சினிமா

தரமணி: ஆல்தியாவும் ஆல்தியா நிமித்தமும்!

கீட்சவன்

கீட்சவன்

இயங்கள் குறித்த புரிதலும் தெளிவும் முழுமையாக இல்லை. எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்களை மனிதர்களாக அணுகுவதற்கு முயன்றுகொண்டு தோற்றுத் தோற்று எழுந்திட முற்படுவது ஒன்று மட்டுமே இசங்கள் மீது ஈடுபாடுகொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. இதனால்தான் என்னவோ #தரமணி-யை ஒரு சினிமா பார்வையாளனாக அனுபவித்து ரசிக்க முடிந்தது.

ஆம், புறக்காரணிகளால் பாதிப்புக்குள்ளாகி இயல்பாக இருக்க முயற்சிப்பதையே அதீதம் போல் பார்க்கப்படுவது பற்றி கவலைப்படாத தன்போக்கில் வாழும் ஆல்தியாவும் பிரபுவும்தான் ப்ரொட்டாகனிஸ்டுகள்.

கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்து, அவரை அரவணைப்புடன் விலகும் அணுகுமுறையிலேயே ஆல்தியாவின் பக்குவம் பிடிபடுகிறது. சில மணிநேரம் பழகிய அன்னிய இளைஞனை எடைபோட்டு, அவன் ஆபத்தில்லாதவன் என்பதை உணர்ந்து உறவைத் தொடங்க முற்படும் இடத்திலும் அவளது பக்குவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் நம் சமூகம் உருவாக்கிக் கைவிட்ட பிரபு, புறம் சார்ந்த கமிட்மென்ட்ஸ் ஏதுமில்லாததால் விரக்தியில் வெட்டியாக வாழ்கிறான். எனக்கும் தனிப் பொறுப்பு சார்ந்த நிர்பந்தங்கள் இல்லாமல் போயிருந்தால், அவனைப் போல் சுற்றித் திரிந்திருப்பேன் எனக் கணிக்கிறேன்.

இணையருக்கான தேடல் தாண்டி, தன் குழந்தைக்கு தகப்பனாகவும் இருப்பதற்கான சாத்தியங்களைக் கண்டுகொண்ட பிறகே பிரபு மீதான காதலை உறுதிபடுத்துகிறாள் ஆல்தியா. அந்த டால்பின் காட்சியின் பின்னணியும், அதைக் காட்டும்போது மிதக்கும் வரிகளும் திரைக் கவிதை.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற படங்களின் தேவையைக் கிடாசி எறிந்ததில் ஐ.டி. துறைக்குப் பெரும் பங்கு உண்டு. நடுத்தர மக்களின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதில் பெறும் பங்கு வகித்த இந்தத் துறை தந்த சாதகங்களின் ஒன்றுதான் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் ஆல்தியாக்கள் எண்ணிக்கை மிகுதி ஆவதும். அத்தகைய ஆல்தியாக்களிடம் நெருங்கும்போது சந்திக்கும் தேவையற்ற அதிர்ச்சிகளை மனரீதியில் அணுக முடியாமல் தவிக்கும் நம் சமூகம் உற்பத்தி செய்த ஆண்களில் பலரது பிரதிநிதிதான் பிரபு. இவர்களுக்கு இடையிலான உறவின் நெருக்கமும், உளவியல் சிக்கல்களும் சேர்ந்து எழுப்பும் விளைவுகளும் இருதரப்பு புரிதல்கள் நோக்கியப் பயணம் என்கிற ரீதியில்தான்#taramani-யைப் பார்க்கிறேன்.

ஆல்தியாவை சக மனிதராகவே பார்க்கிறேன். அவள் எதிர்கொள்ளும் சூழல்களை நான் சந்திக்க நேர்ந்தால் என்னென்ன செய்வேனோ அதைதான் அவள் செய்கிறாள். புகைப்பது, மது அருந்துவது எல்லாமே இதில் அடக்கம். ‘அவெய்லபிளிட்டி’ என்பது இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது. அவள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கைச் சூழல், நினைத்ததைச் செய்யும் வாய்ப்பைக் கொடுக்கிறது. அவளும் அதைப் பயன்படுத்துகிறாள். அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாத புறக்காரணங்களால்தான் பெரும்பாலான பெண்கள் மாற்று வழிகளை நாடுவதில்லை என்பதாக நம்புகிறேன்.

குழந்தைகளைப் பெற்றோர் ஹேண்டில் செய்யும் காலத்தை இழந்துவிட்டோம். இப்போது, குழந்தைகள்தான் பெற்றோரை ஹேண்டில் செய்கிறார்கள். அதைக் கச்சிதமாக குட்டிப் பையன் ஏட்ரியன் காட்டிக் கொடுக்கிறான். பிரபுவைப் போன்ற பின்னணியில் இருந்து வந்து வாழ்க்கையை ஓட்டும் அஞ்சலி கதாபாத்திரமும் குழப்பவாதிகளின் பிரதிபலிப்பு.

பிரபுவின் அறியாமைச் செயல்களால் எரிச்சல் மிகுந்து கொந்தளிக்கிறாள் ஆல்தியா. அவளை அணுக முடியாமலும், பிரிய முடியாமலும் தவிக்கும் பிரபுவுக்கோ இன்னொரு பக்கம் தன் குற்ற உணர்வுகளைப் போக்க வேண்டிய கட்டாயம். இதனால் இருவருக்குமே தடுமாற்றம். ஆல்தியா நிலைதடுமாறி ஏதேதோ செய்ய, இவனோ காமம் சார்ந்த குற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அவனது தடுமாற்றம், திரைக்கதையிலும் எதிரொலிக்கிறது. போன் செக்ஸ் குற்றச் சம்பவ பகுதியே தடுமாறித் தொக்கி நிற்கிறது. அவன் மீளும்போது திரைக்கதையும் மீள்கிறது.

இதனிடையே, பிரபுவுக்கு நெருக்கமான அழகம்பெருமாள் கதாபாத்திரமும், ஆல்தியாவின் அலுவலக பக்கத்து சீட் பெண் கதாபாத்திரமும் இரு வெவ்வேறு குடும்பச் சூழலின் வாழ்வோரின் வெறுமையையும், அதை சரிசெய்துகொள்ள தேர்ந்தெடுக்கும் பாதைகளையும் எடுத்துக் காட்டுகிறது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியின் மனைவி உள்பட சின்னச் சின்ன கதாபாத்திரங்களாக காட்டப்பட்ட பெண்களின் இருட்டான பகுதிகள் எல்லாமே பெண்களைத் தாழ்த்துவதற்காக புனையப்பட்டவர்களாகப் பார்க்கவில்லை. மாறாக, நம் சமூகத்தில் எல்லா நிலைகளிலும் தங்கள் இணையரை உடலளவிலும் மனதளவிலும் இணையராக நடத்தாததன் விளைவாகப் பார்க்கிறேன்.

எனக்கு தரமணியில் இருந்த ஒரே சிக்கல் – வாய்ஸ் ஓவர். இயக்குநர் ராமின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி அவரது வாய்ஸ் ஓவரிலேயே படம் நிறைவடைகிறது. முதன்மை மட்டுமின்றி, உறுதுணைக் கதாபாத்திரங்களின் தன்மைகளை வாய்ஸ் ஓவர் மூலம் அறிமுகப்படுத்தியதை விட, காட்சியின் ஊடாகத் தெளிவுபடக் காட்டியது நேர்த்தி. தான் படம்பிடித்துக் காட்டிய முக்கியக் காட்சிகளுக்குத் தானே வாய்ஸ் ஓவர் மூலம் கோனார் உரை வழங்கியதை என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு படைப்பை அனுபவிக்கும் பார்வையாளனின் சிந்தனையை மழுங்கடிக்கும் அம்சமாகவே இதைப் பார்க்கிறேன். இன்டன்ஸான காட்சி ஒன்றில் டீமானிட்டைசேஷனை பகடி செய்தது, அக்காட்சி மீதான கவனத்தை சீர்குலைத்தது.

ஆனால், நான் திரையரங்கில் படம் பார்க்கும்போது ராமின் வாய்ஸ் ஓவர் விவரிப்புகள், நக்கல்கள், நையாண்டிகள், கலாய்ப்புகள் அனைத்துக்குமே ஆரவாரம் பிய்த்துக்கொண்டு வந்தது. பல தரப்பு பார்வையாளர்களையும் திருப்திபடுத்த மசாலாத்தனங்களை உள்ளே திணிப்பதற்குப் பதிலாக, உருப்படியான உத்தியைக் கையாளலாமே என்ற ராமின் உத்தி வென்றுவிட்டதாகவே கருதுகிறேன்.

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் ‘சினிமா’. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன். தொழில்நுட்ப அப்டேட்டுகளுடன் உதார் காட்டலாம்; எந்த அப்டேட்டும் இல்லாமல் கூட உன்னதம் படைக்கலாம். வரையறை என்ற ஒன்று இல்லாததுதான் சினிமாவின் வரையறை.

எனவே, ‘இந்தப் படம் சினிமாவே அல்ல; திரைமொழியே இல்லை; இலக்கணமே பின்பற்றப்படவில்லை’ என்றெல்லாம் சொல்வதே அபத்தம் என்று நினைக்கிறேன். மாறாக, ‘இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை; கையாளப்பட்ட திரைமொழியில் உடன்பாடு இல்லை; இந்த சினிமா சொல்லும் கதையும் சேதியும் மோசமானது; கதை சொன்ன விதத்தில் ஒட்ட முடியவில்லை’; ஒட்டுமொத்தமாவே மொக்கையா இருக்கு; ரொம்ப கேவலமான படம்’ என்று எப்படி வேண்டுமானாலும் எதிர்மறையில் சொல்லிக்கொள்ளலாம். அது அவரவர் மனநிலையையும் ரசனையையும் சார்ந்தது.

ஆனால், ‘திரைமொழி, திரை இலக்கணம், லொட்டு லொசுக்கு’ உள்ளிட்ட பதங்களைப் பயன்படுத்தி, மேப்பில் பார்த்திடாத நாட்டைச் சேர்ந்த காது கேட்டிராத மொழிகளின் படங்களை மேற்கோள்காட்டி, வேறுபாடுகளுடன் நம் சினிமாவை கழுவியூற்றுவது எல்லாம் தன் சினிமா ஃபேக் நாலட்ஜை நிறுவ முற்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த வகையில், எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் போன வாய்ஸ் ஓவர் உத்தியைக் குறையாகச் சொல்ல விரும்பவில்லை. படம் முடிந்து வெளியே வந்தபோது, என்னுள் விஷுவல்ஸ் சரியாக பதியாமல், ராமின் வாய்ஸ் ஓவரே டாமினேட் செய்ததால், இன்னொரு முறை மீண்டும் தரமணியைப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அவ்வளவுதான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தை அப்போதைய மக்கள் காண நேரும்போது, சமகாலத்தை இலக்காகக் கொண்ட வாய்ஸ் ஓவர் மேட்டர்கள் அவர்களுக்கு சமூக – அரசியல் வரலாற்றுப் பதிவாக இருக்குமா? அல்லது ஒரு திரைப்படத்தின் காட்சிகளை ஆழமாக ரசிப்பதற்கு இடையூறாக இருக்குமா என்பது தெரியவில்லை.

ஒரு படத்தின் கன்டென்ட்டுக்குள் முற்றிலும் மூழ்கிவிட முடிகிறது என்பதாலேயே தரமணியின் இசை, ஒளிப்பதிவு, ஒலி அமைப்பு என கலைகளும் தொழில்நுட்பங்களும் சார்ந்த அத்தனை அம்சங்களும் சரியான பங்களிப்பை அளித்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

மீண்டும் ஆல்தியா, பிரபு கதாபாத்திரங்களுக்கு வருகிறேன். தனக்கு தனிப்பட்ட முறையில் நேர்ந்த அத்தனை பாதகமான விஷயங்களையும் கோபமாக கொட்டித் தீர்க்கும் இணையராகவே பிரபுவைப் பார்த்தாள். அத்தகைய அணுகுமுறையின் விளைவையும் உணர்ந்தாள். ஆல்தியாவை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு கால அவகாசமும் அனுபவங்களும் பிரபுவுக்குத் தேவைப்பட்டது. இதனால், இறுதி முடிவு என்பது இயல்பு மீறாததுதான் என ஏற்கிறேன்.

பெண்ணியம் என்ற பெயரில் ஆல்தியா கதாபாத்திரம் கோளாறு என கழுவியூற்றுவோரில் சிலரோ மணி சார், கார்த்தி சுப்புராஜ், கவுதம் வாசுதேவ் முதலானோர் வார்த்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்டாடியவர்கள்தான். ஒழுக்க முகாம் பூசப்படாத ஆல்தியாவைக் கண்டு அவர்கள் அதிர்வதில் ஆச்சரியமில்லை. டேஷியங்கள் பலவற்றில் தேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வசைபாடுவது, ஆல்தியாவைக் கண்டதால் வந்த தங்கள் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ என்ற ஐயம் எழாமல் இல்லை.

ஆல்தியாவை ஆண்கள் பலரும் கொண்டாடுவதற்கும் ஓர் உளவியல் காரணம் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். நிஜத்தில் ஆல்தியா போன்ற ஒருவரை நெருக்கமாக அணுகுவதற்கு உரிய பக்குவத்தைப் பெறாத காரணத்தால், முதலில் நிழலில் அவளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவாகவும் இருக்கலாம். மனிதர்களை மனிதர்களாக ஏற்கும் பக்குவத்தை ஒரு சமூகம் எட்டுவதற்கு தன் படைப்பு மூலம் உரிய பங்களிப்பைக் கொடுத்துள்ள ராம் உடன் இப்போதைக்கு ஒரு தேநீர் சாப்பிடத் தோணுது.

கீட்சவன் என்னும் புனைபெயரில் திரை கட்டுரைகள் எழுதிவரும் சரா சுப்ரமணியம் ஊடகவியலாளர்.

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்

த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.

$2.00

Advertisements

பிரிவுகள்:சினிமா

Tagged as: , ,

2 replies »

 1. // ‘அவெய்லபிளிட்டி’ என்பது இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது. அவள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கைச் சூழல், நினைத்ததைச் செய்யும் வாய்ப்பைக் கொடுக்கிறது. அவளும் அதைப் பயன்படுத்துகிறாள். அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாத புறக்காரணங்களால்தான் பெரும்பாலான பெண்கள் மாற்று வழிகளை நாடுவதில்லை என்பதாக நம்புகிறேன். //
  —————–

  பாப்பாத்தி பாஞ்சாலியே உண்மையான பெரியாரிஸ்ட்:

  “ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931
  ———————————–

  “பேராண்மையை அடக்க பேரழகு வேண்டும், பேரழுகுக்கு முன் பேரரசனெல்லாம் மனித சரித்திரத்தில் மண்டியிட்டு விட்டான்” என்பது சான்றோர் வாக்கு.

  ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். முத்துராமலிங்கத்தேவர் ஒரு பெரிய ஜாதி தலைவர். எதற்காக ஒரு பாப்பாத்தி, செத்துப்போன தேவரின் குருபூஜை செய்து அவரது சிலையின் காலில் விழுந்து வணங்கினார்?.

  “திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கு ஒரே சமயத்தில் ஆசைநாயகியாய் வாழமுடியும்” என பெரியார் போதித்த பெண்ணியத்தை செயல்படுத்தி காட்டிய வீராங்கணை ஜெயலலிதா என்றால் மிகையாகாது.

  மஹாபாரதத்தில் பாஞ்சாலி எனும் பாப்பாத்தி ஒரே சமயத்தில் ஐந்து பாண்டவர்களுக்கு மணைவியாய் வாழ்ந்தாள். ஆனால் எத்துனை பெரியாரிஸ்ட் பெண்களுக்கு பாஞ்சாலி போல் வாழும் தைரியமிருக்கிறது?. அப்படியே வாழத்துணிந்தாலும், ஆண் பெரியாரிஸ்ட்டுக்கள் வாழ விடுவார்களா அல்லது தண்டவாளத்தில் வெட்டிப்போடுவார்களா?.
  ——————-

  பாப்பார பெண்களின் பொன்னிற மேனி அழகில் மயங்காத பெரியாரிஸ்ட் யாராவது உண்டா?.

