சர்ச்சை

ஒரு சோடா பாட்டிலுக்குள் இத்தனை கதைகளா?

ஸ்ரீரசா

ஸ்ரீரசா

வைரமுத்து பேச்சைத் தினமணியில் வைத்தியநாதன் தெரியாமல் ஒன்றும் வெளியிடவில்லை. அவருக்கு ஆண்டாள் எப்போதும் அந்நிய மதக் கடவுளே. அதாவது வைணவ மதக் கடவுள். வைணவ மத புனித பிம்பம். அதன் மீதான வில்லங்கமான எதிர்வினை வரும் என்று தெரிந்தேதான் அவர், மற்றும் அவர்கள் இதனைச் செய்திருப்பர்.

அதன் அடுத்து தொடர்ச்சியாக பந்தை எட்டி உதைக்கிறவர் எச்.ராஜா. ஆண்டாள் பஞ்சாயத்தை சைவ எச்.ராஜா ஆரம்பித்து வைத்ததற்கு நுணுக்கமான உள்நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் மூலம் வைணவர்களின் புனித பிம்பமான ஆண்டாளை ஊரே தாசி எனப் பேசும் என்ற தன் வக்கிர நாடகத்தை அவர் நிகழ்த்திக் காட்டினார்.

அதன் மூலம் வைணவ அய்யங்கார்களை, முக்குலத்தோர் இணைப்பிலிருந்து வெட்டி விடும் நுண் அரசியலை நிகழ்த்த முனைந்தார்கள். கமலஹாசன் தேவர் மகன் படம் எடுத்ததும், அதில் ஒரு ஐயங்கார் வக்கீல் மட்டுமே அவர்களோடு தொடர்ந்து படம் முழுக்கப் பயணிப்பதும் தற்செயலானதல்ல.

வைணவர்களின் நுணுக்கபுத்தி வேலைசெய்யாமல் அவர்கள் எச்.ராஜா, வைத்தியநாதன் விரித்த வலையில் வீழ்ந்தார்கள். வைரமுத்துவை நோக்கித் தங்கள் தாக்குதல் இலக்குகளைத் திருப்பினார்கள். வைரமுத்து கேட்ட பாரம்பரிய மன்னிப்போடு அவர்கள் கதையை முடித்திருந்தால் புத்திசாலிகளாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எச்.ராஜா வகையறா அதாவது சைவ ஐயர் வகையறா விரித்த வலையில் வகையாகச் சிக்கினார்கள். விளைவு பாரதிராஜா அரிவாளைக் கையிலேந்த வைத்துவிடாதீர்கள் என்று விடுத்த அறிக்கை. அதாவது ஐயங்கார் முக்குலத்தோர் முறிவின் அறிகுறி தெரிய ஆரம்பித்தது. ஜெயலலிதா என்கிற ஐயங்கார் பிம்பத்தின் மிக அணுக்கமான அடிப்படையாக இருந்தது முக்குலத்தோர் என்கிற பின்னணியையும் சேர்த்துப் பாருங்கள் கணக்குப்புரியும்.

இதனை நுணுக்கமாக உணர்ந்த, வைணவ ஜீயர்கள், கதையை ஆரம்பித்து வைத்த வைத்தியநாதனைச் சரியாகக் குறிவைத்துக் காய் நகர்த்தினர். வைத்தியநாதனைத் தினமணி ஆசிரியர் பொறுப்பிலிருந்தே கழட்டிவிடும் வேலையைச் செய்ய முயன்றனர்.

வைத்தியநாதன் பிழைப்புக்கே உலையாகிவிட்டதென்று துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிப்போய் ஆண்டாள் சந்நிதியில் நெற்றியில் நாமம் போட்ட ஜீயர்கள் காலடியில் நெற்றியில் திருநீற்றுப் பட்டை பளபளக்க விழுந்து எழுந்தார்.

தம் படங்களுக்கு அருமையான பாடல் எழுதிய வைரமுத்து பற்றி வாய் திறக்காத கமலஹாசன், தமிழ்த்தாய் வாழ்த்துப் பஞ்சாயத்துக்கு நுணுக்கமாக வாய் திறக்கிறார். அதாவது கண்ட கண்ட எடத்துல ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறீர்கள் என்று கேட்கிறார். அதாவது சைவ வெறியன் அமர்ந்துள்ள இடத்தில், அங்கீகாரமற்ற சங்கரமடத்தின் போர்ஜரிக்கள் முன்னால் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுகிறீர்கள் என்று சொல்லாமல் சொல்லித் தன் வைணவ அரசியலை முன்னெடுக்கிறார்.

அடுத்ததாக, இரண்டாவது இன்னிங்ஸ்…
இப்போது, காஞ்சி சின்ன காம கோடி சின்னவாள் கண்ணை மூடி விழுந்தா… ஊடகங்களில் களைகட்டியது….

இந்தப் பின்னணியில் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதைத் தலித் என்பதற்காகத்தான் வழங்கினார்கள் என்று புதியதொரு சர்ச்சையை அது ஆரம்பித்து வைக்கிறது…

ஜீயர், என்னடா இது தலைப்புச் செய்தியிலிருந்து தாம் மறைந்து போவதா என்று, பாட்டில்களை எடுத்து வீச ஆரம்பித்துள்ளார்…

தமிழகத்தில் அய்யங்கார்களின் அதிகாரத்தை ஒழித்து, ஐயர்களின் அதிகாரத்தை நிறுவுகிற நுண் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

செயல் தலைவர்களும் இந்த விளையாட்டின் பந்து நகர்த்துனர்களே…

ஸ்ரீரசா, எழுத்தாளர்.

One comment

  1. “ஆண்டாள்” “தமிழ்த்தாய்” விவகாரங்களை, ஆரியம் எதிர் திராவிடப் பிரச்சனையாகப் பார்க்காமல், சைவம் எதிர் வைணவம் பிரச்சனையாக பார்க்கவேண்டும் எனும் கருத்தை இக்கட்டுரை முவைக்கின்றது. இக்கோணத்திலும் இப்பிரச்சனையை அணுகுவது அவசியம். வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகள் எப்போதுமே ஒரு விவகாரத்திற்கான உண்மைப் பிரச்சனையைக் கண்டுகொள்ள முற்படமாட்டார்கள் போலும். தத்தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கில்தான அதை நோக்குகிறார்கள். தமிழ்நாட்டின் உள் முரண்பாடுகளை அடியொட்டி எழும் பிரச்சனைகள் அனைத்தையும் கூட “இந்துத்துவம்” எதிர் “திராவிடம்” என்றுதான் அணுகுவர்கள். அதுதான் தமிழ்நாட்டு ஆழும் வர்க்கத்துக்குப் பாதுகாப்பானது.

    Like

agowrikanthan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: