இலக்கியம்

ஹெச்.ஜி.ரசூலின் ஊர் விலக்கத்திற்கான பெருங்காரணம் எது?

இரா.தெ.முத்து

இரா.தெ. முத்து

வகாபியத்திற்கு மாற்றாக எதிர்திசையில் பன்மைத்துவம் நோக்கில் செயற்பட்டவர் ஹெச்.ஜி.ரசூல்.இதற்கு ரசூலிற்கு கைப்பொருளாய் பயன்பட்டது வரலாற்று நோக்கிலான நாட்டார் மரபு சார்ந்த இசுலாமிய சூபி மரபு.

இம்மரபு உலகெங்கும் ஒரே காலத்தில் வெவ்வேறு நிலத்தின் வெவ்வேறு வடிவங்களாக முகிழ்த்து வந்திருக்கிறது. தமிழ் சூபிமரபில் பீர்முகம்மது அப்பா குறிப்பிடத் தகுந்தவர். இந்த அப்பாவின் தடம் பற்றி தான் பிறந்து வாழ்ந்த குமரி மாவட்டம் தக்கலையில் , மாவட்டம் எங்கும் இசுலாத்தினுள் இந்த சூபிய பார்வை நோக்கில் காலம் கோரும் வளர்ச்சியை நோக்கி பயணப்பட்டவர் ஹெச்.ஜி.ரசூல்.

இவருக்கான அஞ்சலிக் கூட்டம் இந்த நோக்கில் பல பல பார்வைகளுக்கு திறப்பாக அமைய, தன் வாழ்வை நட்பை படைப்பை நிறுவியவர் ரசூல்.
ரசூல் மீதான ஊர்விலக்கத்திற்கு மைலாஞ்சியின் ஒரு கவிதை மட்டும் காரணம் அன்று; குடிகலாச்சாரம் குறித்த உயிர்மை கட்டுரை மட்டும் காரணம் அன்று.

தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகமது அப்பா ஜமாத்திற்கு சொந்தமான பல கோடி ருபாய் பெறுமானமுள்ள நிலத்தை முறைகேடாக விற்பதற்கு துணைத்தலைவர் என்ற ரீதியில் ரசூல் கையெழுத்து இடாததே பெருங்காரணம் என்று ரசூலின் உறவும் தோழமையுமான தக்கலை ஹலீமாவின் அஞ்சலியில் வெளிவந்த உண்மை முத்தாய்பாக அமைந்தது.

ரசூலின் புது நூலான வகாபிசம் எதிர் உரையாடல் ( பாரதி புத்தகாலயம் ) நூலை தக்கலை ஹலீமா வெளியிட ரசூலின் தோழமைகளான ச.விசயலட்சுமி, தி.பரமேசுவரி, பாலைவன லாந்தர், சாரா, இரா.தெ.முத்து, மயிலை பாலு, புத்தகம் பேசுது க.நாகராசன், ப.கு.ராஜன் பெற்றுக் கொண்டனர்.

ரசூலின் முதல் கவிதையை பிரசுரித்த சிவலிங்கம்,மார்க்சிய ஆய்வாளர் ப.கு.ராஜன், ஆய்வாளர் கோம்பை அன்வர், எழுத்தாளர் அப்பணசாமி, பத்திரிகையாளர் மயிலை பாலு, தமுஎகச துணைப்பொதுச்செயலாளர் இரா.தெ.முத்து, கவிஞர்-எழுத்தாளர் ச.விசயலட்சுமி, ஆய்வாளர்- கவிஞர் தி.பரமேசுவரி, கவிஞர் சாரா( ஷபி ) கவிஞர் பாலைவன லாந்தர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

படைப்பாளர்கள் வாசகர்கள் பன்மைத்துவம் விரும்பும் மக்கள் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டும் விதையெனெ வளர்ந்து கொண்டும் இருப்பார் ஹெச்.ஜி.ரசூல்

அஞ்சலி நிகழ்வை ஆகஸ்ட் 11 சென்னையில் பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைப்பு செய்திருந்தது. மழையும் உடன் அமர்ந்து ரசூலின் கதை கேட்டது.

இரா. தெ. முத்து, கவிஞர்; செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s