புத்தக அறிமுகம்

ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறை இல்லையென்று ஆகுமா?: தேசிய இனப் பிரச்னையும் மார்க்சியமும் நூல் விமர்சனம்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

இந்திய ஆளும்வர்க்கத்தின் குரலாக “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூலொன்று வந்துள்ளது.தோழர். கே. சங்கர நாராயணன் எழுதியுள்ள இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் கே. சங்கர நாராயணன் ஒடுக்குகிற தேசியம் என இந்தியாவில் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை என்ற ஒன்று அவசியமில்லை என வாதிடுகிறார். தோழர் சுனிதி குமார் கோஷ் இதைக் காணத் தவறுவதாக கூறுகிறார். ஒடுக்குகிற தேசியம் இல்லை என வாதிட வருபவர்,இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகவே இல்லை என்ற பொருள்படுத்துகிறார்.

“சுய நிர்ணயம் என்ற கோரிக்கை, ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் இருக்கும் இடத்தில்தான் எழுகிறது. தேசிய இனங்கள் ஒடுக்கப்படாத இடத்தில் அதாவது முரணற்ற ஜனநாயகம் தேசிய இனங்களுக்குள் நிலவும்போது சுயநிர்ணயம் அவசியமற்றவை மட்டுமல்ல, வெவ்வேறு தேசிய இனத்துப் பாட்டாளி வர்க்கத்தினரை எதிரெதிராக நிறுத்தும் செயலாக அமைந்துவிடும்.”(மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும் பக்கம்-36)

“ஆக,தேசிய சுயநிர்ணயம், தேச விடுதலை எனும் கோரிக்கை ஒடுக்கும் தேசங்களும்,ஒடுக்கப்படும் நாடுகளும் அடிமை நாடுகளும் இருக்கும் தேசங்களில்தான் எழும்.அங்குதான் அது காலத்திற்கு ஏற்ற கோரிக்கையாக இருக்க முடியும்.இந்தியாவில் ஒடுக்கும் தேசமும் இல்லை, ஒடுக்கப்படும் தேசமும் இல்லை. ஆகவே, தேசிய சுயநிர்ணயம் என்பதும் பிரிந்து செல்ல வேண்டும் என்பதும் எவ்விதத்திலும் முற்போக்கான கோரிக்கை அல்ல. இக்கோரிக்கையுடனான அரசியல் எடுபடாது. மாறாக, இக்கோரிக்கையை முன்னிட்டுச் செய்யப்படும் இயக்கங்களால் பல மொழி பேசும் பாட்டாளி வர்க்கத்தினரிடையே முட்டலும் மோதலும் வரும்.சர்வதேசியம் வராது.”( மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும் பக்கம் 37)

“இந்தியாவில் இங்கு எந்த ஒரு குறிப்பிட்ட தேசிய இனமும் மற்றொரு தேசிய இனத்தை அடக்கி ஆளவில்லை. அடக்கும் தேசிய இனமும் இல்லை, அடங்கும் தேசிய இனமும் இல்லை.” ( மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும் பக்கம் 41)

“தேசிய இனங்களின் மொழி, இன, கலாச்சார பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசியலில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும், இவற்றையொட்டி எழக்கூடிய பிரச்சனைகளில் இந்திய முதலாளித்துவம் ஜனநாயக தீர்வுகளை அவ்வப்போது கொடுப்பதையும் பார்க்கிறோம்” ( மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும் பக்கம் 40)

“ஆஸ்திரியா, சுவிட்சர்லந்து, சோவியத், யுகோஸ்ல்லோவியா, செகொஸ்லோவியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பல தேசிய இனங்கள் இணைந்து சமமான உரிமைகளும் சலுகைகளும் பெற்ற ஒரே மைய அரசுகளின் கீழ் பல தேசிய இனங்களுக்கான பொது அரசுகள் அமைந்தன” ( மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும் பக்கம் 30)

பல் தேசிய இனங்கள் வாழும் இந்தியாவில் முரணற்ற ஜனநாயகம் கடைபிடிக்கப்படுகிறது என்றும்,ஒடுக்குகிற தேசியும் இல்லை என்பதாலும்,இந்திய மையே அரசின் கீழேயே,இங்குள்ள தேசிய இனங்கள் அனைத்திற்கும் சமமான உரிமையும் வாய்ப்பும் வ ழங்கப்பட்டுள்ளது.ஆகவே சுய நிர்ணயம் தேவையற்றது எனவும் வாதிடுகிறார். மேலும் சுய நிர்ணய கோரிக்கை  பாட்டாளி வர்க்க மோதலுக்கு வித்திடும் என்கிறார்.

முதலில் ஒடுக்கப்படுகிற தேசியம் இல்லை என்ற கேள்விக்கு வருவோம். ஒரு பல்தேசிய அரசில், ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறையும் இல்லை எனக் கூறமுடியுமா?

இந்திய அரசு அதிகாரத்தின் கீழ் தேசிய இன ஒடுக்குமுறை,சமமற்ற நிலையும் ,ஏற்றத்தாழ்வுகளும் புறநிலை எதார்த்தமாக உள்ள சிக்கல்.ஒடுக்கும் தேசிய இனமில்லை எனவே ஒடுக்குமுறையும் இல்லை என்ற வாதமானது அப்பட்டமான ஆளும்வர்க்க சந்தர்ப்பாவாத சொல்லாடல். மார்க்சியத்தின் பெயாரால் மார்க்சிய ஆன்மாவை சிதைத்து, மார்க்சியத்தை உயிரற்ற கூடாக சவப்பெட்டியில் புதைக்கிற வேலையை மார்க்சியத்தின் பேரால் திரு கே. நாராயணன் மேற்கொள்கிறார்.

பல்தேசிய அரசில், ஒடுக்குகிற தேசியம் இருந்ததுதான் பிற தேசிய இனங்களை ஒடுக்கவேண்டும் என்றில்லை. ஒடுக்குகிற அரசு வடிவும் போதுமே அதை செய்ய.இந்திய மைய அரசானது,தனது அரசியல் சாசனம், ராணுவம், போலீஸ் படைபலம் கொண்டு பிற தேசியங்களை ஒடுக்கி வருகிறதே.இதை புறநிலை எதார்த்தம் இல்லை என மறுக்க இயலுமா?

திரு கே சங்கர நாராயணன் அவர்கள், ஒரு காஷ்மீரியனிடம் சென்று, ஐயா நான் மார்க்சியன், பாட்டாளி வர்க்க விடுதலைக்காக போராடுகிறவன். மேலும் நான் ஒரு சர்வதேசியவாதி. ஆனால் பாருங்கள், இந்தியாவில் ஒடுக்குகிற தேசிய இனம் ஒன்று இல்லை, ஆகவே ஒடுக்குமுறையும் இல்லை. மேலும் இந்தியாவில் ஜனநாயகம் முரணற்று உள்ளது. இதை நீங்கள்  புரிந்துகொண்டே ஆக வேண்டும். இந்திய முதலாளித்துவம் அரசு அனைத்து தேசிய இன மக்களுக்கும் ஜனநாயகம் தீர்வை வாய்ப்பிருக்கிற போதெல்லாம் வழங்கியுள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிந்து போக வேண்டும் என்ற உங்கள் போராட்டமானது, முரணற்ற ஜனநாயகத்தை கடைபிடிக்கிற இந்திய பாராளுமன்ற ஆட்சிக்கு எதிரான முரணுடைய கோரிக்கை ஆகும். உங்களின் சுய நிர்ணய கோரிக்கைக்கு பொருள் இல்லை. அது முற்போக்கு அல்ல. பிற்போக்கு என கூறுவதாக வைத்துக் கொள்வோம்.

அந்த காஷ்மீரியரின் மறுமொழி என்னவாக இருக்கும் என்பதை நூலாசிரியரின் யூகத்திற்கே  விட்டு விடுகிறேன். ஒடுக்குகிற தேசியம் இல்லை என தொடங்கி, ஒடுக்குமுறை இல்லை என தொடர்ந்து, இந்தியாவை முரணற்ற ஜனநாயக நாடு ,தேசிய இன உரிமைகளை இந்திய அரசு ஜனநாயகப் பூர்வமாக தீர்வை வழங்கி விட்டது என சான்றளித்து இறுதியில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், கோரிக்கைகள் முற்போக்கானதல்ல எனக்  கூறுகிற கருத்தானது, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்கிற கருத்தாகும். இது மார்க்சிய விரோத கருத்தாகும்.

மேலும், முதிர்ந்த முதலாளித்துவ ஜனநாயக நாடான சுவிட்சர்லேந்தையும்,(பிரிந்து போகும் உரிமையுடன்)சுயர் நிர்ணய உரிமையுடன் குடியரசுகளின் கூட்டமைப்பாக அமைக்கப்பட்டுள்ள சோவியத் சோஷலிச குடியரசையும், ஆறு குடியரசுகளின் கூட்டமைப்பான சோசலிச யூகோஸ்லாவியாவையும் இந்தியாவோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறான முரணான வாதமாகும். நேரு காங்கிரஸ் அரசாங்க பிரதிநிதியும் கூட இப்படியொரு பொருத்தமற்ற ஒப்புமையை வழங்கியிருக்க மாட்டார், ஆனால் எந்த கூச்சமும் இன்றி  மார்க்சிஸ்ட் நாராயணன் அதை செய்கிறார். தேசிய இனப் பிரச்சனையை ஜனநாயக ரீதியாக தீர்த்த முன்னால் சோவியத் அரசு எங்கே ,பல் தேசிய இனங்களை பலவந்தமாக பிடித்து வைத்துள்ள இந்தியா எங்கே? இரண்டும் இரு எதிர் எதிர் துருவங்கள் என்பது அடிப்படை ஜனநாயக அறிவுடைய ஒருவருக்கு அதன் முதல் தோற்றத்திலேயே விளங்கிவிடும்.

இந்தியா எனும் “முரணற்ற ஜனநாயக” நாட்டில்,”பல்தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தை” இந்திய முதலாளித்துவ அரசு எவ்வாறு “ஜனநாயகப் பூர்வமாக” “தீர்த்துள்ளது” என்பதை சற்று பார்ப்போம்.

அருண் நெடுஞ்செழியன், அரசியல்-சமூக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.