கருத்து

அமித்ஷாவின் 300% சொத்து அதிகரிப்பும் மானிய ரத்தும்

இஸ்லாமியர்களை கொல்லலாம். தலித்துகளை கொல்லலாம். மதவாதத்தை திணிக்கலாம். வரலாற்றை மாற்றலாம். அரசியல் அமைப்பை திருத்தலாம். அதற்கு பன்னாடுகள், அதிகபட்சம் போனால் சின்னதாக கண்டனம் கொடுக்கும். அதற்கு மேல் ஒன்றும் செய்யாது.

ராஜசங்கீதன்

ராஜசங்கீதன்

அரசிதழில் வெளியான சேதி நிறைவேற்றப்படாது என அமைச்சர் சொல்வதெல்லாம் பச்சை பொய். அப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க வேண்டுமெனின் அந்த சேதி காவிரி பகிர்வு சேதியாக இருந்தால் மட்டும்தான் சாத்தியம். மற்றவை எல்லாமே அமலுக்கு வரும். அதிலும் தமிழக அரசு கேரள அரசோ, கர்நாடக அரசோ கூட இல்லை.

உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா வாங்கி இருக்கும் கடனும் வாங்கி கொண்டிருக்கும் கடனும் இந்தியாவின் இப்போதைய பொருளாதார லட்சணத்தில், பூமி அழியும் வரை தீராது. இன்னும் கடன் வாங்க வாங்க, கடன் கொடுப்பவன் வீட்டு நடுவில் வந்தமர்ந்த கதையாக, உலக வங்கி போடும் விதிகளை அரசு கேட்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறது. அதனாலேயே ரேஷன், கேஸ் மானியம் என எல்லாம் நிறுத்தப்படுகிறது. பணமதிப்பிழப்பு, GST, நெடுவாசல், நீட், கதிராமங்கலம் என மேலும் பிரச்சினைகள் கிளை பரப்புகிறது. இன்னும் அதிகமாக பன்னாட்டு மூலதனத்தின் கொடுக்குகள் நீளும். மக்களை பற்றி அரசுக்கு மயிரளவுக்கு கூட பொருட்டு கிடையாது.

ரேஷன் எவரும் வாங்குவதில்லை என்பதெல்லாம் கதைக்கு உதவாத கதை. ஒரு பேச்சுக்கே, ரேஷன் பொருட்களை எவரும் வாங்காமல், அவை கள்ள சந்தைக்கே பயன்படுகிறதென வைத்து கொள்வோம். அதை சரிசெய்ய மட்டுமே அரசு ரேஷனை நிறுத்துகிறது என மொண்ணையாகத்தான் நாம் நம்புகிறோமா? அந்த அளவுக்கு மக்கள் நலன் பேணும் அரசுதான் பீடத்தில் உள்ளதா? ஆம் எனில் எனக்கு சிரிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

“உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெருநிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டுப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருக்கிறது அல்லவா? ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்திருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா? அங்கே தான் அந்த நிறுவனங்களின் உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவற்றின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது அதற்கு காரணியாக இருக்கும் ‘உலகமயமாக்கல்’ என்னும் கோட்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது.”

இப்படி சொல்வது நான் அல்ல. ஏதோ ஒரு கம்யூனிஸ்ட்டும் அல்ல. ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர். உலக வங்கியின் பிரதிநிதியாக மூன்றாம் உலக நாடுகளில் அந்நாட்டு அரசுகள் மற்றும் முதலாளிகளின் துணையுடன் சுரண்டும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வேலை பார்த்தவர். பின்னாளில் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகத்தில் தன் அனுபவத்தை அவர் எழுதி, அதில் இடம்பெற்ற ஒரு பத்திதான் மேலே கூறப்பட்டிருப்பது.

இப்போது இந்தியாவில் நடப்பவற்றை யோசித்து பாருங்கள். இங்கு அறிமுகப்படுத்தும் மக்கள் விரோத திட்டங்கள் எல்லாமே வளர்ச்சி என்ற பெயரிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது. அதை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள். போராடுகிறவர்களுக்கு சிறை. லாபம் பன்னாட்டு முதலாளிகளுக்கு. எல்லாவற்றையும் மோடிக்கு கட்டளையிடுபவர்கள் ஜான் பெர்கின்ஸ் போன்றவர்களே.

பாஜகவுக்கு லாபம் என்ன?

பணம் முக்கிய லாபம் என்பது அமித்ஷாவின் சொத்து 300% அதிகரித்ததிலேயே தெரியும். அதைவிட மிக முக்கியமான லாபம், இந்தியாவை ஆர்எஸ்எஸ் நினைத்தபடி மாற்றிடலாம் என்பதுதான். இஸ்லாமியர்களை கொல்லலாம். தலித்துகளை கொல்லலாம். மதவாதத்தை திணிக்கலாம். வரலாற்றை மாற்றலாம். அரசியல் அமைப்பை திருத்தலாம். அதற்கு பன்னாடுகள், அதிகபட்சம் போனால் சின்னதாக கண்டனம் கொடுக்கும். அதற்கு மேல் ஒன்றும் செய்யாது.

இதையே கடாபியும் சதாமும் செய்தால் சர்வாதிகாரம் என்றோ மனித உரிமை மீறல் என்றோ சொல்லி நாட்டில் கலகத்தை ஏற்படுத்தி, ஆட்சியில் பொம்மை அரசை அமர்த்தி, அதன் வழி அந்த நாட்டின் எண்ணெயை, வளத்தை பன்னாடுகள் அபகரிக்கும். அவற்றையே சதாமும் கடாபியும் நேரடியாக கொடுத்திருந்தால், அவர் வளர்ச்சியின் நாயகனாகத்தானே சித்தரிக்கப்பட்டிருப்பார்? அதைத்தான் இங்கே மோடி செய்கிறார். ‘வளத்தை நீ சுரண்டிக்கோ, நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதே போல், நான் மக்களை கொல்வேன், நீ எதும் சொல்ல கூடாது’ என்ற பேக்கரி டீலிங்தான்.

மிஞ்சி இருப்பதெல்லாம் இவைதான். உள்நாட்டு கலவரங்கள், அவற்றை ஒடுக்க பன்னாடுகளின் உதவி, சர்வாதிகார ஆட்சி, ஆரியமய இந்தியா, பெருமளவு மக்களின் அழிவு, கடைசியில் ஒரு போர். அந்த போர், மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலானதாக இருக்கும். போருக்கு காரணங்களாக சுரண்டலும் அரச பயங்கரவாதமும் இருக்கும். அந்த போருக்கு பிறகு இந்தியா இருக்காது. நாம் சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்போம்.

ராஜசங்கீதன், ஊடகவியலாளர்.

4 கருத்துக்கள்

 1. // அந்த போர், மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலானதாக இருக்கும். போருக்கு காரணங்களாக சுரண்டலும் அரச பயங்கரவாதமும் இருக்கும். அந்த போருக்கு பிறகு இந்தியா இருக்காது. நாம் சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்போம்..//
  ——————-

  அருமையிலும் அருமை.

  “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன. இரண்டிலொன்று பார்த்து விடலாம்” எனும் முடிவுக்கு “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” விடுதலை வீரர்கள் வந்துவிட்டனர். இது பார்ப்பனீயத்துக்கெதிரான எங்களுடைய சுதந்திர போர். கவ்ன்ட் டவ்ன் ஆரம்பித்து விட்டது.

  Like

 2. பாரத்மாதாவை காப்பாற்ற, சீனா பாக்கிஸ்தானுடன் ஒரு இறுதிப் போர் அவசியம் — ஆர்.எஸ்.எஸ் திங்டாக் ஏகமனதாக எடுத்த அதிர்ச்சியான முடிவு:

  பாஜக’வின் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் ஆர்.எஸ்.எஸ்’ஸின் “சிந்தன் பைடக்” என சொல்லப்படும் உயர்மட்ட சிந்தனைக்குழு எனும் திங்டாங்’கால் முடிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் மோடியின் தலைமையில் நடந்த இந்த சிந்தன் பைடக் கூட்டத்தில், பாரத்மாதாவின் எதிர்காலம் என்ன எனும் தலைப்பில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு:

  “பாரத்மாதா ஒரு நோயாளி எனும் கட்டத்தை தாண்டி லைப் சப்போர்ட்டுக்கு சென்று விட்டாள். இவளை இனி உலகின் எந்த தலை சிறந்த டாக்டராலும் காப்பாற்ற முடியாது எனும் கசப்பான உண்மையை நாம் விழுங்குவதை விட்டால் வேறு வழியில்லை. இனி பாரத்மாதாவை எப்படி பிழைக்க வைப்பது எனும் கட்டத்தை தாண்டி, நாம் எப்படி பிழைப்பது எனும் நிலைக்கு செல்வதே அறிவுடைமை. மூழ்கும் கப்பலை காப்பாற்ற, சில விலை மதிப்பற்ற பெரிய பாரங்களை கடலில் வீச வேண்டும். காஷ்மீர், காலிஸ்தான், மணிப்பூர், அருணாச்சலம், நாகலாந்து, திராவிட நாடு போன்ற பாரங்களை கைவிடும் கட்டாயம் வந்துவிட்டது. இந்தியா சிதறினால், நமக்கு (பாப்பானுக்கும் பாரத்மாதாவுக்கும்) தேசம் கிடையாது. நம்மை கொன்று விடுவர். இந்த சூழலை தவிர்க்க, சீனா பாக்கிஸ்தானுடன் ஒரு இறுதிப்போர் அவசியம். இந்த போர் வெடிக்கும் போது, சீனா பாக்கிஸ்தான் மீது பழி போட்டு இந்தியாவின் ஜனத்தொகையில் பாதியை தியாகம் செய்வதை விட்டால், வேறு வழியே கிடையாது”.

  அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” போன்ற 15க்கும் மேலான விடுதலை இயக்கங்கள் காத்திருக்கின்றன.

