இடதுசாரிகள்

பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையில் உள்ள சிக்கல்: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

“இந்திய இடதுசாரிகளின் சிக்கல்” என்ற தலைப்பில் தோழர் பிரபாத் பட்நாயக் கட்டுரையொன்றை (http://macroscan.org/cur/dec17/pdf/Indian_Left.pdfon 17-Dec-2017) வெளியிட்டிருந்தார். இரு பகுதிகளான அந்த கட்டுரையில், முதல் பகுதியை மட்டுமே இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்கிறேன்.

இந்திய இடதுசாரி அணிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் மையமானது சீர்திருத்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் இடையிலான இயக்கவியலை சரியாக புரிந்துகொள்ளாதன் விளைவாகும் (கட்டுரையின் முதல் பகுதி) என பிரபாத் பட்நாயக் கருதுகிறார்.

புரட்சி – இந்த அரசமைப்பு வடிவில் நீடித்துக்கொண்டு சமுதாய சீர்திருத்தத்தை மேற்கொள்ளமுடியாது என்ற நிலைப்பாட்டை கொண்டது.

சீர்திருத்தம் -இந்த அரச அமைப்பில் எல்லைகளுக்குள்ளாகவே சாத்தியமாகிற அனைத்துவழிகளிலும், சமுதாய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது.

என்கிற நிலையில் இருந்து புரட்சிகர கம்யூனிஸ்ட்களுக்கும் பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களுக்குமான முரண்பாட்டை பேசுகிறார்.

புரட்சி நடத்துவதற்கான காலம் கனிகிற வரையிலும், குறிப்பான நேரத்தில் மக்களை புரட்சியை நோக்கி அணிதிரட்டுகிற வரையிலும் காத்திருக்காமல்,சாத்தியமாகிற அனைத்து நேரத்திலும் வழிகளிலும் சீர்திருத்தத்தை மேற்கொள்வதே புரட்சிகர நடவடிக்கையாகும் என்கிறார்.

கடந்த காலத்தில் குறிப்பாக 1960 களில் மற்றும் 1990 களில் போராட்டங்களின் வழியே சாத்தியமககப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், மத்திய மாநில உறவுகளை மறுகட்டமைத்தல், கேரளாவில் சேம நல அரசை உருவாக்கியது போன்ற பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களின் ஊடாக பெற்ற சமூக ஜனநாய சீர்திருத்தத் நலன்களை மேற்கோள் காட்டுகிறார். அரசுக்கு எதிராக ஆயுதப் போரட்டத்தின் வழியே போராடுகிற மாவோயிஸ்ட்களுகும் பாராளுமன்ற தேர்தல் பாதையின் வழி அரசுடன் போராடுகிற பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களுக்கு இடையிலான முரண்பாடானது இவ்வாறாக சீர்திருத்திற்கும் புரட்சிக்கும் இடையிலான இயங்கவியலை புரிந்துகொள்ளத்தான் விளைவாகும் எனக் கருதுகிறார்.

முதலில் புரட்சியை உடனடியான சீர்திருத்தமாகவும், சீர்திருத்தங்களை நீண்டு செல்கிற புரட்சியாகவும் தோழர் பிராபாத் பட்நாயக் கருதுவதே முரணானதாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் பெர்னைஸ்ட்டைன் முன்வைத்த திருத்தல்வாத கோட்பட்டிற்கு நெருக்கமாகிறது பிராபாத்தின் வாதம். பெர்னைஸ்ட்டைனுக்கு எதிரான ரோசா லக்சம்பர்க் வாதத்தையே (புரட்சியா?சீர்திருத்தமா? என்ற ரோசாவின் கட்டுரையிலிருந்து) நான் இங்கு பிரபாத்திற்கு மறுப்பாக முன்வைக்கிறேன்.

சமூக ஜனநாயக போராட்டத்தின் அன்றாட செயல்பாடு என்பது அரசியல் அதிகாரத்தை நோக்கியதாகும். புரட்சியால் பெறப்பட்ட அரசியல் அதிகாரத்தின் பயன்பாடு மூலமாக நிலவுகிற சமுதாய வடிவத்தை மற்றொரு முன்னேறிய வடிவத்திற்கு மாற்றிச் செல்வதைக் குறித்ததாகும்.

புரட்சி என்பது அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற அரசியல் கேள்வியை பற்றியது.மாறாக சமூக ஜனநயாக சீர்திருத்தல்வாத கோரிக்கையை பற்றியதல்ல மட்டுமே அல்ல. சமூக ஜனநாயக கோரிக்கையில் முற்போக்கானதை தேர்ந்துகொள்வது மட்டுமல்ல. முதலாளித்துவ எல்லைக்குள்ளாக சமூக சீர்திருத்த நலன்களை போராடிப் பெறுவது பற்றியது மட்டுமே அல்ல. அதாவது முதலாளித்துவ பாராளுமன்ற வடிவத்துடன் ஒத்துழைப்பதா அல்லது ஏற்காமல் ஆயுதப் போராட்டத்தை முன்வைப்பதா என்பது பாட்டாளி வர்க்கமானது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்த பிரச்சனையே தவிர சமூகப் பொருளாதார சீர்திருத்தை குறித்த பிரச்சனையல்ல!