  ஜெயலலிதா, சரோஜாதேவி, ரேகா, தீபிகா படுகோனே, நமீதா, சுஷ்மா சுவராஜ் மற்றும் பார்லிமெண்ட்டில் உலாவரும் பார்ப்பன பெண்கள் அனைவருமே திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து பல ஆண்களுக்கு ஆசை நாயகிகளாய் வாழ்ந்து பதவி பணம் சொத்து சுகமென ஏக போகமாய் வாழ்கிறார்கள்.

  ஆனால், தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் முந்தானை விரித்த பல தமிழ் திராவிட பெரியாரிஸ்ட் பெண்களின் கதியென்ன?. ரொம்ப போனால், தேவரின் பண்ணையிலே ஒரு அவுட் ஹவுஸ் கொடுத்து எடுபிடி வேலைக்கு வைத்துக்கொண்டனர். பெரிய மனிதர்களின் அவசர ஆத்திரத்துக்கு ஒரு வடிகாலாய் அவர்கள் வாழ்கின்றனர். ஏனென்றால், இவர்களுக்கு ப்ராஹ்மின் பெண்கள் போல் தகதகவென மின்னும் உடல் வனப்பும், அழகும், புத்தி கூர்மையும் கிடையாது.

  திருமணம் எனும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து, தை தக்கா தையென மேடையிலே பரதநாட்டியமாடி குனிந்து வளைந்து பிட்டத்தை காட்டி பல நிலப்பிரபுக்களுக்கு கிளுகிளுப்பூட்டியும், இந்திய ஆண்கள் மட்டுமன்றி பணக்கார அரபு ஷேக்குகள் மற்றும் வெள்ளைக்கார துரைமார்களுக்கும் உருவிவிட்டு “ஆணுக்கு பெண் சளைத்தவளல்ல” என உலகம் முழுதும் நிரூபித்து, பாப்பாரத் தேவைடியாமுண்டை பாரத்மாதாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் பாப்பார பெண்களே உண்மையான பெரியாரிஸ்டுக்கள் என்பதை எந்த பெரியாரிஸ்டாவது மறுப்பாரா?.

  ஆகையால், பேரழகு மிக்க பாப்பாத்திக்கள் போல் பெரியாரிஸ்ட் பெண்கள் பெண்ணடிமைத்தனத்தை உடைக்க முனைந்தால், அது:

  “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்,
  கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்,
  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா,
  புலியை பார்த்து சூடு போட்ட பூனைகள்,
  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே,
  ஏழைக்கேத்த எள்ளுருண்டை,
  ஏழை சொல் அம்பலம் ஏறாது”

  போன்ற சான்றோர் வாக்கை மெய்ப்பிக்கும் கதியில்தான் முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

  பாப்பாத்திக்கள் போல் பேரழகிருந்தால் பூந்து வெளையாடலாம். இல்லாவிட்டால், விரலுக்கு தகுந்த வீக்கமென பொத்திக்கொண்டு பத்தினி தெய்வமாக வாழ்வதே சாலச்சிறந்தது. ஆகையால், “அழகற்ற பெரியாரிஸ்ட் பெண்களுக்கு ஏற்ற ஆடை புர்கா. அவர்களுக்கேற்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்” என்பதே எனது பணிவான தீர்வு.

  Like

 2. // ஆல்தியாவை ஆண்கள் பலரும் கொண்டாடுவதற்கும் ஓர் உளவியல் காரணம் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். //
  —————–

  ப்ராஹ்மண பெண்களை இழிவு செய்யும் காமசூத்திர கோயில் சிலைகள் பற்றி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் சொன்ன கருத்து:

  பாண்டே: அய்யா.. வணக்கம். கோயிலில் நிர்வாண அம்பாள் சிலைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?.

