கருத்து

மோடி அரசின் கண்ணில் படாத கூவத்தூர் பேரம்!

கூவத்தூரில் தமிழக சட்டசபையை ஏலம் விட்டதை நாடே பார்த்தது. பத்திரிக்கைகள் எழுதின. ஊடகங்கள் 'லைவ்' காட்டின. ஒரு ச.ம.உறுப்பினரே பணம் கொடுக்கப்பட்டதை சொல்லி, அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியது. இதுவும் வருமான வரித்துறை கண்ணில் படவில்லை.

எஸ். எஸ். சிவசங்கர்

எஸ். எஸ். சிவசங்கர்

குஜராத் என்பது பாரதிய ஜனதாவின் கோட்டை என்பது அறிந்த உண்மையாகி விட்டது. ஐந்தாவது முறையாக அங்கே பா.ஜ.க ஆட்சி தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது.

அதில் தற்போதைய இந்திய பிரதம மந்திரி மோடி மூன்று முறை முதல்வராக இருந்தவர். அப்போது தான் குஜராத் பா.ஜ.கவின் கோட்டையாக்கப் பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித் ஷா.

மோடி – அமித்ஷா ஜோடி அங்கே காட்டிய வேகத்தை தேசிய அரசியலிலும் காட்ட விரும்பினார்கள். மெல்ல மோடி டெல்லியை நோக்கி நகர்ந்தார். அங்கே தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டவுடன், அமித்ஷாவையும் தேசிய அரசியலுக்கு இழுத்துக் கொண்டார்.

தங்கள் மேஜிக்கை தேசிய அரசியலிலும் வெற்றிப் பெற வைத்தார்கள். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றியை தக்க வைத்தது. இப்போது இந்த ஜோடி தான் இந்திய அரசியலின் அதிக அதிகாரம் பொருந்திய நபர்கள்.

அந்த அதிகாரத்தின் மூலமாக இன்னும் பல வெற்றிகளை மறைமுகமாகவும் குவித்தார்கள். கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. ஆனால், 13 இடங்கள் பிடித்த பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது, மத்திய அரசின் அதிகார பலத்தால்.

மணிப்பூரிலும் காங்கிரஸ் 28 இடங்களோடு முன்னால் இருந்தது. 21 எம்.எல்.ஏக்களோடு இருந்த பா.ஜ.க மோடியின் அதிகார பலத்தால், அமித்ஷாவின் இயக்கத்தில் ஆட்சியை பிடித்தது.

போன வாரத்தில் பிகாரில் நடந்தது நினைவுப்படுத்த வேண்டியதில்லை. ஓர் இரவில் ஆட்சி மாற்றம், பி.ஜே.பி கையில் லகான். அதிக இடங்கள் கொண்ட லாலு, குறைவான எம்.எல்.ஏக்களோடு இருந்த நிதிஷ்குமாரை முதல்வராக்கினார். அந்த நிதிஷை இழுத்து, பா.ஜ.க ஆதரவு கொடுத்து, முதல்வராக்கியது. பா.ஜ.கவிற்கு துணை முதல்வர். இனி அதிகாரம் பா.ஜ.கவிடம் தான், நிதிஷ்குமரால் அசைய முடியாது.

இந்த தொடர் கைப்பற்றல்கள், அதிகாரப் பசி கொண்ட மிருகமாக மாற்றி விட்டது பாரதிய ஜனதா கட்சியை, அந்த ஜோடியை. இன்னும், இன்னும் வேட்டையாட வேண்டுமென ரத்தவெறி வந்து விட்டது. இந்த நேரத்தில் தான் அடுத்த தேர்தல் அறிவிப்பு.

பாராளுமன்றத்தின் ஓர் அவையான ராஜ்யசபாவுக்கான தேர்தல் குஜராத் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடமும் வெற்றி பெற வாய்ப்பு.

ஆனால் பா.ஜ.க மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாவது வேட்பாளர் வெற்றிக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதற்கான ஆட்டம் ஆரம்பித்தது.

முதலில் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைத்த இடைவெளியில் காங்கிரஸை பலவீனப்படுத்தும் வேலைகள் நடந்தன. காங்கிரஸ் ஏற்கனவே எழ முடியாத நிலை தான் குஜராத்தில் .

மோடியால் பா.ஜ.கவிலிருந்து விரட்டப்பட்ட தலைவர் சங்கர் சிங் வகேலா. தனி செல்வாக்கு மிகுந்த நபர். வெளியில் வந்தவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

அவரை இப்போது காங்கிரஸிலிருந்து வெளியே இழுத்தார்கள். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்பட்டனர். ஆறு பேர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமித்ஷா வலையை வீச ஆரம்பித்தார். இருக்கும் எம்.எல்.ஏக்களை காப்பாற்றிக் கொள்ள, எல்லோரையும் கர்நாடகாவிற்கு விமானம் ஏற்றினார்கள். ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டார்கள்.

அடுத்த அதிகார அம்பு வீசப்பட்டது. “இந்த ராஜ்யசபா தேர்தலில் ‘நோட்டா’வுக்கு ஓட்டு போடலாம்”, என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போடும் தேர்தலில் ‘நோட்டா’ தேவை இல்லை. ஆனால் அதிகாரம் திணித்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்று மிருகம் பார்த்தது. கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் எம்.எல்.ஏக்கள், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் பாதுகாப்பில் உள்ளனர். சிவகுமார் கழுத்தை குறி வைத்துள்ளது மிருகம்.

எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் பணம் நடமாடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததாம். உடனே ரெய்டு நடந்தது. 10 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிடப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது, அதே எம்.எல்.ஏக்கள் ” எங்களுக்கு பா.ஜ.க தரப்பில் கோடி கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசினார்கள்” என வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். அது வருமான வரித்துறை கண்ணில் படவில்லை.

கூவத்தூரில் தமிழக சட்டசபையை ஏலம் விட்டதை நாடே பார்த்தது. பத்திரிக்கைகள் எழுதின. ஊடகங்கள் ‘லைவ்’ காட்டின. ஒரு ச.ம.உறுப்பினரே பணம் கொடுக்கப்பட்டதை சொல்லி, அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியது. இதுவும் வருமான வரித்துறை கண்ணில் படவில்லை. இதை இன்று சுட்டிக்காட்டி தமிழக எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் கண்டித்தும் உரைக்கவில்லை மத்திய அரசுக்கு.

அந்த ஒற்றை ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற தேர்தல் தேதி மாற்றம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு வலைவீச்சு, நோட்டா ஓட்டு, வருமான வரித்துறை ரெய்டு என அத்தனை அதிகாரத்தையும் பிரயோகித்துப் பார்க்கிறார்கள்.

அந்த இடத்தில் போட்டியிடுகிறவர் சோனியா அவர்களின் செயலாளர் அகமது பட்டேல். அவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் தான். புதிதாக பதவிக்கு வந்து தலைவலி கொடுக்கப் போகிறவர் அல்ல.

ஆனாலும் அந்த இடத்தை கைப்பற்ற இவ்வளவு பிராயத்தனங்கள்.

காரணம், அதிகார வெறி.

இதுவும் நல்லது தான். வெறி முற்றினால் எல்லோரையும் தாக்கும், உடன் இருப்பவர்களையும். அப்போது ஓர் முடிவு வரும். இது இயற்கை நியதி.

இந்தத் தேர்தலில் குறி தப்பாமால் வெற்றி பெறலாம். எதிர்கட்சிகள் வீழ்த்தப்படலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத எதிரி உருவாவான். தொடர் வெற்றியில் ஓர் சின்ன சறுக்கல் கூட , அதலபாதாளத்தில் தள்ளும்.

சின்ன அம்பு கூட வேட்டை வெறி மிருகத்தை வீழ்த்தும் !

எஸ். எஸ். சிவசங்கரன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்; எழுத்தாளர்.

Advertisements

2 கருத்துக்கள்

 1. // இந்தத் தேர்தலில் குறி தப்பாமால் வெற்றி பெறலாம். எதிர்கட்சிகள் வீழ்த்தப்படலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத எதிரி உருவாவான். தொடர் வெற்றியில் ஓர் சின்ன சறுக்கல் கூட , அதலபாதாளத்தில் தள்ளும்.
  சின்ன அம்பு கூட வேட்டை வெறி மிருகத்தை வீழ்த்தும் ! /
  ——————–

  பாப்பான் எனும் எதிரி இருந்தால்தான் இஸ்லாம் வலுப்பெறும்:

  1400 வருடங்களுக்கு முன்பு அண்ணல் நபியை(ஸல்) போருக்கு வர உசுப்பினான் பாப்பான் அபுஜஹல். பத்ருப்போர் களத்தில், பெருமானாரின்(ஸல்) படையில் மொத்தம் முன்னூற்று முப்பத்து மூன்று முசல்மான்களே இருந்தனர். அபுஜஹலின் படையில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களூம் ஒட்டகங்களூம் குதிரைகளும் இருந்தன. “இத்துடன் இஸ்லாம் அழிந்தது.. ஹஹ்ஹஹா..” என எக்களாமிட்டான் அபுஜஹல். ஆனால், பெருமானாரின் சிறிய படைக்கு அல்லாஹ்வின் அருளால் வெற்றி கிடைத்தது.

  பாப்பானின் அட்டகாசம், பாக்கிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது. பத்து வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு மனப்பால் குடித்தார். ஆனால் இந்த முட்டாள் பார்ப்பானின் மனக்கோட்டையை சிதறடித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.

  பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே பாரத்மாதா தேவ்டியாமுண்டைக்கு கதிகலங்கி விடுகிறது.

  “பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதற்குத்தான் திருக்குரான். அதற்கும் உலக வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என முஸ்லிம்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் முஸ்லிம் படுகொலை, 9/11 இரட்டைக்கோபுர இடிப்பு ஆகியவை இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டதென்றால் மிகையாகாது. இன்று உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. உலகின் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறது. இன்று பிறந்த குழந்தைக்குக்கூட அல்லாஹ், முஹம்மத், குரான் எனும் வார்த்தைகள் அத்துபடியாகி விட்டது.
  ——————–

  இன்று மீண்டும் முஸ்லிம்களை போருக்கு அழைக்கிறாள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா. அல்லாஹ்வின் துணையோடு, அபுஜஹலை பத்ருப்போரில் சந்திக்க முஸ்லிம்கள் தயாரகிவிட்டனர். அல்லாஹு அக்பர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 2. 2019 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவும் பாஜகவும் கைகோர்க்கும். கமலும் ரஜினியும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி அமைப்பர். அரசியலில் குதிப்பர். இந்த இரண்டு பார்ப்பனீய பெரிய கட்சிகளுக்கு எதிராக திமுக, பெரியாரிஸ்ட், இஸ்லாமியர், காங்கிரஸ் ஒன்று சேர்வர். மிக வலிமையான போட்டி நடக்கும். அதிமுக வாக்குவங்கி கமல் ரஜினி கூட்டணிக்கு ஓடும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக கமல் வர மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.