இங்கு பிரபாத் பட்நாயக் “பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களின் “முதலாளித்துவ பாராளுமன்ற போராட்டத்தில் சோசலிசக் குணாம்சம் இருப்பதாக கருதுகிறார். அதாவது உடனடி நிவாரணம் கருதி, முதலாளித்துவ சட்டகத்திற்குள் இருந்தபடியே சமூக ஜனநயாக கோரிக்கைகைகளை முன்னெடுப்பதை புரட்சிகரமானது என்கிறார். விஷயம் என்னவென்றால் தொழிற்சங்க போராட்டமும் நாடாளுமன்ற போராட்டமும் ஆட்சி அதிகாரத்தை(முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதல்ல)கைப்பற்றுவதற்கான இலக்கில் பயணிக்கிற வரையில் மாறுபாடு இல்லை. பாட்டாளி வர்க்க உணர்வு கூர்மை பெறாத சூழலிலோ, சமூகப் புரட்சிக்கான புறநிலை சூழல் கனியாத நிலையிலிலோ முதலாளித்துவ நாடாளுமன்றத்தை அரசியல் அம்பலப்படுத்தலுக்காக பயன்படுத்துவதில் மாறுபாடு இல்லை. மாறாக கம்யூயனிச இயக்கத்தின் அன்றாசெயல்திட்டமானது சமூக ஜனநாயக சீர்திருத்தம் எனும் பொருளாயத நோக்கத்தை குறித்தவை மட்டுமே அல்ல என்பதுதான்!
மேலும் வர்க்க அரசின் எல்லைகளுக்குள் சமூக ஜனநாயக கோரிக்கைகளை பெறுவது என்பது, வரலாற்று சூழலில் அந்த வர்க்க அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை பொறுத்தே அமையமுடியும். அதாவது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முதலாளிய வர்க்க பிரதிநிகள் ஆளும்போது, ஏனையே வர்க்கங்களில் ஒப்புதலை பெறுவதற்கோ, பகைமையை தணிப்பதற்ககோ, தனிப்பட்ட நலனை சமுதாய பொது நலனுக்கான ஆட்சியாக கட்டமைப்பதற்கு, சமுதாயத்தில் “உணர்வுப்பூர்வமான” தலையீட்டை மேற்கொள்கிறது. இந்திய அரசைப் பொறுத்தவை, இவ்வகையான உணர்வுப்பூர்வ தலையீடுகள், நேரு காலத்தில் இருந்தே சற்று கூடுதலாக இருப்பதே குழப்பத்திற்கு காரணமாக உள்ளன. சிபிஎம் அறிவுஜீவிகளைப் பொறுத்தவரை, உலகமயப் பொருளாதாரத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை துண்டித்து கொண்டால் மட்டுமே போதுமானது. ஏனையே சமூக சீர்திருத்தங்கள் யாவையும் நிலவுகிற இந்திய முதலாளித்துவ பாராளுமன்ற எல்லைகளுக்குள்ளாக சமாதானமாகப் பெறுவது என்ற நோக்கை மையப்படுத்தியே உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உலக சூழலில் இந்த சேம நல அரசு, அதாவது முதலாளித்துவ அரசின் கூடுதலான உணர்வுப்பூர்வ சமுதாய தலையீடுகளின் காலம் தாராளமய கட்டத்தின் தொடக்கத்தோடு காலவாதியாகிவிட்டது. கடந்த கால சேம நல அரசின் சமூகப் பொருளாதார சீர்திருத்தங்கள், முதலாளித்துவ நெருக்கடி காலகட்டத்தில் சாத்தியமற்றதாகிறது.

இந்த நெருக்கடியான காலகட்டங்களின், தொழிற்சங்க போராட்டங்களும் சமூக சீர்திருத்தங்களுக்கான போரட்டங்களில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற இறுதி லட்சியத்தை பற்றியது என்ற உணர்வானது பாட்டாளி வர்கத்த்திற்கு ஒவ்வொரு படித்ததிலும் ஊட்டப்படவேண்டும். மாறாக தொழிற்சங்கப் போராட்டமும் சமூக சீர்திருத்த போராட்டங்களும் அரசியல் அதிகாரக் கேள்வியில் இருந்து பிரிக்கப்பட்ட பொருளாயத போராட்டங்களை மையமிட்டே செயல்படுமானால் அது அப்பட்டமான திருதல்வாத போக்கிற்கு இட்டுச் செல்வதாகும்..

உலகெங்கிலும் தாராளமய பொருளாதார கொள்கைகளின் தீமைகளால் பாதிப்பை எதிர்கொண்ட பாட்டாளி வர்க்கம், விவசாயிகள், சிறு வணிகர்கள் போன்ற பிரிவினர், வெறியூட்டல் தேசியவாதிகளால் சுவீகரிக்கப்பட்டுவருகின்றனர். முதலாளித்துவ அமைப்பின் சொந்த நெருக்கடிகளுக்கான காரணத்தை இஸ்லாம் வெறுப்பு, புலம்பெயர் அகதிகள் வெறுப்பு என்கிற பொய்க் காரணங்களின் மடை மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்தியாவில் மோடி அரசாங்கம், அமெரிக்காவின் ட்ரம்ப் அரசாங்கம் இதன் நடைமுறை உதாரணமாக உள்ளனர். இந்த சூழலில் பழமைவாத கன்சர்வேட்டிவ்களுக்கு எதிரான போராட்டமானது, தாராளமய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக முடியகூடாது. மாறாக பாட்டாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற வேலைத்திட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஊன்றி நிற்க வேண்டும்.

அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.