சமூக ஊடகம்

#stand_with_udayachandran_ias : ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் எனும் பேராயுதம்!

தங்கள் மீதான துறை ரீதியில் நடவடிக்கை வருவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளிக் கல்வித் துறையின் நன்மை ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் நேரடியாகக் களமிறங்கியிருப்பது வேற லெவல் கெத்து.

சரா சுப்ரமணியம்

சரா சுப்ரமணியம்

‘உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். துறை மாற்றம் செய்யப்படலாம்’ என்ற நம்பத்தகுந்த தகவல் பரவியதும், ஃபேஸ்புக்கில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் #stand_with_udayachandran_ias முதலான ஹேஷ்டேகுகள் கொண்டு கருத்துகளைக் குவித்து வருகின்றனர். அதை ஆற்றாமையின் வெளிப்பாடு என்கிறார் சிறார் இலக்கிய எழுத்தாளர் உமாநாத் செல்வன். பள்ளி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பாடமெடுத்து வழிகாட்டும் இவரே இப்படிச் சொல்வது சற்றே கவலை கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் சமூக வலைதளத்தை தீவிரமாகப் பயன்படுத்தி வரும் அவரே இப்படிச் சொல்வதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. ‘உங்கள் வகுப்பறையில் இருந்துதான் அதனைத் துவங்க வேண்டும்’ என்ற பாரம்பரியம் மிக்க வாக்கியத்தையும் அவர் உதிர்த்திருப்பது மெச்சத்தக்கது.

ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாக மக்கள் பேசத் தொடங்கியதும் உலக அளவில் அரசு – அதிகார மையங்கள் டரியல் ஆவதும், புரட்சிகளால் புரட்டிப் போடப்படுவதும் இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது. துனீசியாவில் தொடங்கி ஓவியா ஆர்மி வரை இதை வெவ்வேறு தளங்களில் முன்னுதாரணங்கள் சொல்ல முடியும். மெயின் ஸ்ட்ரீம் மீடியா ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும், அதன் மீதான அதிகார மையங்கள் கொண்டுள்ள அச்சத்தை விடவும் இன்றையச் சூழலில் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் தாக்கமும் நேர்மறை அச்சுறுத்தல்களும்தான் மேட்டர்.

ஆதார், ரேஷன்கார்டு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் டரியல் ஆகி, உடனுக்குடன் விளக்கம் கொடுத்தது எல்லாம் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் மூலம் கொட்டப்பட்ட மக்களின் பதிவுகள் ஏற்படுத்திய தாக்கம்தான் முக்கியக் காரணம் என்பது சமீபத்திய சான்றுகள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, நெடுவாசல்… இப்படி எத்தனையோ பிரச்சினைகளை தேச ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் முக்கியச் செய்திகளாக்கியதற்கு தமிழர்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்திய ஹேஷ்டேகுகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்று நம்புகிறேன். போராட்டச்சுவையையும் பலனையும் அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட எல்லா தரப்பு பொதுமக்களும் தங்களைப் பாதிக்கும் எந்த விவகாரத்திலும் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதும் தெளிவு.

பள்ளிக் கல்வித் துறை செயலர் அதிகாரி உதயசந்திரன்

இத்தகைய சூழலில், இதுவரை வெளிப்படையாக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வராத ஆசிரியர் சமூகம் இப்போது முதல் முறையாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தங்கள் துறைக்குத் தக்கவைத்துக் கொள்ள குரல் கொடுப்பது என்பதும் சமூக வலைதளமும் ஹேஷ்டேகுகளும் கொடுத்த நம்பிக்கை. தங்கள் மீதான துறை ரீதியில் நடவடிக்கை வருவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளிக் கல்வித் துறையின் நன்மை ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் நேரடியாகக் களமிறங்கியிருப்பது வேற லெவல் கெத்து.

எல்லா பக்கமும் மக்களின் அதிருப்தியை ஈட்டியுள்ள தமிழக அரசு, பள்ளிக்கல்வி போன்ற மிகச் சில அமைச்சகங்கள், துறைகளில்தான் ஓரளவு திருப்தி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறது. எனவேதான் தான் நினைத்த மாத்திரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ‘முடிவு’ செய்தாலும் உடனடியாக தூக்கியடிக்காமல் நிதானத்துடன் தயங்குகிறது. மக்களின் மனநிலைக்கு வலு சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல்கொடுத்தால் அந்த டரியல் இன்னும் அதிகமாகும். இதுபோன்ற நெருக்கடியே ‘சரியான’ முடிவை அரசு எடுக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பலாம்.

ஹேஷ்டேக் என்று வந்துவிட்டால் ஓவியா ஆர்மியை முன்வைத்து வீரியத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஹேஷ்டேக் என்பது போராட்டத்துக்கான பேராயுதம் மட்டுமல்ல; பொழுதுபோக்குக்கான குவியமும் கூட. ஓவியா ஆர்மி முதலான ஹேஷ்டேகுகள் கொடுத்த அழுத்தம்தான் அவரது கேரக்டர் அசாசினேட் செய்யப்படாமல் எந்தப் பாதிப்புமின்றி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இயல்பு நிலைக்குத் திரும்பவும் வித்திட்டிருக்கிறது என்றும் நம்புகிறேன். இதுதான் ஹேஷ்டேக் ஏற்படுத்தும் தாக்கம்.

மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை விட சமூக வலைதளத்தில் மக்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசும், அதிகார மையங்களும் தீவிரமாக கவனித்து வரும் சூழலில், ஓர் அதிகாரியை தக்கவைத்துக் கொள்வதற்கான இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். குறிப்பாக, ஆசிரியர்கள் – மாணவர்கள் குறித்து அக்கறையுள்ள, அவர்களைத் தொடர்ந்து தங்கள் பதிவுகளால் வழிநடத்தும் சிறார் இலக்கிய எழுத்தாளர் விழியன் போன்றவர்களின் ஆதரவு மிக முக்கியமானது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

சரா சுப்ரமணியம், பத்திரிகையாளர்.

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.