இந்திய பொருளாதாரம்

நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்?

தாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர். 

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

மோடியின் இரண்டாம் ஆண்டு ஆட்சிகாலத்தில், 65 வருட பழமையான திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டது.அந்த இடத்தில் நிதி ஆயோக் எனும் புதிய பொருளாதார நிறுவனக் குழு அமைக்கப்பட்டது.இந்தியாவை மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட இக்குழுவிற்கு அரவிந்த் பனகாரியாவை துணை தலைவராக நியமித்தார் மோடி. அரவிந்த் பனகாரியா ராஜஸ்தான் மாநிலத்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பயின்றவர், ப்ரின்ஸ்டைன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நிதியகம் போன்ற உலக நிதி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். உலகமயக் கொள்கையே வறுமையை ஒழிக்கும் என்பது இவரது பொருளாதார நிலைப்பாடு. தனியார்மய தாராளமய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்தியாவில் தீவிரப்படுத்துவது இவரது அனைத்து நூல்களின் சாரமாக உள்ளது.

ஆக,தீவிர உலகமய ஆதரவாளரை, நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை முவைக்கிற அரவிந்த் பனகாரியாவை நிதி ஆயோக் எனும் குழுவை உருவாக்கி அதன் தலைவராக்குகிறார் மோடி. டீம் இந்தியா எனும் பதாகையின் கீழ், அனைத்து மாநில முதல்வரும் நிதி ஆயோக்கின் முக்கிய தளபதிகள் என பெரிதாக விளம்பரப் படுத்தப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிதி ஆயோக்கின் ஆலோசனைகள் மூன்றாண்டு வரைவுத் திட்டம் என வெளியிடப்பட்டன.

தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்கிற தொழிலாளர் நலச் சட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு, முதலீடுகளுக்கு தடையாக உள்ளது என தொழிலாளர்கள் சட்டத்தை நெகிழ்வுத் தன்மையுடையதாக மாற்றக் கோருவது இவரது முக்கிய கோட்பாட்டுவாதம்.

ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் தொழிலாளர் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதிற்கு இவரது குழவின் ஆலோசனைகள் செல்வாக்கு செலுத்தியது எனலாம். அதேபோல மரபணு மாற்றப்பட்ட கடுகை சந்தைக்கு கொண்டுவருவதற்கு இக்குழு அழுத்தம் கொடுத்தது எனலாம். ஏனெனில் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு மரபணு மாற்ற பயிர்ப் பயன்பாடு அவசியம் என வாதிடுபவர் பனகாரியா. இதுபோலவே, அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவது, சட்டங்களை சீர்திருத்துவது, வரி வருவையாய் பெருக்குவது என்ற மோடி அரசிற்கு பொருளாதார சீர்திருத்தத்தின் பின்னாலுள்ள முக்கிய சக்தியாக விளங்கியவர்.

பெரும்பான்மை பலத்துடன் நினைத்ததை சாதிக்கிற வல்லமையுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஏகபோக அதிகார மையமாக உருவாகியுள்ள பாஜகாவின் ஆட்சியில், மோடியின் செல்லப் பிள்ளையாக,மோடியால் நியமிக்கப்பட்ட பொருளாதார அறிஞர் திடீரென தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது முதலில் சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்தது. அதேநேரத்தில் ரகுராம் ராஜன் விவகாரத்தை நாம் மீண்டும் நினைவு படுத்தி பார்தோமென்றால், இது ரகுராம் ராஜன் வெளியேற்றத்தின் மறுபதிப்பே எனத் தெளிவாகிறது.

உலகமய பொருளாதார ஆதரவு நிலையில், ரகுராம் ராஜன் நிலைப்பாடும் அரவிந்த் பனகரியா நிலைப்பாடும் அக்கம் பக்கமாக ஒன்றாகவே உள்ளது. இருவரும் மேற்குலக உலக மய கொள்கை விவகாரத்தில் கரை தேர்ந்தவர்கள். பல ஆய்வுக் கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளவர்கள். அரவிந்தை விட ராஜனுக்கு உலக பொருளாதார வல்லுனர்கள், வங்கி தலைவர்கள் இடத்தில் மிகப்பெரிய செல்வாக்கும் உண்டு. ஆக, இருவரும் ஒருவர் பின் ஒருவராக நாட்டின் பொருளாதார விவகாரத்தில் தலையீடு செய்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அல்லது தாமாக வெளியேற அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்.

