு அனுப்பினர். ஆரம்பக்கல்வி முடிவடைந்து நான் உயர்கல்வி பயிலச்செல்லும் நேரத்தில், மறுபடியும் பிரச்சனைகள் தொடங்கியது. அந்த ஊரின் உயர்சாதி ஆட்கள் என் பெற்றோரை வரவழைத்து “எங்களது பிள்ளைகளையே நாங்கள் உயர்கல்விக்கு அனுப்பவில்லை. உங்கள் மகனை உயர்கல்வி கற்க அனுப்புமளவு தைரியம் வந்துவிட்டதா?” என்று மிரட்டினார்கள். ஆனாலும், நான் படிக்க வேண்டும் என்பதில் என் அப்பா உறுதியாக இருந்தார்.

************
ஷோ.வா: நீங்கள் உயர்படிப்பில் சேருவதற்கு உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்தச்சூழலில் உங்கள் பள்ளியில் நீங்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தீர்களா ?

கி.சாமி: பெரிய அளவிலான பாகுபாடுகள் எதையும் நான் பள்ளியில் உணரவில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் என் மீது ஆத்திரம் கொள்வதுண்டு. அதுவும் என்னுடைய பரீட்சைத்தாள்களை திருத்தும் சமயத்தில் அதிகமாகவே சீற்றமடைந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டென்றால், அது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த என்னுடைய தலைமையாசிரியர்தான் என்னுடைய வாழ்வில் முக்கியமான தருணங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பது மட்டுமே. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கு அன்பை வழங்கியபோது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என் மீது துவேஷம் காட்டினார்கள்.

************
ஷோ.வா: உங்கள் கல்லூரிக்காலங்களில் நக்சல்களின்பால் பெரும் ஈடுபாடோடு இருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றினீர்களா ?

கி.சாமி: மார்க்சிஸ்ட் அமைப்புகளின்பால் ஈர்ப்பு என்பது பள்ளியிலேயே தொடங்கிவிட்டது. அப்போது நான் என் பெயரை “ஸ்டாலின் கிருஷ்ணசாமி” என்றே எழுதினேன். அதன் மூலமாக, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை என்னளவில் நான் எதிர்க்கத்தொடங்கினேன். மார்க்சிஸ்ட்டாக மட்டுமல்லாமல், ஆறாம் வகுப்பிலேயே நான் என்னை பகுத்தறிவுவாதியாகவும் உணரத் தொடங்கினேன். அப்போதிலிருந்து நான் கோவிலுக்குச் செல்வது கிடையாது.

************

ஷோ.வா: பின் ஏன் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியே வந்தீர்கள் ? அவர்களிடம் முரண்படத்தொடங்கினீர்களா ?

கி.சாமி: ஆமாம். அவர்களிடம் எனக்கு அதிருப்தி உருவாகத் தொடங்கியிருந்தது. 80-களில், பொங்கல் திருவிழா ஒன்றின்போது தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது நான் தலித்துகளுக்கு ஆதரவாக நிற்க விரும்பினேன். ஆனால், ML அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் சாதியை ஊக்குவிக்கிறேன் என்று என் மீது குற்றம்சாட்டப்பட்டது. வர்க்க ரீதியிலான போராட்டத்தை மட்டுமே ML அமைப்பு நம்பியது. அதுவே எனக்கும் அமைப்புக்குமான முரண்பாடின் முக்கிய புள்ளி.

************

ஷோ.வா: சாதி ரீதியான போராட்டம் ஏன் ? இந்தியாவில் வர்க்கம்தான் மக்களை பிரிக்கிறது என்று நீங்கள் நம்பவில்லையா ?

கி.சாமி: இந்தியாவில், சாதிதான் ஆதிக்கத்தின், ஒடுக்குமுறையின் அடையாளம். இன்றும். ஒரு நோயாளி மருத்துவரிடம் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நோயாளி எந்த பிரச்சனையால் அவதிப்படுகிறாரோ அதற்கான மருந்துகளை அளிப்பதுதான் மருத்துவரின் பணி. தன்னிடம் இருப்பில் உள்ள மருந்துகளை கொடுப்பது அல்ல. இந்தியா என்ற நாடு “சாதீய நோயால்” அவதிப்படும்போது, அதற்கு வர்க்க பிரச்சனைக்கான மருந்தை அளிப்பது சரியல்ல.வர்க்க அளவில் தலித்துகள் கூட பிற்படுத்தப்பட்டவர்களே. ஆனால், அவர்கள் ஒடுக்கப்படுவது சாதியினால் மட்டுமே. இருப்பினும், மக்களைப் பிரித்தாள்வதில் வர்க்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறதுதான்.

************

டாக்டர். கிருஷ்ணசாமி

ஷோ.வா: அப்படியென்றால்… முன்னேறிய வர்க்கம், பிற்படுத்தப்பட்ட வர்க்கம் என்று இரண்டுதானே இருக்க முடியும்?.

கி.சாமி: மருத்துவரும் மருந்துகளும் என்ற விளக்கம் கொடுத்தது இதற்காகத்தான். இந்தியாவில் சாதி அடிபப்டையில்தான் மக்கள் பிரித்தாளப்படுகிறார்கள். இந்தியாவில் சாதிதான் பிரச்சனையே. இங்கு ஒரு பார்ப்பனரால், டீக்கடை முதல் தொழிற்சாலை வரை எளிதாகத் தொடங்க முடியும். சாதியின் ஆதாயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், ஒரு தலித்திற்கு அது இயலாது. சாதி என்பதுதான் சமூகத்தை சுரண்டும் விஷயமென்றால் அதைத்தான் தகர்க்க வேண்டும். சாதிதான் சமூகத்தின் மிகப்பெரும் எதிரி என்பதை மக்களை உணரச்செய்யும் வரை, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை.

************

ஷோ.வா: தலித்துகளுக்கு விடுதலைப்பெற்று தருவதுதான் உங்களின் முதலும் முக்கியமுமான குறிக்கோள் என்று முன்பொருமுறை கூறி இருந்தீர்கள். எதிலிருந்து ? யாரிடமிருந்து ?

கி.சாமி : இந்த அமைப்பில் இருந்து. இந்தியாவில் உள்ள சாதி என்கிற அமைப்பு, தலித்துகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்கத் தயாராக இல்லை. சாதி என்கிற இந்த அமைப்பை முழுமையாக சிதறடிக்க வேண்டும். சாதி அமைப்பை ஆதரிப்பவர்கள் அனைவரையும் நாங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவோம்.

ஷோ.வா: அப்படியென்றால், தலித் என்ற அடையாளத்தில் இருந்து தலித்துகளை விடுவிக்க முயலுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

கி.சாமி: தலித்துகளை ஒற்றுமைப்படுத்துவதே எங்களின் முதற்குறிக்கோள். இங்குள்ள பெரும்பாலான நிலங்களின் உரிமையாளர்கள் அவர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயர்சாதி மக்களால் நிலங்கள் பிடுங்கப்பட்டு கூலிகளானவர்கள் தலித் மக்கள். தலித் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, ஒன்று சேர்த்து, அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதே என்னுடைய நோக்கம்.

************

ஷோ.வா: தலித்துகளின் ஒரே காவலன் என்ற நோக்கத்தில் நீங்கள் செயல்படக்கூடாது என்று சில நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் ராமதாஸ் கூறி இருந்தாரே ?

கி.சாமி: இதைச்சொல்வதற்கு ராமதாஸ் யார் ?

ஷோ.வா: உயர்சாதியில் பிறந்த ஏழைகளுக்காகவும் நீங்கள் போராடுவீர்களா ?

கி.சாமி: நான் வர்க்க ரீதியிலான வேறுபாடுகளைப் பற்றி பேசவில்லை. இருந்தாலும், பொருளாதார சுதந்திரத்திற்காக போராடுகிற ஒருவர், தலித்துகளை சகோதர மனப்பான்மையுடன் அணுக முன்வருவாரேயானால், கண்டிப்பாக நானும் அவர்களுக்காக போராடுவேன்தான் .

ஷோ.வா: இப்போதும் நாத்திகம் பேசுகிறீர்களா ?

கி.சாமி: ஆமாம். இப்போதும் நான் நாத்திகவாதிதான்.

************

Source:  https://m.rediff.com/news/1998/nov/10krish.htm

Advertisements

4 replies »

  1. ஜாதி சாக்கடையில் சுகம் கண்ட தலித் துரோகி அம்பேத்கர்:

    “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை கொல்” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.

    1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.

    இந்த சமயத்தில், “இந்துவாக பிறந்து விட்டேன், இந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.

    ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

    ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

    பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி இந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

    ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

    பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
    ————————

    1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி இந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். சாகும் வரை பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடவில்லை.. தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, சாகும் வரை சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தந்தாள்.

    2. மேல்ஜாதி இந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “நீ ஜாதி சாக்கடையில் இருப்பதால்தானே அவன் உதைக்கிறான்?. ஜாதியை விட்டு வெளியேறு. இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார். “அய்யோ ராசா.. போய்ட்டியாடா… ஜாதி ஒழிக.. தீண்டாமை ஒழிக” என பீலா உட்டு கல்லா கட்டவில்லை.

    அதாவது, மேல்ஜாதி இந்துக்கள் உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

    இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

    Like

  2. மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?

    மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

    ”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக”

    மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

    ‘மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?’

    ‘நீங்க சொல்லித்தான் நாங்க மதம்மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.’

    ‘மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?’

    ‘நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் ‘டேய் சுப்பையா! டேய் மாடா! இங்கவாடா’ என்றுதான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.’

    ‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?’

    ‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’

    நாம் பல இடங்களில் பார்த்த வரையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

    ‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்டபெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள்வசதியான இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீகமுஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

    ‘உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை’?

    ‘அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்’

    சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:

    ‘மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல…அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் ‘வாடா முருகேஷா’ என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். ‘வா முருகேஷா’ என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.”

    தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.

    ‘நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்ச்சாதியாத்தான் பார்க்கிறார்கள்’

    மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.

    ‘முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்னை வந்துள்ளதா?’

    ‘இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.

    எங்கள் குழு ஆராய்ந்த வரையில் தலித்கள் முஸ்லிமாக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.

    Like

  3. ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு – தந்தை பெரியார்:

    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர். ஆம்! தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட்சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம். மீனாட்சிபுரம் “ரஹ்மத் நகர்’ ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர்களோடு உரையாடினோம்.

    “சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலையினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

    “அரைவேக்காடு அன்வர் பால சிங்கம் எனும் ஆணவம் பிடித்தவன், “கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ என்ற புத்தகத்தில் கற்பனையுடன் பொய்யைக் கலந்து உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட்டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர – சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்…” என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.

    “நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்த ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…” என்றார் நம்மிடம்.

    நாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் அறிந்து கொண்டிருந்தபோது கையில் கம்பு ஊன்றிக் கொண்டு வந்த ஒருவர், “பேட்டி எல்லாம் எடுக்குறீங்களாமே? எதற்கு எடுக்கிறீர்கள்? இப்படித்தான் ஒவ்வொரு முறையும் யாராவது பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்…” என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்!

    அவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.

    “இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.

    அதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது…” என்றார்.

    “ஏன் இந்த நிலை?” என்று நாம் கேட்டவுடன், “வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.

    எங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் பெண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.

    நாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,

    “இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம்! எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்…” என்று உறுதியுடன் சொன்னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

    இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.

    ரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மணமுடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர் ரஹ்மத் நகர் மக்கள்.

    ரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடனும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமையக் கூடும். அவர்களின் மனக்குறைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரியவரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழகத்து இயக்கங்களின் செயல்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.

    “ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப்பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதியுடன் நின்று இஸ்லாமே எங்களது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள்.

    “இன்று இஸ்லாம் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம். இழிவு எது வந்தாலும் ஈமானை இழக்கமாட்டோம். அப்படிப்பட்ட எந்த ஒரு இழிவையும் எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிகவும் கருணையாளன்…” என்று ஒருமித்த குரலில் கூறியது இஸ்லாத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சியாக இருந்தது.

    மனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

    (நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பாதவரை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)

    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்கமேலானவர். (அல்குர்ஆன் 49:13)

    Like

  4. ஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:

    குஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி இந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:

    “ஓ இந்துக்களே !!. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து இந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் அல்லாஹ்விடம் அனுப்பி விடுவோம்”.
    ————————-

    ஆம்.. தமிழ்நாட்டில் இந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி இந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

    “உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்?.

    ஜாதி வெறி வாழ்க !!. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க !!.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s