  80 சதவீத ராணுவமும் போலீஸ்காரனும் இந்த விடுதலை இயக்கங்களின் ரத்தபந்த உறவினன். அவனவனுக்கு தேசம் கிடைப்பதால், எவனும் சுண்டு விரலைக்கூட அசைக்கமாட்டான். இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும் அபாயம் உருவாகிறது. இதனை திசை திருப்ப, சீனா பாக்கிஸ்தானுடன் ஒரு மிகப்பெரிய எல்லைப்போரை கட்டவிழ்த்து விட்டு, கும்பலில் கோயிந்தா போட்டு, இந்தியாவின் ஜனத்தொகையை பாதியாக குறைக்க மோடி அரசாங்கம் முடிவு செய்து விட்டது.

  Like

 3. ஈராக், லிபியாவுக்கு அடுத்தபடியாக அரபு நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அமெரிக்கா முடிவு செய்து விட்டது. கதாருக்கும் சவூதிக்கும் மிகப்பெரிய போர் வெடிக்கப் போகிறது… கதாரில் வாழும் 7 லட்சம் இந்தியரை இந்தியாவுக்கு திரும்பி செல்ல இந்திய தூதரகம் அட்வைஸ் செய்துள்ளதாக மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது.

  இந்த போர் வெடித்தால், அரபு நாடுகளில் வாழும் ஒன்றரைக் கோடி இந்தியர் பாதிக்கப்படுவர். லட்சக்கணக்கான இந்தியர் வேலை இழப்பர். இதனால் இந்தியாவில் உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். மோடி, அமீத் ஷா போன்ற பெரிய தலைகள் உருளும். ரத்த ஆறு ஓடும். சோவியத் போல் இந்தியா சிதறும். பல புதிய தேசங்கள் பிறக்கும்.

  அரேபியா, இந்தியாவின் மேப்பை மாற்ற அமெரிக்கா முடிவு செய்து விட்டது. விஸ்வரூமெடுக்கும் வேலையில்லா திண்டாட்டம், பெருகி வரும் ஜனத்தொகை, சீர் குலையும் உலக பொருளாதாரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகியவற்றுக்கான பதிலடியாக இந்த போர் வெடிக்கும்.

  எங்களுக்காக போர் செய்யும் இஸ்லாமியருக்கு குடியுரிமையும் வேலையும் வழங்குவோமென அரபு நாடுகள் அறிவிக்கும். லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் போராளிகளாக மாறுவர். இவர்கள் காஷ்மீர், காலிஸ்தான், திராவிட நாடு விடுதலை வீரர்களுக்கு ஆயதம் சப்ளை செய்வர். ரத்த ஆறு ஓடும்.

  வேலையிழந்த லட்சக்கணக்கான இந்துக்களால் உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். சோவியத் போல் இந்தியா சிதறும். பல புதிய தேசங்கள் பிறக்கும்.

  எழுதி வைத்துக் கொள். கதார் மீது தாக்குதல் நடந்தால், 6 மாதங்களுக்குள் இந்தியா சிதறிவிடும்.

  Like

 4. இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க “திராவிட நாட்டை உருவாக்குதே சாலச்சிறந்தது” ….. சவூதி முடிவு:

  நான் எழுதிய “இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரபித்தேவ்டியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு” எனும் கட்டுரை, சவூதி அவ்காபின் கவனத்துக்கு தமிழ் இஸ்லாமிய ஜமாத்துக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவ்காப் இதனை மிக சீரியாஸாக எடுத்துக்கொண்டுள்ளது.

  “அரபு நாடுகளில் 80 சதவீதத்துக்கு மேல் இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்கின்றனர். எந்த நேரத்திலும், இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து 72 மணி நேரத்தில் இவர்களால் இந்து ராஷ்டிரத்தை உருவாக்கமுடியும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை” என அவ்காப் இஸ்லாமிய அறிஞர்கள் ஏகமனதாக முடிவுசெய்து சவூதி மன்னருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், வந்தால் எப்படி கையாள்வது போன்ற விஷயங்கள் பல நாட்கள் விவாதிக்கப்பட்டன. அந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்:

  அரபு நாடுகளின் பொருளாதார பாதுகாப்புக்கு “லட்சக்கணக்கான இந்து அடிமைகள்” அவசியம். இந்துக்களை நிரந்தர அடிமைகளாக வைக்க இந்தியாவை உடைப்பதே சாலச்சிறந்தது.

  “இந்தியாவை உடைக்க பொன்னான வாய்ப்பு தமிழகத்தில் இருக்கிறது. பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், தலித் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு பில்லியன் கணக்கில் பொருளாதார உதவியும் ஆயுத உதவியும் செய்து திராவிட நாட்டை உருவாக்காவிட்டால் நம்மால் பிழைக்க முடியாது. அவன் அரேபியாவில் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கு முன்னால் நாம் இந்தியாவை உடைத்து இஸ்லாமிஸ்தானை உருவாக்க வேண்டும்” என அரபு தலைவர்களால் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: