செய்திகள்

தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது: எடப்பாடி அதிரடி

டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக அம்மா அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சசிகலாவால் கட்சியின் துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.இறுதியாக தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்,

அதிமுக-வில் இருந்து மறைந்த ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தினகரன்.தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது.தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளார். எனவே கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைக்கு எந்த மதிப்பும் இல்லை.அவை செல்லாத ஒன்று.

தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அ.தி.மு.க-வினர் நிராகரிக்க வேண்டும்.மறைந்த ஜெயலலிதாவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழிநடத்துவர் எனவும் அந்த தீர்மானம் கூறுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s