ஊடக அரசியல்

#நீயா_நானா: இதை #குடும்பப்பெண்கள் மட்டும் படிக்கவும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் ‘தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணிய, முற்போக்கு அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.  நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது கருத்துரிமையை பறிக்கும் செயல் என நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் சர்ச்சை உருவான நிலையில், திங்கள் கிழமை நியூஸ் 18 தொலைக்காட்சி, ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்டனி, இயக்குநர், கருத்தாளர் இளங்கோ கல்லணை கருத்துரிமையை பறிக்கும் செயல் எனவும் மனிதி அமைப்பைச் சேர்ந்த சுசீலா ஆனந்த், பெண்ணிய செயல்பாட்டாளர் கீதா இளங்கோவன், பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன் ஆகியோர் நீயா நானா தலைப்பில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டியும் பேசினர்.  நெறியாள்கை செய்தார் மு. குணசேகரன்.

காலத்தின் குரல் விவாதத்தின் இறுதியில் ஆண்டனி, ‘குடும்பப் பெண்கள்’ என்றொரு வார்த்தையை சொன்னார். அது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பினை கிளப்பியுள்ளது. நாகரிகமான மொழியில் எழுதப்பட்ட சில பதிவுகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்…

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்:

 

பிரீடம் ஆப் எக்ஸ்பிரசன் ஈஸ் எ ரைட் ஆஸ் வெல் ஆஸ் எ ரெஸ்பான்சிபிலிடி. ‘தமிழன் அழகனா அல்லது மலையாளி அழகனா?’ என்று தலைப்பு வைத்து விவாதிப்போம். ‘தமிழகப் பெண் அழகா அல்லது தமிழீழப் பெண் அழகா?’ என இன்னொரு தலைப்பில் விவாதிப்போம். இது கருத்துச் சுதந்திரமா இளங்கோ கல்லானை? ‘மோடி புரட்சியாளரா அல்லது பிரபாகரன் புரட்சியாளரா?’ என்று இன்னொரு தலைப்பையும் ஆந்தனிக்கு எடுத்துக் கொடுங்கள். இதுவும் கருத்துச் சுதந்திரம்தானே கல்லாணை? இவை எதற்குமே நீங்கள் பொங்க மாட்டீர்களா?

நான் ஏதோ இந்த ஆந்தனி ‘இடதுசாரிப் பெண்ணியவாதிகள்’ என்றெல்லாம் சொல்லை உதிர்த்ததால் கொஞ்சம் அறிவுள்ள ஆள் நினைத்தேன். மொக்கைத் தலை என்பது இப்போதுதான் தெரிகிறது. முதல் அலை பெண்ணிலைவாதம் என்பதே குடும்பப் பெண்களின் உரிமையில் தான் துவங்கியது. வீட்டு வேலை சமூக உழைப்பாகக் கருதப்பட வேண்டும். குழந்தைப் பிறப்பு மறு உற்பத்தியாகக் கருதப்பட வேண்டும். ஓட்டுரிமை வேண்டும். குடும்பப் பெண்களும் நடைமுறைப் பெண்ணியவாதிகள்தான்.

இந்த அறிவு கூட இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள். உங்களது ஆல்ட்டர் நேடிவ் தலைப்பு இன்னும் நீங்கள் பண்ணை மனநிலையில் இருந்து மீளவில்லை என்பதைக் காட்டுகிறது. நீங்கள் முன்வைக்கிற ‘குடும்பப் பெண்களை’ விட போராடும் ஈழ, காஷ்மீர், குர்திஸ் இதனோடு இடதுசாரிப் பெண்கள் அழகிகள்தான்.

ஜால்ரா போடப்போனால் எந்த இழிநிலைக்கும் வந்து சேரவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். முதலில் இதனை விவாதிப்போம். ‘அழகு’ என்றால் என்ன என்று பேசவோம். பிறகு உங்கள் நக்கல் நளினங்களைப் பற்றிப் பேசுவோம்.

கருத்துச் சுதந்திரம் என்பதை மூன்று தளங்களில் இருந்து அணுக வேண்டும். 1. இலட்சிய நிலை. 2. நிலவும் சட்டங்கள். 3. நடைமுறை. உலகில் இன்றும் டீபேமேஷன், இம்யூனிட்டி, லைபல் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனது விரிவாக்கம் இது : 1.ஒருவரை கேவலப்படுத்த முடியாது. 2.அமெரிக்க ராணுவத்தினர் சென்று பணிபுரியும் நாடுகளில் அவர்கள் செய்யும் குற்றங்களை அந்தந்த நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் தண்டிக்க முடியாது. 3.எவரையும் அவதூறு செய்ய முடியாது. இலட்சிய நிலைக்கும் சட்ட வரையரைக்கும் நிலவும் நடைமுறைக்கும் தொலைதூரம். இதுவே நாம் வாழும் உலகு.

லிபரல் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் முழுமையானது என ஒரு மாயையை விதைக்கிறது. பிரித்தானியப் படைகளால் ஈராக்கில் கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்து பிரித்தானியாவில் வழக்குத் தொடுக்க முடியாது.

மார்க்ஸ் உரிமை என்பதே சொத்துறவுடன் சம்பந்தப்பட்டது என்கிறார். உரிமை அரசியலின் அல்டிமேட்டம் தனிநபரது ஏகபோகச் சொத்துரிமைதான். ஆக, உரிமை என்பது முழுமையானது அல்ல. அது பிளவுண்டது. சார்பு நிலையானது. புறநிலை-நடைமுறையில் அது வர்க்கம், சாதி, இனம், பால்நிலை, இனம், மொழி போன்றவற்றினால் ஊடறுத்துச் செல்லப்படுகிறது.

சுரண்டப்பட்டவனின் உரிமையை சுரண்டலாளன் கேட்கப் போவதில்லை. ஒடுக்கப்பட்டோர் உரிமையை ஒடுக்குமுறையாளன் கேட்கப்போவதில்லை. உரிமை என்பது ஒரு அரசியல் களம். போராட்டக் களம். கருத்துரிமையும் இவ்வாறு ஒரு போராட்டக்களம். தமிழகம் என்பதும் கேரளம் என்பதும் இரு இனங்களை மொழியும் சொற்கள். ஆண்கள் என்பதும் பெண்கள் என்பதும் இரு தனித்தனி அடையாளங்கள். இலாபத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொலைக் காட்சிக்கு இதனை எக்ஸ்ப்ளாயிட் செய்ய என்ன உரிமை உண்டு? இப்படிக் கேட்பது கருத்துரிமை ஆகாதா? இதனை இலட்சிய நிலை என்பதைத் தாண்டி நடைமுறை, சட்டம் என எடுத்துச் செல்லல் ஆகாதா?

விஜய் ஒரு போதும் தனது மத அடையாளத்தை முன்னிறுத்தியது இல்லை. ஹெச். ராஜா செய்வது உரிமை மீறல். டீபேமேஷன். அரசியலைப் பேசுவதில் மதம் ஏன் ஒரு அடிப்படையாக ஆகிறது? ஆந்தனிகள் இதனை விவாதப் பிரச்சினையாக ஆக்கட்டும். இதுதான் எரியும் பிரச்சினை. ‘இவர், எவர் அழகு?’ என்பதா எரியும் பிரச்சினை? கருத்துச் சுதந்திரம் என்பது அரசற்ற சமூகம் போல ஒரு இலட்சிய நிலை. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மத, சாதி. வர்க்க, பால், இனத்துவேஷ உலகு. முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு மாயை.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கருத்துச் சுதந்திரத்தை விட ஒரு சமூகப்பகுதியின் கருத்துச் சுதந்திரம் உன்னதமானது மிஸ்ட்டர் ஆந்தனி. மைன்ட் இட்..

எழுத்தாளர் மாலதி மைத்ரி: 

நீயா நானா ஆன்டனி பதறி அடிக்க பாயும் உடல் மொழியும் ஆணவமும் பெண் கருத்தாளர்களை பேசவிடாமல் குறுக்கிடும் அராஜகமும் நீங்களெல்லாம் குடும்ப பெண்களா என்னும் திமிரும் பச்சை ஆம்பளத்தனம். ஆண்டனியின் முற்போக்கு சாயம் வெளுத்து கோரப் பல்லிளிக்கிறது. பொம்பளைங்க சேர்ந்து எங்க நிகழ்ச்சியை நிறுத்திட்டிங்களா என்ற வெறித்தனமும் விளம்பர வருவாயை இழந்த அவமானமும் தான் வெளிப்பட்டது. நடு நடுவே வெகு இயல்பா இருப்பதாக சிரிக்க முயன்றது படு அசிங்கமா இருந்தது. பெண்களின் அழகை ஒப்பிட்டுத்தான் நிகழ்ச்சி நடத்தி சம்பாரிக்கனுமென்றால் வேறு தொழில் செய்யலாம் ஆண்டனி.

இன்றைய இளம் தலைமுறை ஒப்பிட்டு அழகைப் பற்றித்தான் சிந்திக்கிறது என்னும் ஸ்டீரியோ டைப் வாதத்தை இன்று இத்தடை மூலம் இந்நிகழ்ச்சி வழியாகவும் உடைத்தெறிந்த Suseela Anand Geetha Narayanan Dhanya Rajendran க்கு நன்றி.

குடும்ப பெண்கள் வேலைக்குப் போக மாட்டார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் பத்தினி இல்லை. குடும்பப் பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குப் போக மாட்டார்கள். இந்து மதவாதி வெர்சன்.

குடும்பப் பெண்கள் நீயா நானாவை எதிர்க்க மாட்டார்கள். கார்ப்ரேட் வியாபாரி ஆண்டனி வெர்சன்.

நேற்று விவாதம் முழுக்க அழகுக்கு பின்னுள்ள பிலாசவியத்தான் பேசறோம் என்றார் ஆண்டனி. பெண் பற்றிய இவரது பிலாசபி என்னன்னு இப்ப அசிங்கமா அம்மணமாகிவிட்டது.

ஊடகவியலாளர் தயாளன்:

அந்தோணியின் கருத்துரிமையை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் பெண்களின் கருத்தை, அறிவுரை அதைக் கேட்க முடியாது என்று சொல்கிறார். ஆண்டனியை மிகச் சரியாக Expose செய்து விட்டார்கள் தோழர்கள் Suseela Anand Geetha Narayanan மற்றும் தன்யா குழுவினர். ஆண்டனி பதற்றத்தின் உச்சத்தில் சேரி பிகேவியருக்காக உங்களால் Big Bossஐ தடை செய்ய முடிஞ்சுதா? என்கிறார். என்ன சொல்ல வர்றீங்க. உண்மையான பிரச்சினை நீயா நானாவுக்கும், Big Bossக்குதான் போல? சேரி பிகேவியர் பத்தி நீயா நானாவுல ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கலாமே? நீயா நானா நிகழ்ச்சியை தடை செய்தது தவறு என்று கொதிக்கும் இதே ஆண்டனி பெண் தோழிகளை english speaking, elite journalistஆல் தடையை சாதிக்க முடிந்தது என்கிறார். மனிதிக்கு அவ்வளவு பவர் கிடையாது என்கிறார். காலாவதி ஆகும் ஒரு படைப்பாளியின் மனநிலையில் இருக்கிறார் ஆண்டனி. இரண்டு ஆண்கள் உட்கார்ந்து பெண்களுக்கு மார்க் போடுவதைப் போல கேரள பெண்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கு ஓட்டிங் சிஸ்டம் நடத்திக் கொண்டு திமிராகவும் ஆணவத்தோடவும் பேசுகிறார். இப்போதும் எனக்கு அந்த நிகழ்ச்சியை தடை செய்தது தவறு என்றே கருதுகிறேன். ஆனால் ஆண்டனி பெண்கள் குறித்தும் இடதுசாரிகள் குறித்தும் பேசும்போது அவர் காட்டும் உடல் மொழி அருவருப்பாக இருக்கிறது.

கடைசியில் நீயா நானா நிகழ்ச்சி பத்தி குடும்பப் பெண்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியாது என்று முத்து உதிர்த்தார் நீயா நானா ஆண்டனி.

நீயா? நானா? தடை செய்ய போராடியதைக் காட்டிலும் ஆண்டனியின் வக்கிரத்தையும் கோர முகத்தையும், அவர் வாயாலேயே குடும்பப் பெண்கள் குறித்த விளக்கத்தையும் expose செய்ததற்காக பாராட்டுகள்.

ஆண்டனியின் கருத்துரிமையை ஆதரிக்கிறோம்.  ஆனால் ஆண்டனியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்; உண்மையில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருந்தால் ஆண்டனி இன்னும் மோசமாக அம்பலப்பட்டு இருக்கக்கூடும். பெண்களிடம் நாம் பேசுவோம்.

உங்கள மாதிரி பெண்களுக்கு நீயா நானா பிடிக்காது; குடும்பப் பெண்களுக்குத்தான் பிடிக்கும் என்று அவர் சொல்லும்போது இதுதான் தோன்றுகிறது

எந்த பிகர் ரொம்ப நல்ல பிகர்?
தமிழ்நாடா? கேரளாவா?
இந்த கேள்விதான் ஆண்டனியின் மனதில் இருந்திருக்க வேண்டும்..

சமூக- அரசியல் விமர்சகர் சதீஸ் செல்லதுரை:

நீயா நானா அந்தோனிக்கு ஏன் இத்தனை பதட்டம் ? நியூஸ் 18ல் பெண்களை பேச விடாமல் கதறுகிறார். சத்தமா பேசினால் சரியா இருக்கும்னு யார் சொன்னா அந்தோணி?

கவிஞர் சுகிர்தராணி:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலைமுடியை வெட்டிதரும் பெண்களை, ‘மொட்டையடித்து அழகைச் சப்பையாக்குகிறீர்கள்’ என நியூஸ் 18 விவாதத்தில் இழிவுபடுத்திய நீயா நானா ஆண்டனிக்கு இருப்பது என்னவிதமான மனநிலை?

ஆமாம்..நாங்கள் பத்தினிகள் இல்லை..கற்புக்கரசிகள் இல்லை.மொத்தத்தில் குடும்பப் பெண்களே இல்லை.

எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி:

இதுவரை வெளிவந்த நீயா நானாவில் வந்த ஒருசில எபிசோட்களைப் பார்த்து கொஞ்சம் மரியாதை இருந்தது. இப்போது அந்த நிகழ்ச்சியின் கர்த்தா பேசுவதைக் கேட்ட பின் அதுவும் போய் விட்டது. ஏன் இவ்வளவு வன்மம்? பெண்களை அழைத்து நிகழ்ச்சி தயாரிப்பவர் முதலில் பெண்களை மதிக்கக் கற்கட்டும்.

குடும்பப் பெண்கள் என்பவர்கள் யார்?
என்ன ஒரு திமிர்த்தனமான பேச்சு..

செயல்பாட்டாளர் செல்வி மனோ:

ஆண்டனி சார் நீங்கள் பெண்களை சிறுமைப்படுத்துவதை எதிர்த்தது போன்றே தன்யா ராஜேந்திரனின் பதிவையும் எதிர்த்தோம். ஆனால் அவரின் தவறான கண்ணோட்டத்திற்கு பின்னால் உங்கள் தவறுகளை மறைத்துக்கொள்ளவது சிறுபிள்ளைத்தனமானது.
விவாதத்தில் சுசீலா தன்யா கீதாவின் கருத்தைகளை அனுமதிக்காமல் குரல் உயர்த்தி பேசிய போதே நீங்களும் தீலிபன் சாரும் கருத்துரிமை கோருவதற்கான தார்மீகத்தை இழந்துவிட்டீர்கள். இன்னும் ஒருபடி மேல சென்று கீதா தன் கருத்தை பதிவிட 2 நிமிடம் அனுமதி தாருங்கள் என்று கேட்டபோது “உங்கள் அறிவுரையை கேட்க வரவில்லை என்றும், மற்றவர்கள் பேச அனுமதிப்பது பழமை , குறுக்கிட்டு குரல் உயர்த்தி மற்றவர்கள் கருத்தை பிறர் கேட்க விடாமல் செய்வது புதுசு ” என்ன ஒரு நவீன சிந்தனை உங்களுக்கு.எங்கள நீங்கள் பழமைவாதிகள் என்று வேற சொல்றீங்க.


” குடும்ப பெண்கள் எதிர்க்கவில்லை” உரிமைக்காக குரல் எழுப்பிய பெண்களை பார்த்து சாதரணமாக சொல்லறீங்க. நீங்க இன்னும் கி.மு வில இருந்தே வெளியே வரல சார். உங்கள் ஆணாதிக்கத்தின் உச்சம் அம்பலப்பட்டதே அங்கதான். அந்த சொற்கள் எங்களை அவமானப்படுத்துவதாக நீங்கள் நினைத்திருந்தால் sorry sir, அது உங்களை நீங்களே அவமானம் செயது கொண்ட தருணம்.

“மொட்டை அடித்து அழகை சப்பையாக்கிட்டாங்க மனிதிகள்”
எவ்வளவு நீளம் முடிவைச்சா அழகு?!!! இளைஞர்கள் மொழி தெரிஞ்ச நீங்க சொன்னா அழகியலுக்கான வரையறையில் சேர்க்க வசதியாக இருக்கும்.

உங்களுக்கு ஊடக அறம் தெரியல அப்படின்னு நினைசசிருந்தோம்.அதை நேத்து தவிடு பொடியாக்கிட்டீங்க. எந்த அறமும் உங்களுக்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதனுடைய நீட்சிதான் தன்யாவின் பதிவிற்குள் உங்களின் ஆணாதிக்கத்தை மறைத்துக்கொள்ள முற்படுவது.

எனக்கு ஒரு சந்தேகம் சில நீயா நானா விவாதங்கள் நல்லாயிருந்துச்சே இப்படியான மனப்பான்மை உள்ள தீலிபன் மற்றும் உங்களால் எப்படி முடிந்தது?

குடும்பப் பெண்கள் . விளக்கவும்
திரு.ஆண்டனி அவர்களே.

நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆன்டனி

 

செயல்பாட்டாளர் கவிதா ராஜமுனீஸ்:

அவர் பார்வையில் குடும்ப பெண்கள் என்றால் பெண்களை எவ்வளவு இழிவு படுத்தி பேசினாலும் அதில் புரிதல் இல்லாமல் நாம் அவமதிக்க படுகிறோம் என்றே தெரியாமல் விரும்பி சுவைத்து இந்த விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் பெண்களே.

ஆவணப்பட இயக்குநர், அரசியல் செயல்பாட்டாளர் திவ்ய பாரதி:

இந்த வறட்டு பெண்ணியவாதிகள் பேசுவதை எந்த குடும்ப பெண்களும் ஏற்க மாட்டார்கள்… என்று சொன்ன நீயா நானா (ஆண்)டனி’க்கும்

சபரிமலைக்கு நல்ல குடும்பத்து பெண்கள் வர மாட்டாங்கன்னு சொன்ன அந்த சாமியார் பயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைல்ல.

எழுத்தாளர் தீபலட்சுமி:

ராஜா ராணி படத்தில் ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடூரமான முறையில் அருவருப்பாக விவரிக்கும் காட்சிகள் உண்டு. அதைக் காமெடி பகடி என்றெல்லாம் சொல்லமுடியாது. சிவாஜியில் அங்கவை சங்கவை காட்சிகளை விட 100 மடங்கு கேவலம் என்று சொல்லலாம்.  அதை நீக்கச் சொல்லிப் போராடினால் அதற்குப் பெயர் கருத்துரிமை மீறலா?

அதே போன்ற உருவம் உள்ள பெண்களின் உணர்ச்சிகளை எவ்வளவு தூரம் காயப்படுத்தும்? அவர்கள் எல்லாருக்கும் பெண்ணியப் புரிதலும் சுதந்திரமும் இருக்குமா? அவர்களுக்காக யார் பேசுவது?

உருவ அழகு முக்கியமில்லை என்ற தெளிவும் தன்னம்பிக்கையும் பெற்றவர்களைக் கூட‌ Deal with such shit with your own sensibility என்று தனித்து விடும் போக்குக்குப் பெயர் தான் Freedom of expression a??

அப்படியான காட்சிகள் தடைப்படுதல் தான் அவர்களுக்கான முதல் நீதி. அந்தக் காட்சிகளைக் கத்தரிக்காமல் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறது விஜய் டிவி. யாராவது எதிர்க்கிறார்களா?

அழகு என்று பொதுப்புத்தியில் இருப்பதைக் கொண்டாடுவதில் ஊடகத்துக்குப் பொறுப்பு இருக்க வேண்டாமா?

காயப்படுத்தாமல், பேச விட்டு எதிர்வினை ஆற்றுவது என்பதை அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பெண்களுக்குப் பொருத்திப் பார்ப்பதை விட, நிகழ்ச்சியைப் பார்க்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்குப் பொருத்திப் பார்ப்பது தான் நியாய்ம்.

Let’s be sensitive where it truly matters.

நாடக இயக்குநர், ஆவணப்பட இயக்குநர் ப்ரசன்னா ராமஸ்வாமி:

“இவங்க பேசற எதையும் குடும்பப்பெண்கள் ஒத்துக்க மாட்டாங்க…” விஜய் டீவீயுடைய அண்டனி!!!
ஆண்கள்!!

Advertisements

3 replies »

 1. நீயா?நானா?அழகு குறித்த தலைப்பில்தடைபட்டதில் மகிழ்ச்சி.போராடிய பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்.நான் ஆண்டனி சொன்ன குடும்பப் பெண்.ஆனால் பெண்ணியவாதிகளின் sleepercell..(:)

  Like

 2. // அதே போன்ற உருவம் உள்ள பெண்களின் உணர்ச்சிகளை எவ்வளவு தூரம் காயப்படுத்தும்? அவர்கள் எல்லாருக்கும் பெண்ணியப் புரிதலும் சுதந்திரமும் இருக்குமா? அவர்களுக்காக யார் பேசுவது? //
  ————-

  அதெல்லாம் சரி…. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாள முதல்ல காப்பாத்துங்கோ… பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றி பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசறேள்… அடுத்த கட்டுரையில், பெண்களை மானபங்கம் படுத்தும் கோயில் சிலைகளை இடிச்சு தள்ளுங்கோனு பாப்பார பொட்டப்பயல்களுக்கு புரியறா மாதிரி எழுதுங்கோ…

  Like

 3. பாப்பானின் தேசபக்தியும் பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:

  மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

  நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
  ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

  என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
  “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை அரபியிடமும் வெள்ளைக்காரனிடமும் வப்பாட்டியாய் அடகு வைப்பான்.

  என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

  சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

  பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

  எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

  அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

  தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

  இந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

  பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

  பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அணுஅணுவாய் ரசிப்பான்.

  அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரமென்பான், அழகர் கோயில் சுவற்றிலே அம்பாளை தேவர் ஆலிங்கனம் செய்யும் போது பேஷ் பேஷ் என்பான்.

  உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

  இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கிய பாப்பானை மண்டியிட வைக்க தந்தை பெரியாரும் ஜின்னாவும் மீண்டும் பிறக்க வேண்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s