புத்தக அறிமுகம்

#நூல் அறிமுகம்: தமிழ் மகனின் சமூக அறிவியல் கதைகள் ’அமில தேவதைகள்’!

' இயல்பு மீறிய ஏதோ ஒரு அம்சத்தை கதையில் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் நடப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் நடப்பதாகவும் மட்டும் சொன்னால் அது அறிவியல் கதை ஆகாது'
பீட்டர் துரைராஜ்
பீட்டர் துரைராஜ்
‘ இயல்பு மீறிய ஏதோ ஒரு அம்சத்தை கதையில் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் நடப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் நடப்பதாகவும் மட்டும் சொன்னால் அது அறிவியல் கதை ஆகாது’ என்று சொல்லும் தமிழ்மகனின் 18 சிறுகதைகளின் தொகுப்புதான் அமில தேவதைகள்.
‘ அறிவியலுக்கான அவசியம் கதையில் இருக்க வேண்டும். கதைக்கான அவசியம் அறிவியலில் இருக்க வேண்டும் ‘ என தமிழ்மகன் முன்னுரையில் சொல்லியிருப்பதற்கு ஒப்ப  இதிலுள்ள கதைகள் அமைகின்றன.
தமிழ் மகனின் நூல்களை வழக்கமாக வெளியிடும் உயிர்மை பதிப்பகம்தான் இதனையும் ( 150 பக்கம் / 150 ரூபாய் / டிசம்பர் 2016 ) வெளியிட்டு இருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா மீது அளவற்ற பிரியம் கொண்டவர் தமிழ்மகன். சுஜாதாவின் அனைத்து கதைகளையும் படித்து இருப்பதாக அவரிடம் காட்டிக் கொள்ள வேண்டும் , அவரிடம் நெருங்கி பழக வேண்டும் என்ற விருப்பம் தமிழ்மகனுக்கு நிறைவேறவில்லை. அதனை ஈடுசெய்யும் விதமாக ‘ அமரர் சுஜாதா ‘ கதையை எழுதியிருக்கிறார் . இதில் தமிழ் மகன் எழுதிய சிறுகதைக்கு இறந்துபோன  சுஜாதா ஈ மெயில் போடுகிறார் .
‘ எனக்கு டமில் புட்க்கும் ‘ என்று  தினமானியில் நிருபர் வேலை பார்ப்பவன் திருவள்ளுவரைச் சந்தித்து 1331 குறளை ஓலைச்சுவடியில் வாங்கும் ‘ வீடு’ கதை ;  வேற்று கிரகத்திலிருந்து ஒளி அலைகளாக வந்து சேர்ந்த ‘ மகா பெரியவரை’ வைத்து சம கால அரசியலை ஆழமாக , பார்க்கும் கதை ; இவ்வாறே துவிஜயன், பெண்டியம் மனிதர்கள் , நோவா , கடைசி புத்தகம் , நோக்கம்  போன்ற கதைகள் வித்தியாசமாக ,படிக்க சுவாரசியமாக உள்ளன.
” எட்டாயிரம் தலைமுறை, பரவசம், காலபிம்பம், காஸ்மிக் திரை போன்ற கதைகள் ஏதோ ஒரு தருணத்தில் சமூகத்தையும், அறிவியலையும் பேசுகின்றன’ ‘ என்னுடைய  அறிவியல் கதைகள் அதீத கற்பனையைக் காட்டி பிரமிக்க வைப்பவை  அல்ல. அவையும் சமூக கதைகளே.’ சமூக அறிவியல் கதை’ என பட்டியல் இட்டால் பெருமைப்படுவேன் என்கிறார் தமிழ் மகன். இந்த வரையறைக்கு உட்பட்டதுதான் இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.