புத்தக அறிமுகம்

எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்

“சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1920 களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்து வந்தன . எப்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் ; அங்கே கிடைத்த எழுத்துக்கள் தமிழ் தொடர்புடைய எழுத்துக்களாக இருக்கின்றன என்று சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது ” என்று கவலையோடு சொன்னார் தமிழ்மகன்.அந்த நேர்காணலை நடத்தியவன் என்ற வகையில் ஒரு இலக்கியவாதியிடமிருந்து அப்படி ஒரு கருத்து வந்தது எனக்கு அப்போது பெருத்த ஆச்சரியமாக இருந்தது. அதற்கான விவரிப்பு தமிழ் மகனின் புதிய நாவலான  வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகளில்  உள்ளது.இது வரலாற்று அறிவியல் நாவல் என்ற புதிய வரவாக தமிழுக்கு வந்துள்ளது. படிக்க வெகு சுவாரசியமாக உள்ளது.

கதையில் ‘ ஒருவன் அமெரிக்கன்; இன்னொருவன் தமிழ்நாட்டிலிருந்து என்றோ மலேசியாவிற்கு குடிபெயர்ந்த தமிழன் . வெவ்வேறு காலகட்டத்தைச் ( 2017 & 2037)சார்ந்தவர்கள். திடீரென ஒரு நாள்  இரண்டு பேருக்கும் தமிழ் மீது பைத்தியம் பிடித்துவிட்டது ‘.இதுதான் ஒரு வரிக் கதை. இவர்கள் இருவரும் “காலத்தையும் , தூரத்தையும் கடந்த நினைவிலி பயணம்” செய்கிறார்கள்.இவர்களை பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் , கொலையை விசாரிக்கும் அதிகாரி , ஆவணப்படம் எடுக்கும் பத்திரிக்கையாளர் வாயிலாக கதை நகர்கிறது; விளையாடுகிறார் தமிழ்மகன்.

இராசேந்திர சோழனின் கப்பற்பயணம் , மொழிகளின் வேர்ச்சொற்கள், சிந்துசமவெளி ஆராய்ச்சி, ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, கீழடி ஆராய்ச்சி, என பல செய்திகள் சொல்லப்படுகின்றன. இதற்கு நாவலாசிரியர் மிகவும் கடுமையான உழைப்பைத் தந்திருக்க வேண்டும். எது கதை, எது வரலாறு என பிரித்துணரமுடியாத அளவுக்கு ( ஆட்சி அமைத்த ஆண்டே அண்ணாவுக்கு கேன்சர் வந்த்து எப்படி?) விவரங்கள் பின்னப்பட்டுள்ளன.

திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட நாவலாசிரியரான தமிழ்மகன் மொழி பற்றி, அதற்கு எதிராக தொடர்ச்சியாக வருகின்ற ஆபத்து பற்றி உண்மையாகவே நாவல் நெடுகிலும் கவலை கொள்கிறார்; பெருமிதம் கொள்கிறார். சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் , ஐராவதம் மகாதேவன் , சர்.ஜான் மார்ஷல் , ஆர். மதிவாணன் , பூரணசந்திர ஜீவா  போன்ற எண்ணற்ற ஆளுமைகள் பற்றி , அவர்கள் பங்கு பற்றி போகிற போக்கில் குறிப்புகள் வருகின்றன. ஆரிய நாகரிகத்திற்கும் , திராவிட நாகரிகத்திற்கும் உள்ள முரண் கள் , வேறுபாடு என கூர்மையாக பேசுகிறார்.நாவல் போக்கில் இவர்  இலக்கிய ஆளுமையா அல்லது ஆராய்ச்சி மாணவரா என்ற சந்தேகம் வருகிறது. எப்படி இருந்தாலும் நாவல் வெற்றி பெற்றிருக்கிறது. சுஜாதாவிற்குப் பிறகு அறிவியல் கதை எழுத நமக்கு இவர் கிடைத்து இருக்கிறார்.  (ஆனால் சுஜாதாவைப் போலன்றி இவர் நாவலில் அடர்த்தி அதிகம் ).

இந்த நாவல் 2037ல் மலேசியாவில் தொடங்கி இந்தியா, கொரியா, அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் என பல நாடுகளில் கதை நடக்கிறது. இராசேந்திர சோழனின் கப்பற் பயணம், யவனர்களுடன் நடந்த வியாபாரம் , (மன்னனைப் பாடாத)திருவள்ளுவர், பூங்குன்றன் வருகிறார்கள். கொற்கை உள்ளிட்ட பல புராதன நகரங்கள் வருகின்றன.

சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இந்த நாவலைப் படித்துவிட்டு வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். (கதைப்படி  இவரது நூல் 2030ல் தடைசெய்யப்படுகிறது)

“திராவிட ஞாயிறு ப.திருமாவேலன் அவர்களுக்கு” ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. மானிடவியல் பற்றி , மொழி பற்றி, இலக்கியம் பற்றி பேசும் யாரும் இந்த நூலை கடந்துவிட்டு போகமுடியாது.

உயிர்மை பதிப்பகம்/ ரூ.190/182 பக்கங்கள்

– பீட்டர் துரைராஜ்.  

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.