புத்தக அறிமுகம்

அகதியும் அகதி சார்ந்த நிலமும்: அ.முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவல் அறிமுகம்

அவன் கடவுள் தொடங்கிய இடத்திற்குச் செல்ல வேண்டும்; அங்கு அகதி அந்தஸ்து பெற வேண்டும்.

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

” நாட்டை துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. இந்த நூல் அகதிகளின் அலைதலைச் சொல்லுவது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான்.அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த நாவல் ஒரு வரலாற்றையும் எழுதுகிறது” என்று சரியாகவே இந்நூல் பற்றி முன்னுரையில் அ. முத்துலிங்கம் எழுதுகிறார்.

கனடாவில் வசித்து வரும் ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் புலம் பெயர்ந்த மக்கள் மேல் கரிசனம் கொண்டவர். அதனால்தான் தன்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்றிற்கு  நாடற்றவன் என பெயரிட்டுள்ளார். அந்த கரிசனத்தின் விளைவாக விளைந்த அற்புதமான இலக்கியம்தான் இந்த நாவல். இலங்கை மக்களின் துயர் தீர்க்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். அ.முத்துலிங்கம் இலக்கியம் மூலம் அதனை  வெற்றிகரமாக செய்கிறார்.

இயக்கப் பொடியன் ஒருவன் வந்து அடிக்கடி பேசினான் ” எனவே இவனும் இயக்கத்தில் சேர்ந்து விடுவான் என பயந்து, தன் காணியை விற்று ஏஜெண்டுக்கு பணம் கொடுக்கிறாள் ஆசிரியராக பணிபுரியும் நிஷாந்தின் தாய். அவன் கடவுள் தொடங்கிய இடத்திற்குச் செல்ல வேண்டும்; அங்கு அகதி அந்தஸ்து பெற வேண்டும். இதுதான் கதை.  (அதாவது கனடாவில் ஒரு இடத்தின் பெயர் – Where God Began).

1992 ஆம் ஆண்டு புறப்படும் நிஷாந்த் கொழும்பில் தங்கி ஒரு ஓட்டலில் பணி புரிந்து பாகிஸ்தான், உக்ரேன், மாஸ்கோ, ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகள் வழியாக கள்ள கடவுச்சீட்டு, கள்ள விசா, கள்ள காரணம் என பல மீறல்களை கடந்து செல்கிறான்.

அகதிகள் பல நிலைகளில், பற்பல வயதுகளில், பல குணாதிசயங்களில் ஆண், பெண் பேதமின்றி வருகின்றார்கள். கைக்குழந்தையைக் கூட்டிக் கொண்டு கணவனை நோக்கி செல்லும் ஈசுவரி  அலெக்ஸோடு கிறங்குவது ஒரு ரகமென்றால், நன்கு பழகி, காதலித்து, இடப்பெயர்வு முடிந்தவுடன் கண்டுகொள்ளாமல் போகும் அகல்யா மறுரகம். மீனுக்காக  செய்த கொலைக்காக புஷ்பநாதன்  சிறை செல்கிறார்;  மாவட்டத்தில் ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றதினால்  கனடாவில் மருத்துவ படிப்பு படிக்க வந்த சபா பல்லாண்டுகளாக கோப்பை கழுவுகிறார்.

அகதிகள் பொருட்களைப் போல ஏஜெண்டிடம் கைமாற்றப்படுகிறார்கள். இவனுக்குப் பின்னர் புறப்பட்ட தங்கையிடம் பணம் பெற்று ஏஜெண்டிடம் கொடுக்கிறான். அறத்தோடு இருக்கும் நிஷாந்த கள்ள மாணவர் விசா தயாரிக்கிறான். புதிய புதிய பாதைகளில், புதிய புதிய வழிமுறைகளில் நாடு நோக்கி செல்லுகிறார்கள். மனம் கனக்கிறது; என்றாலும் முத்துலிங்கத்தின் கதை சொல்லும் பாணியும், நாவல் முழுவதும் விரவிக்கிடக்கும் எள்ளலான வசனங்களும் நாவலை உயிர்ப்புடன் உந்தித் தள்ளுகிறது.

“கடவுள் தொடங்கிய இடம்” விகடனில் தொடராக வந்த இந்த 250 பக்க நாவல் 2014 ல் விகடன் பதிப்பக வெளியீடாக வந்து இருக்கிறது.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.