திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்..
“எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸ் குறித்து திருப்பூர் தமுஎகச கூட்டத்தில் பேசிய சுருதி டிவி காணொளி கண்டேன். சகோதரி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் அனுப்பி இருந்தார். 120 நிமிடம் ஓடும் காணொளி. எந்த பிசிறும் இல்லாமல் நின்று பெய்யும் மழை போல நிதானமான நதியோட்டம் போல பேசி இருக்கிறார். இதற்காக 70 நூல்களை 6 மாதங்களாக வாசித்து உள் வாங்கி அந்த உலகை மாற்றிய மானிடனிற்கு பெரும் மரியாதை செலுத்தி இருக்கிறார் . ஒவ்வொரு காட்சிகளாக மனதில் பதியனிட்டே போகிறார். கவித்துவமாக அ புனைவு எழுத்தாக எஸ். ரா. நூறு நூறு பூக்களை தம் சொல்லால் பூப்பித்துக் கொண்டே போகிறார். எளிதில் உணர்ச்சி வயப்படாத நான் இந்த உரையை கேட்க கேட்க எஸ். ரா மீதான என் அன்பு வளர்ந்து கொண்டே போகிறது. விரைவில் சந்திப்போம் எஸ்.ரா. இந்த உரைக்காக நாம் கொண்டாடுவோம் ஒரு நாளை”.