  சுப்ரமண்ய சுவாமி: கூந்தல் இருக்கறவா அள்ளி முடியறா… அவாளுக்கு அழகிருக்கு.. காட்றா.. ஒன்னும் இல்லாதவ புர்கா போட்டு மூடிக்கினு போறா… இஷ்டமிருந்தா பாரு… இல்லாட்டி பொத்திக்கினு போ ஓய்…
  —-

  கலைஞர்: சங்க காலத்தில், போரில் வென்று நாடு திரும்பும் சத்திரிய வீரர்களை ஆடிப்பாடி வரவேற்று அவர்களுடைய பசலை நோயை நீக்குவது கோயிலில் தேவதாசிகளாக வாழ்ந்து வந்த அம்பாள கோல மயில்களின் குலத்தொழில். கலவி இன்பம் பெறும் பொழுதும் தரும் பொழுதும், அம்மணமாக இருப்பது அவாளோட தருமம் என தொல்காப்பிய இலக்கண குறிப்பு சொல்கிறது.
  —-

  தமிழிசை சௌந்திரராசன்: அந்த காலத்துல, எங்க நாடார் ஜாதி பெண்கள் ஜாக்கெட் கூட போடம ஜாலியா இருந்தாங்க… இந்த திப்பு சுல்தான்கற ஒரு வஹாபி இஸ்லாமிய அரசன் திருவாங்கூரை கைப்பற்றி, நாங்க கட்டாயமா ஜாக்கெட் போடனும்னு சட்டம் போட்டான். அன்றிலிருந்து எங்களுடைய சுதந்திரம் பறி போய்விட்டது. இப்ப கோயில்ல இருக்கற அம்பாளுக்கு புர்கா போட்டு பாரத்மாதாவை மும்தாஜ் பேகமா மாத்த திட்டம் போடறானுக…. இவனுகளோட சதித்திட்டத்தை முறியடிக்க , தமிழகம் முழுதும் ஜாக்கெட் இல்லாமல் “முலை எழுச்சி” போராட்டம் நடத்துவோம்.

  பெரியாரிஸ்ட்: ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு, தாய்க்குலம் போன்ற பொன் விலங்குகளால், ஆணாதிக்க வர்க்கமும் நிலப்புரபுக்களும் பெண்களை அடிமைப்படுத்தி சுதந்திரத்தை பறித்துவிட்டனர். மனதுக்குள் ஒருவனை நினைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக புருஷனுக்கு முந்தானை விரிக்கும் அவலநிலைதான் பெண்களிடம் உள்ளது. ஆகையால் முழு செக்ஸ் சுதந்திரமே பெண்ணுரிமைக்கு திறவுகோல். ஒவ்வொரு திராவிட பெண்ணும் அம்பாள் செய்வதை செய்ய வேண்டும். ஆனால் திராவிட கட்டப்புள்ள குட்டப்புள்ளைகளை திராவிட ஆண்கள் சீண்டுவார்களா என்பது கேள்விக்குறியே…
  ——

  இஸ்லாமிய அறிஞர் பிஜெ: பொது இடங்களில் அம்மணமாக இருக்கும் பெண்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தியா ஒரு காபிர் தேசமென்பதால், இந்த சட்டத்தை செயல் படுத்தமுடியாது. ஆகையால், அம்பாளுடைய பிட்டத்தில் லைட்டா ஒரு தட்டுதட்டி எனது கண்டனத்தை பதிகிறேன்.

  பெரும்பாலான இந்து ஆண் கடவுள்கள் அனைவரும் ஷத்திரியர், வைசியர். பெண் கடவுள்கள் அனைவரும் பாப்பாத்திகள். ஷத்திரியரும் வைசியரும் பாப்பாத்தி பெண் கடவுள்களை கோயில் சுவற்றில் வைத்து சகட்டுமேனிக்கு புணர்கின்றனர். இது போல் சங்கராச்சாரியோ அல்லது பூணூல் போட்ட ஒரு பாப்பானோ புணர்வது போல் ஏதாவது ஒரு கோயில் சிலையை உங்களால் காட்டமுடியுமா?.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s