இரங்கல்

அஞ்சலி: கவிஞர்; விமர்சகர் ஹெச்.ஜி ரசூல்

ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும் தமிழ் கவிதை மரபிற்கு நவீன இஸ்லாமிய சிந்தனையாளராகவும் அவரது பங்களிப்புகள் ஆழமானவை.

கவிஞர் மனுஷ்யபுத்திரன்:

கவிஞரும் விமர்சகருமான இன்று ஹெச்.ஜி ரசூல் மரணமடைந்தார். அவருக்கு முகநூலில் பிரபலங்கள் எழுதிய அஞ்சலி குறிப்பு..

தமிழின் மிக முக்கிமான கவிஞரும் இஸ்லாமிய நவீன விமர்சகருமான ஹெச்.ஜி ரசூல் இன்று மாலை காலமானார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை சற்று முன் ஹெச். பீர்முகமதிடமிருந்து கேட்டு மனம் கலங்கிவிட்டது. பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர் ரசூல். உயிர்மையில் வெளிவந்த அவரது ஒரு கட்டுரைக்காக ஜமாத்தினால் அவர் ஊர்விலக்கம் செய்யப்பட்டு தமிழ்நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்து வசித்தார். ‘ ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை?’ என்று அவர் கவிதையில் கேட்ட கேள்விக்காக கடும் மிரட்டலுக்கு ஆட்பட்டார். ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும் தமிழ் கவிதை மரபிற்கு நவீன இஸ்லாமிய சிந்தனையாளராகவும் அவரது பங்களிப்புகள் ஆழமானவை.

திருநெல்வேலியிலில் நான் படித்துக்கொண்டிருந்தபோது எனது இருப்பிடத்திற்கு வெகு அருகாமையில் அவரது அலுவலகம் இருந்தது. அடிக்கடி சந்தித்து பேசினோம். ஒருமுறை திற்பரப்பு அருவிக்கு நானும் அவரும் சென்றபோது நான் துணிகளை களைந்து அருவியில் இறங்கிவிட்டேன். ரசூல் கூச்சப்பட்டுக்கொண்டு வெளியிலேயே நின்றார். ‘ உடம்பக் காட்ட கூச்சப்பட்டா நீ என்னய்யா கவிஞர்? ‘ என்று தண்ணீருக்குள் இருந்து நான் கத்தியபோது அவர் முகம் நாணத்தால் சிவந்தது. ரசூல் இன்று உடலாகிவிட்டார். நீண்டகால நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன். எனக்கு ஆவேசமாக பத்து மைல் நடக்க வேண்டும் போல இருக்கிறது..

என்ன எழவு வாழ்க்கைடா இது?

பா. ஜீவசுந்தரி: 

தோழர், கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் காற்றில் கரைந்து போனார்.

அன்புசெல்வம்:
சமூக மாற்றத்தின் முன் மொழிதலில் சளைக்காமல் இயங்கிய மனம் கவர்ந்த கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!
சுகிர்தராணி:
அன்பு நண்பர் ஹெச் ஜி ரசூல் சற்றுமுன் காலமானார்… உன் புன்னகையையும் அன்பையும் எப்படி மறவேன்..?
நந்தகுமாரன்:
கவிஞர் எச்.ஜி.ரசூலின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்லாமிய மத கோட்பாடுகளின் சில அம்சங்களை கவிதை நடையில் கேள்வி எழுப்பி தோலுரித்துக் காட்டினவர். இதற்காகவே அவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பத்வா விதிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டார். அப்படிப்பட்ட மாபெரும் கவிஞனுக்கு இதய அஞ்சலிகள்.

நியாஸ் அகமது:

பழமைகளுடன் போர் தொடுத்த கவிஞர்
ஹெச்.ஜி. ரசூல் காலமானார்!

யாழன் ஆதி:

அமைதியானப் புன்னகையில் எப்போதும்
கலகம் செய்யும்
கவிதந்த ரசூலே
யாது செய்தாய்
என் செய்வேன் யான்?

3 கருத்துக்கள்

 1. // ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை?’ என்று அவர் கவிதையில் கேட்ட கேள்விக்காக கடும் மிரட்டலுக்கு ஆட்பட்டார். //
  ————————

  தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென பெருமானார்(ஸல்) அறிவித்தார். நபியின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென எந்த நபியும் சொல்லவில்லை.

  நபியை பெற்றெடுத்து, சீராட்டி பாராட்டி வளர்ப்பது பெண்ணின் (தாயின்) கடமை.

  Like

 2. கேள்வி கேட்பது கூமுட்டைக்கு எளிது. ஆண் ஏன் பிள்ளை பெறுவதில்லை, சூரியன் ஏன் மேற்கில் உதிப்பதில்லை என எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதிலும் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய கூமுட்டை கிடைத்துவிட்டால், காபிர்களுக்கு கொண்டாட்டாம்தான்…

  Like

 3. // பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர் ரசூல். //
  ————————-

  ஒரு மசுரும் கிடையாது. இவன் வாழ்நாள் முழுதும் எழுதிய கவிதைகள், நான் எழுதிய ஒரு பக்க கட்டுரைக்கு ஈடாகுமா?.

  “அநீதிக்கெதிராக போராடாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

  ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ’னு சொல்லும் நான், அரபித் தேவ்டியாமவனை உதைத்து இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு’னு எழுதி பார்ப்பன அறிவுஜீவிகளை பிரமிக்க வைத்துள்ளேன். ஆம்.. நீதி என்றால் அப்பாவி இந்து சகோதரர்களுக்காகவும் ஜிஹாத் செய்ய வேண்டும். சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்… இதுதான் திருக்குரானின் அடிப்படை.

  “அரபித்தேவ்டியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு” எனும் கட்டுரையை மீண்டும் பொறுமையாக படி. எனக்கு மேல் இந்த கூமுட்டை என்ன கிழித்தான் என்பதை சொல்.

  Like

முஹம்மத் அலி ஜின்னா க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: