இந்துத்துவம்

மத்திய தொல்லியல் துறையின் வன்மம்!

கீழடி ஆராய்ச்சியை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக்கொண்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கீழடி ஆராய்ச்சியை நேர்மையோடும் அக்கறையோடும் அடுத்த கட்டத்திற் குக் கொண்டுசெல்ல வேண்டிய மத்திய தொல்லியல் துறை திடீரென்று, ஆய்வுக் குழிகளை மூடிவிட ஆணையிட்டதும் கூடாரங் களை அகற்ற ஆணையிட்டதும், இந்த முக்கியமான ஆராய்ச்சியைத் தொடர்வதில் மத்திய தொல்லியல் துறைக்கோ மத்திய அரசுக்கோ உண்மையான அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.

துவக்கத்திலேயே மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு அனுமதி கொடுக்க மறுத்தார்கள். பின்னர் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக மார்ச்மாதம் அனுமதி கொடுத்தார் கள். அதுவரை சிறப்பாக ஆய்வினை செய்துகொண்டிருந்த ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தனர். தொடர்ந்து இவ்வாண்டு அகழாய்வை பெயரளவுக்கு மட்டுமே நடத்தி வெறும் எட்டு குழிகளை மட்டுமே தோண்டினர்.

புதிதாக கட்டிடப் பகுதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிக்கை எழுதி கீழடிக்கான மூடுவிழாவினை நடத்தி முடித்துள்ளனர். இவையெல்லாம் மத்திய தொல்லியல் துறை பிடிவாதத் தோடும், வன்மத்தோடும் நடத்திய செயல்பாடுகளாகும்.

இத்தகைய நடவடிக் கைக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அவசர அவசரமாகத் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் ஆராய்ச்சியைத் தொடர அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி கூறப்படுகிறது. எதிர்ப்பலையைத் தணிக்கும் உத்தியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருக்கிறார்.

தமிழகத் தொல்லியல் துறை தன் சொந்தப் பொறுப் பில் ஆராய்ச்சியை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு வந்திருப்பதுதான். ஆனால், அமைச்சரின் இந்த அறிவிப்பு, மத்தியத்துறை ஏன் தன் பணியை நிறுத்திக் கொண்டது என்பதற்கான பதிலாகாது. மத்திய அரசின் மீதான கோபத்தை குறுக்கே விழுந்துதடுக்கிற விசுவாசமிக்க ஊழியர்களாக மாநில அமைச்சர்கள் இருப்பதை இச்செயலின் வழியேயும் நாம் உணரமுடிகிறது.

கீழடி அகழாய்வை முடிவுக்குக் கொண்டுவரும் உள்நோக்கத்துடன்தான் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரியவருகிறது. இதனை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழரின் உண்மையான தொன்மைப் பெருமை நிலைநாட்டப்படுவதில் அக்கறையுள்ள அனைவரும் மத்தியத் தொல்லியல் துறையின் இந்த அலட்சியப் போக்கை எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசும் மத்தியத் தொல்லியல் துறையின் ஆராய்ச்சி தொடரவும் விரிவுபடுத்தப் படவும் வலியுறுத்த வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்துகிறது.

முகப்புப் படம் நன்றி தீக்கதிர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s