ராஜனைத் தொடர்ந்து, அரவிந்தும் பொருளாதார பேராசிரியர் பணியை தொடரப் போவதாக அறிவித்துள்ளார். இவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது. இந்நிலையில் அரவிந்தின் வெளியேற்றத்திற்கு பின்னாலுள்ள அரசியல் காரணம்தான் என்ன?

காங்கிரஸ் பாஜக என்ற இரு முதலாளியக் கட்சிகளில், பாஜகவின் உள்முரண்பாடு அதன் ஆர் எஸ் எஸ் கொள்கை அமலாக்கத்தின் காரணமாக அவ்வப்போது தீவிரமாக வெளிப்படும். ஆர் எஸ் எஸ் எனும் அரை ரகசிய இந்துத்துவ அமைப்பின் அரசியல் முன்னணியாக உள்ள பாஜக கட்சியானது, எதார்த்தத்தில் முதலாளிய நலன் பேணுகிற கட்சியாக இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால், இந்திய முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியில் எந்தக் கட்சிக்கும் இடமில்லை. அதேவேளையில், ஆர் எஸ் எஸ் அமைப்பு அடிப்படையில் பழமைவாத சுதேசி கருத்தியலில் ஊறித் திளைக்கிற அமைப்பாகும்.

தீவிர உலகமய நடைமுறைக்கு எதிராக, பொருளாதார பண்பாட்டு வேலிகளை அமைத்துக் கொள்பவை. அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் வந்தபின்னர், பன்னாட்டு முதலாளிகளின் உலகமய வலைப்பின்னலில் நீங்கள் அங்கம் வகித்தே ஆக வேண்டிய நெருக்கடி. ஆக, இது பாஜகவின் ஆட்சியாளருக்கும் ஆர் எஸ் எஸ் இற்குமன உள்முரண்பாட்டை விளைவிக்கிறது. மரபீனு மாற்றப் பயிற்பயன் பாடு மற்றும் மருத்துவ துறையில் விலை நிர்ணய அமைப்பை கலைப்பது என்ற நிதி ஆயோக்கின் முடிவிற்கும் ஆர் எஸ் எஸ்சின் துணை அமைப்பான ஸ்வதேசி சகரன் மஞ்ச(Swadeshi Jagaran Manch)கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அந்நிய நாட்டின் நலனுக்காக இக்குழு செயல்படுகிறது என கடும் கண்டனத்தை தெரிவித்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிதி ஆயோக்கின் இரண்டு ஆண்டு செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கை ஸ்வதேசி சகரன் மஞ் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் மீது கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு பாஜகவின் தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இந்நிலையில், தன்னை காப்பதற்கு, மோடி வருவார், ஆதரவாக நிற்பார் என அரவிந்த் பனகாரியா எதிர்பார்த்திருந்த நேரத்தில் மோடியின் மௌனம் அரவிந்தை சங்கடப் படுத்தியது. ராஜன் விவகாரத்தில்,சுப்ரமணிய சாமி கிளப்பிய பிரச்சனையின் போது மோடி காத்த அமைதியை அறியாதவரல்ல அரவிந்த். பார்த்தார், பதவியே வேண்டாம் என எழுதிக் கொடுத்து கிளம்பிவிட்டார்.

உலகப் பொருளாதாரம் பெரும் தேக்க நிலையை எதிர்கொண்டு வருகிற நிலையில் ரகுராம் ராஜன் போன்ற முதலாளித்துவ பொருளாதார அறிவு ஜீவிகள், இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு என்ன செய்யவதென்று தத்தளித்து நிற்கின்றனர். பொருளாதார சொல்லாடலில் சொல்வதென்றால் “மூலதனத்தின் மறு உற்பத்தி” செயல்பாட்டை எவ்வாறு உறுதிப் படுத்துவது என்ற கேள்வி இன்று தீவிரமாகியுள்ளது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் தனது மூலதன மறு உற்பத்தி களனாக ஆசிய ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பயன்படுத்தியது.

தற்போது இந்த சுற்று முடிவுக்கு வருகிறது. கம்யூனிச இயக்கங்கள், இந்த நெருக்கடிகளை பயன்படுத்த வலுவற்று நிற்கின்றன. இந்த நெருக்கடியை வலது பாபுலிச அரசியல் சக்திகள் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றன. 1930 களில் கிரேட் டிப்ரசன் என்ற பெரும் பொருளாதார மந்தக் கட்டத்தில் தான் பாசிசமும் நாசிசம் வேர் பிடித்து வளர்ந்தன.

தாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். ராஜனும் அரவிந்தும் அதில் விதி விலக்கல்ல. 1930 கள் போல தற்போதைய சூழல் உருவாகியுள்ளதை முன் உணர்ந்துள்ள “தாராளப் பொருளாதாரவாதிகள் “வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர். அந்தோ பரிதாபம், இந்திய பொருளாதாரத்தை பெரும் நெருக்கடியில் இழுத்து விட்டுவிட்டு ஓடுகின்றனர். இந்தியப் பொருளாதாரம் மரணப் படுக்கைக்கு செல்வதை காண்பதற்கு முன்பாகவே ஓடுகின்றனர். தங்களின் கொள்கைகளே தமக்கு எதிராக எவ்வாறு திரும்பும் என கண்டுணர்வதற்கு முன்பாகவே ஓடுகின்றனர்.

அடுத்த சில ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம்,பண வீக்கம்,வங்கி திவால் நிலை என நாடே அல்லோலப் படுகிற நிலையை காண்பதற்கு முன்பாகவே ஓடுகின்றனர்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.
Advertisements

2 கருத்துக்கள்

 1. // அடுத்த சில ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம்,பண வீக்கம்,வங்கி திவால் நிலை என நாடே அல்லோலப் படுகிற நிலையை காண்பதற்கு முன்பாகவே ஓடுகின்றனர்./
  ————-

  இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பயங்கரமாக விஸ்வரூபமெடுப்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தியாவில் பிழைக்கமுடியாத நிலை பார்ப்பனருக்கும் வந்துவிட்டது கண்கூடு. ஐ,ஐ,டியில் கானல் நீரான கனவுகளால், பார்ப்பனர் தற்கொலை பயங்கரமாக பரவுகிறது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு என இந்திய அரசாங்கம் மூடி மறைக்கிறது.

  பிழைக்க வழியில்லாவிட்டால், எந்த சூப்பர் பவரும் தாக்குபிடிக்க முடியாது என்பதை சோவியத் யூனியன் பறைசாற்றுகிறது. ஒரு மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடித்து சோவியத் போல் இந்தியா சிதறும் சூழ்நிலை உருவாகி வருவது பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு நன்றாக தெரியும்.

  ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 2 கோடி இந்தியர், பி.இ, பி.டெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்காம், டிப்ளமா, பி.எச்.டி, மருத்துவம் போன்ற துறைகளில் பட்டமும் சான்றிதழும் பெற்று வெளி வருகின்றனர். உலக வேலைகள் அத்தனையும் தந்தாலும் 5 லட்சத்துக்கு மேல் தேறாது.

  130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கோரப்பிடியில் மக்களுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகள் எரிமலை” சிதறடிக்கும்.

  Like

 2. கீரை விற்கும் ஆயா, இட்லி விற்கும் பாட்டி, முறுக்கு விற்கும் தாத்தா, பொரியுருண்டை விற்கும் சித்தப்பா, பால் ஐஸ் விற்கும் பாயெல்லாம் இனி அம்பானியின் கிடங்கில் போய் கடனுக்கு வாங்கி விற்று அன்றாட வட்டியை கட்ட வேண்டும். அவர்களுக்கு கிரடிட் கார்டும் மிஷினும் கொடுத்து விடுவான். இவர்களை டிஜிட்டல் எகானமியில் கொண்டு வந்துவிட்டால், எந்த கொம்பனாலும் தப்பிக்க முடியாது. அனைவரும் வந்தே ஆக வேண்டும். வர மறுத்தால், பட்டினி கிடந்து சாக வேண்டும்.

  எந்த ஜென்மத்திலும் இனி 80 சதவீத நசுக்கப்பட்ட மக்கள் வறுமைக் கோட்டை உடைத்து வெளியேறவே முடியாது. சிறிது அதிகம் சம்பாதித்தாலும், உச்ச வரம்புக்கு மீறிய வருமானம் என சொல்லி முடக்கி விடுவான்.

  இந்தியாவை அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைத்து, அங்கே தன்னுடைய ப்ராஹ்மணஸ்தானில் உட்கார்ந்து ரிமோட் கண்ட்ரோல் செய்வான். யாராவது எதிர்த்தால், ப்ளாக் வாட்டர் போன்ற அமெரிக்க இஸ்ரேலிய கூலிப்படைகளை வைத்து போட் தள்ளிவிடுவான்.

  பொறுத்தது போதும். பொங்கியெழு. ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: