கருத்து

டெங்கு சிகிச்சை; கார்ப்பொரேட் மருத்துவமனையின் கொள்ளையும் அரசு மருத்துமனைகள் மீதான ஒவ்வாமையும்

சிவசங்கரன் சரவணன்

டெங்கு பாதிக்கப்பட்ட சிறுமி ஹரியானா போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சிகிச்சையளிக்கப்பட்டும் உயிரிழந்த சோக சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது! டெங்கு இறப்புகளில் இந்த சிறுமியின் மரணம் மட்டும் பெரியளவில் கவனம் பெற்றது ஏன் என்றால் அந்த சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் சுமார் 15 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளது! 15 லட்சம் செலவழித்தும் ஒரு சிறுமி யை காப்பாற்ற இயலவில்லை என்பதே பலரது அதிர்ச்சிக்கும் காரணம்!

இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் மூலம் இரண்டு விதமான உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிகிறது!

1. 15 லட்சம் செலவழித்தும் காப்பாற்ற இயலவில்லை எனும்போது அப்ப அநியாயத்திற்கு பணம் வசூலித்துள்ளனர்!

2. 15 லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை அளித்துள்ளார்கள் என்றால் அப்ப High quality treatment அளித்தும் காப்பாற்ற இயலவில்லை!

15 லட்சம் என்பது சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்கு இயலாத தொகை என்பதால் நாம் நிலை 2 ஐ மட்டும் எடுத்துக்கொள்வோம்.

15 லட்ச ரூபாய் செலவு செய்தால் தான் அது மிகச்சிறந்த சிகிச்சை முறையாக கருதவியலாது! துரதிர்ஷ்டவசமாக ஊடகங்கள், திரைப்படங்கள், சமூகவலைதளங்கள் என தொடர்ந்து கட்டமைத்த பிம்பத்தால் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கிற அரசு மருத்துவமனைகளில் தரமற்ற சிகிச்சை அளிப்பது போலவும், அதிக கட்டணம் வாங்கிக்கொண்டு சிகிச்சை தருகிற கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தான் தரமான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. இது தவறு! இதிலிருந்து வெளியே வரவேண்டும்!

ஃபோர்டிஸ் மருத்துவமனை சிகிச்சையில் உயிரிழந்த சிறுமி ஆத்யா. படம் நன்றி: India Samvad

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் எளிய புள்ளிவிவரங்களுடன் உண்மையை எளிதாக காட்டுகிறார் :

கடந்த மூன்று மாதங்களில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மட்டும் டெங்குவிற்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை : 495

அதிலே 494 சிறார்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பினர். ஒரு சிறார் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது!

6 படுக்கைகள் கொண்ட ICU அறை 24 மணி நேரமும் தொடர்ந்து எந்நேரமும் 3 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறது! உள்நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளோடு உணவும் அரசால் வழங்கப்படுகிறது!

பூரண நலம் பெற்று திரும்பிய 494 சிறார்களின் சிகிச்சைக்காக பெற்றோர் மருத்துவமனைக்கு செலவு செய்த காசு 0!

15 லட்சம் செலவழித்தும் காப்பாற்றவியலாத செய்தியைக் கேட்டு வருந்துவது, கோப முறுவது இயல்பான உணர்வுகளே! ஆனால் எவ்வித கட்டணமுமின்றி தரமான சிகிச்சை வழங்குகிற அரசு மருத்துவமனையை ஒரு ஓரத்திலாவது நாம் பாராட்ட வேண்டாமா?!

தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் மீது ஒவ்வாமை ஏற்படச்செய்வது கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குத்தான் சாதகமாக முடியும்..!

எங்கு சிகிச்சை பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை! ஆனால் அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெற்றால் தான் அது தரமான சிகிச்சை என்ற மனோபாவத்திலிருந்து நாம் வெளியே வரவேண்டும்..!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: