கருத்து

நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்?

அன்புசெல்வம்

அன்பு செல்வம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (11.9.2017) பிறப்பித்துள்ள‌ உத்தரவு வரவேற்கக் கூடிய ஒன்றல்ல. 1986 -ல் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக‌ தமிழகத்தில் இருக்கிற SC/ST மாணவர்களுக்கு இதனால் பெரிதும் பயன் இல்லை.

காரணம் . . .

 • 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இதில் ஹிந்தி முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும் மாநில மொழி கடைசியாகவும் கற்பிக்கப்படுகிறது. இப்போதுள்ள மொழியறிவுக் கல்வித்தரத்தின் அடிப்படையில் SC/ST மாணவர்கள் உடனே இதில் நுழைய முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.

 • உதாரணத்துக்கு : புதுச்சேரியில் உள்ள நவோதயாவில் 6 – 12 வரை சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. எளிதில் இடமும் கிடைக்காது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் “பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்” வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கூட இப்போதுள்ள நுழைவுத் தேர்வு முறையில் ஹிந்தி வினாத்தாள் – விடைத் திருத்தம் அந்தந்த பள்ளியில் நடை பெறாது. இந்த சிக்கலை எதிர் கொள்வதற்காக தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, 25 சதவிகித தமிழ் பயின்ற‌ மாணவர்களை ஹிந்தி நுழைவுத் தேர்வு வைக்காமல் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி அரசு 2006 -ல் இருந்து கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து விட்டது. இதனால் புதுச்சேரி நவோதயாவில் மத்திய அரசின் நோக்கமான கிராமப்புற SC/ST மாணவர்களின் சேர்க்கை மிக மிக பின் தங்கியிருக்கிறது. படிப்பவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

 • உண்டு, உறைவிடம் என்கிற தரம் முதன்மையாக இருந்தாலும் இப்பள்ளிகளில் SC/ST -க்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்களை உள்ளே புகுத்த தனி துரிதப்பயிற்சிகள் (Crash Course Programme) கிடையாது.

 • நவோதயா பள்ளிகளில் படித்து விட்டால் NEET போன்ற தேர்வை எதிர் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் இதில் இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த‌ உத்தரவாதமும் கிடையாது. ஏற்கனவே IIT போன்றவைகளை இதன் மூலம் எதிர் கொள்ள முடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • அரசு ஊழியர்களுக்கு என இதே போலத்தான் கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டது. அதில் பொதுவாக சேர்க்கப்படும் 10 சதவிகித சேர்க்கையில் கிராமப்புற SC/ST மாணவர்கள் எத்தனை சதவிகிதம் வருகிறார்கள் என கணக்கிட்டால் ஒரு சதவிகிதப் பயன்பாடு கூட‌ மிக மிகக் குறைவு. பெரும்பான்மையான இடங்கள் MP கோட்டாவுக்கு போய் விடுகிறது. ஒரு MP -க்கு 6 சீட் என கணக்கிட்டாலும் தற்போதைய நிலையில் ஒரு MP – கோட்டா சீட் 3 லட்சத்துக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நோக்கம் அரசு ஊழியர்களுக்கானது போல் தெரிந்தாலும் வருசத்துக்கு 3000 MP சீட் வசதி படைத்தவர்களுக்குத் தான் போய்ச்சேருகிறது. அப்படி இருக்கும்போது எதிர் காலத்தில் இப்பள்ளிகளும் கேந்திரிய வித்யாலயா போல் ஆகாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.

 • தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் 49 உயர்நிலைப் பள்ளிகளும், 56 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான SC/ST மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் படித்து வருகிறார்கள். ஹிந்தியைத் தவிரவும், தரம் உதர்த்தலைத் தவிரவும் நவோதயா வழியாக‌ வேறென்ன கிடைத்து விடப்போகிறது?

எனவே தற்போதைய அறிவிப்பின் மூலம், நவோதயா பெயரில் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதை நிறுத்தி விட்டு அவற்றுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 20 கோடி ரூபாயை கிராமப்புற ஏழை மற்றும் SC/ST மாணவர்களுக்கு அப்படியே வழங்கி மாநிலப்பட்டியலுக்குள் நுழையாமல் இருப்பதே மத்திய அரசாங்கம் கிராமப்புற வளர்ச்சிக்கு செய்கிற நல்ல விசயம்.

அன்புசெல்வம், எழுத்தாளர்.

முகப்பில் உள்ளது மாதிரி படம்.

பிற்சேர்க்கை: ஹிந்தி மொழி முதன்மை மொழியாக உள்ளது என தற்போது புதுச்சேரி நவோதயா பள்ளியில் உள்ள நடைமுறைகளை எழுத்தாளர் அன்புசெல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய நவோதய பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் பயிலலாம் என மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அதை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.  த டைம்ஸ் தமிழிடம் பேசும்போது அன்புசெல்வம், ஹிந்தி மொழி திணிப்பையும் மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கவுமே நவோதய பள்ளிகளை மத்திய அரசு கொண்டுவர நினைக்கிறது என்றார். தமிழகத்தின் ஏராளமான பள்ளிகள் உள்ள நிலையில் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கான தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

https://drive.google.com/file/d/0B14M4ID1Z9cQWW9XWTRLbFNfMWM/view

Advertisements

13 replies »

 1. ‘மாநில மொழிகளைப் பயிலலாம்’ எனச் சொல்லும் மத்திய அரசு ‘மாநில மொழியை முதன்மை மொழியாகப் படிக்க வேண்டும்’ எனச் சொல்லுமா? இந்தியாவின் இறையாண்மையிலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை உள்ள ஒரு நல்லரசு அதைத்தானே சொல்ல வேண்டும்?

  Like

 2. தமிழக அரசு +2 தேர்வு லட்சணம் — ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங்….

  தமிழக கிராமத்து அரசு உயர்நிலை பள்ளியில் ஹெட் மாஸ்டராக இருக்கும் ஒரு நபருக்கு வருடத்துக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. +2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் குழுவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு ஒரு பேப்பருக்கு லட்ச ரூபாய் கொடுத்தால், அட்டகாசமான ஆன்சர் ஷீட்டை நுழைத்து கமுக்கமாக 99, 100 சதவீதம் போட்டு கொடுத்து விடுவார். மேல் மட்ட குழுவில் இருக்கும் பெரும்பாலான யோக்கியர் அனைவரும் இதை செய்கின்றனர். இவர்களுடைய பெரிய வாடிக்கையாளர்கள், சட்டசபையில் இருக்கும் 247 மானங்கெட்ட அயோக்கிய நாய்களும் பெரிய அதிகாரிகளும். இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

  இது தவிர, புத்தகத்தை திறந்து வைத்து காப்பி அடித்தல், ப்ராக்ஸியை வைத்து தேர்வு எழுதுதல் போன்ற தில்லுமுல்லுகள் பல பள்ளிகளில் சர்வசாதாரணம். NEET தேர்வு முறையில், எந்த கொம்பனாலும் இது போன்ற தில்லுமுல்லு செய்யமுடியாது.

  Like

 3. தமிழக அரசு “புள்ளங்களுக்காக”, ஒரு சமச்சீர் நுழைவுத்தேர்வு நடத்த வக்கிருக்கா இந்த சமூகநீதி போராளிகளுக்கு?:

  “நீட் எங்க புள்ளங்களோட உரிமைய பறிக்குது” என கனிவாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஊழலரசி கனிமொழி. CBSEஐ எதிர்க்கும் கனிமொழியின் புள்ளங்களும், நவீன பாப்பான் கருணாநிதியின் பேரப்புள்ளங்களும் எந்த சமச்சீர் அரசு பள்ளியில் ஒட்டு போட்ட டவ்சர மாட்டிக்கிட்டு படிக்கின்றனரென்பதை கனிமொழி சொல்வாரா?. அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.

  தெம்பிருந்தால் நீட் போன்ற ஊழலற்ற ஒரு நுழைவுத் தேர்வை “தமிழக அரசு சமச்சீர்” பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டியதுதானே?. அப்படி செய்தால், அனைத்து இடங்களையும் CBSE மாணவர்கள் வென்று விடுவர். சமச்சீர் தமிழ் புள்ளங்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

  “ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங்”… இந்த தில்லுமுல்லு இல்லாவிட்டால், சட்டசபையில் இருக்கும் 247 தன்மானமற்ற அடிமை நாய்களின் குடும்பத்தில் எந்த ஜென்மத்திலும் ஒருவன் கூட டாக்டராக முடியாது.

  Like

 4. சமூகநீதி — எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?:

  “இறந்து போன தலித் பெண் அனிதாவின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் விடும் சமூகநீதி போராளிகள், திருமா, சீமான், அருள் பொழியும் அருள்மொழிகள், தமிழ் புள்ளங்களுக்காக கனிவை பொழியும் கனிமொழிகள், திராவிட இயக்க “நவீன பார்ப்பன” தளபதிகள், கூட்டுக்களவானிகள் ஆகிய எவரும் “ஒரு பத்து பைசா” கூட அந்த குடும்பத்துக்கு தரவில்லையே,, ஏன்?” என ஒரு மூத்த ஜாதி மறுப்பு வீரரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில்:

  “இந்த பறப்பயல்களுக்கு நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச எல்லாத்தையும் தூக்கி கொடுத்துட்டு ரோட்ல நிக்க முடியுமா?…. எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?… செத்தா சாவறானுக… உடுங்க”.

  Like

 5. மானம் மரியாதைக்கு பயந்து, எங்களுடைய ஏழ்மையை நாங்கள் வெளியே சொல்வதில்லை:

  நீட் போன்ற ஊழலற்ற நுழைவுத்தேர்வு நடத்தினால், இந்த சமச்சீர்வாதிகளின் புள்ளங்க ஒருத்தர் கூட டாக்டராக முடியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் “பேக் டோர், ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங், கூஜா தூக்குதல், அய்யா அம்மாவின் காலை நக்குதல்”.

  “குறுக்கு வழியில் செல்லாதே, பேக் டோரில் நுழையாதே, நேர்வழியில் செல்” என திருக்குரான் உரைக்கிறது. “உலகத்தின் எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமையும் நாங்கள் சந்திக்க தயார்” என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் ப்ராஹ்மின்ஸை நான் மனதார பாராட்டுகிறேன்.

  அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துமனையின் டைரக்டராக பதவி வகிப்பவர், தஞ்சாவூர் சமையல் அய்யரின் மகன். “நான் தலித். எனக்கு பிச்ச போடுங்க அய்யா” என யாரிடமும் ப்ராஹ்மின்ஸ் கெஞ்சவில்லை. எஸ்.வி.சேகர் சொல்வது போல் “மானம் மரியாதைக்கு பயந்து, எங்களுடைய ஏழ்மையை நாங்கள் வெளியே சொல்வதில்லை”. நீதிக்காக ஜிஹாத் செய்பவனே உண்மையான முஸ்லிம் என திருக்குரான் உரைக்கிறது. ப்ராஹ்மின்ஸ் பக்கம் நீதி இருந்தால், அவர்களுக்காகவும் நான் ஜிஹாத் செய்வேன்.
  ——————

  அனிதாவை போல் 1176 / 1200 வாங்கிய பல இஸ்லாமிய பெண்களும் நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. ஆனால் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை.. இதற்கு என்ன காரணம்?.

  “இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை… ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமும் இறுதி மூச்சு வரை அநீதிக்கெதிராக போராட (ஜிஹாத் செய்ய) வேண்டும். பயந்து தற்கொலை செய்பவன் கோழை. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. நீதிக்காக ஜிஹாத் செய்து மாவீரனாக உயிர் நீப்பவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்”.
  —- திருக்குரான்.
  —————————

  “உனக்கு அறிவிருந்தால், நீ இன்னமும் தலித்தாக இருப்பாயா?. ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவு” — தந்தை பெரியார்…

  Like

 6. “எங்க புள்ளங்கள நாங்க பாத்துக்குவோம்”… ஆத்தா கனிமொழி ஆவேசம்….

  ஆத்தா.. கொஞ்சம் அமுக்கி வாசி… பெயில்ல வந்துருக்கே… டிபன்ஸ் மினிஸ்டர் நிர்மலா சீதாராமன் கேட்டாங்கனா ஒன்ன பார்ப்பான அக்ரஹார ஜெயில்ல உட்டு முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க…

  Like

 7. எஸ்ஸி எஸ்டிக்கு பயனில்லை-னா உங்களுக்கு என்னங்க கவலை? என்னமோ இந்த பள்ளிக்கூடம் வந்தா தமிழகத்தில் 20-30 ஆயிரம் எஸ்.சி மாணாக்கர்கள் பயனடைவார்கள் என்று பிரச்சாரம் நடப்பதை போல சொல்லுறீங்க?

  Like

 8. நவோதயா வந்தா அதிகபட்சமாக 30-40 பள்ளிக்கூடங்களுக்கே வாய்ப்புள்ளது! எனில் 6-12 வரை ஒரு பள்ளிக்கூடத்தில் அதிகபட்சமாக 500 சொச்சம் மாணாக்கர் படிப்பார்கள்! ஒட்டுமொத்தா கணக்கிட்டா தோரயமா 22 ஆயிரம் மாணவர்கள் படிக்க வாய்ப்புள்ளது!

  அதில் 15 சதவீதம் எஸ்சி மாணாக்கர்கள் வாய்ப்பை பெறலாம் எனில் 3300 மாணக்கர்கள் பயனடைய வாய்ப்புள்ளது! இந்தி படிச்சாத்தான் அட்மிசன்-னா கழுதை சந்தோசம் தான? இந்தி படிச்சவன் போய் படிக்கட்டும் படிக்காதவன் மாநில அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கட்டும்! தங்களுக்கு என்ன பிரச்சனை??

  Like

 9. தமிழகம் முழுக்க 500க்கும் மேற்ப்பட்ட தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் இருக்கின்றதே… அங்கே தமிழ் வழியில் தான் பாடங்கள் கற்ப்பிக்க படுகின்றனவா? அது குறித்து எல்லாம் நீங்கள் இதுவரை கேள்வி எழுப்பியது உண்டா??

  தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் லட்சங்களை கட்டணமாக வாங்குகின்றனர். வாங்கி அங்கே படிக்கும் தமிழக மாணாக்கருக்கு மொழி உணர்வை ஊட்டி ஊட்டி வளக்குறாங்களா? இல்லை கல்வி நிலைய வளாகத்தில் தமிழ் பேசுனா 500 1000-னு தண்டனை தொகை வாங்குறாங்களா???

  Like

 10. எப்ப பாத்தாலும் எதுல பாத்தாலும் நேக்கா எஸ்.சி எஸ்.டியை நுழைச்சு விட்டு அரசியல் செய்வது கேவலமா இருக்கின்றது! ஏன் பி.சி களுக்கு பயனிருக்காது-னு சொல்லுங்களேன்! இல்லை-னா பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை தலைகீழா படிச்சவங்களா? அதுனால அவங்களுக்கு அட்மிசன் ஈசியா கிடைச்சுடுமா என்ன?

  Like

 11. http://jnvmahe.gov.in/reservation.html

  நவோதயாவில் 15 சதவீதம் எஸ்.சிக்கும் 7.5 சதவீதம் எஸ்.டிக்கும் இட ஒதுக்கீடு உண்டு!

  எஸ்.சி எஸ்.டி-க்கள் குறிந்து நீங்க கடந்த 60 வருடமா கவலை பட்டதும், திராவிடம்-னு சொல்லி ஊரை ஏமாற்றியதையும் பறையர் பள்ளர் உட்பட தமிழர்கள் அறிந்துகொண்டனர்!

  இனிமேல் இந்த பரப்புரை வேலைக்கு உதவாது! வேற டெக்னிக்கை பயன்படுத்த முயற்ச்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்!

  Like

 12. கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பிள்ளைகள் படிக்கத்தான் உருவாக்கப்பட்டது இன்றும் கூட ஏறக்குறைய 90 சதவீத கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்கள் அரசு பணியாளர்களுக்காகத்தான் இயங்குகின்றன!!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s