அரசியல் இந்தியா இந்துத்துவம்

“கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்காத நிலையில் பாஜகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையை அரங்கேற்றி வருகின்றன. இடதுசாரி அரசியல்வாதிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனா நகரத்தின் கல்லூரி சதுக்கத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் ஜெசிபி இயந்திரம் துணையுடன் அகற்றினர். லெனின் சிலை மண்ணில் வீழ்ந்தபோது ‘பாரத் மா கி ஜெய்’ என அவர்கள் முழங்கினர். இது வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இடதுசாரிகளுக்கு ஆதரவாக பல குரல்கள் நாடு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ள கருத்து பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன.

புரட்சியாளர் லெனின் சிலை தகர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “இன்று லெனின் சிலையை தகர்ப்பார்கள், விரைவில் காந்தி, சுபாஷ் சந்திர போஸ், தாகூர், சுவாமி விவேகானந்தர், பிர்சா முண்டா சிலைகளை அடித்து நொறுக்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

“என்னுடைய கொள்கை சிபிஎம்மிலிருந்து வேறுபட்டிருக்கலாம். ஆனால்,லெனின் போன்ற தலைவர்களின் சிலையை அழிக்க நினைப்பவர்களை நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன். திரிபுராவின் முன்னேற்றம் குறித்து சிந்திக்காமல் பாஜகவினர் வன்முறையை கட்டவிழ்ப்பது துரதிருஷ்டமானது. அவர்கள் பிரித்தாளும் அரசியலை மட்டுமே நம்புகிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இது என்ன விதமான அரசியல்? நான் உயிரோடு இருக்கும் வரை, இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தொடர்ந்து இதை எதிர்த்து போராடுவேன்.

அவர்களுக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் அரசியல் ரீதியாக போராடட்டும் பார்ப்போம். பாஜகவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்தான் என பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர்(அமித்ஷா) சொன்னாராம். நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்..என்னுடைய அடுத்த இலக்கு டெல்லி!” என்றவர்,

“நாங்கள் வங்காளத்தில் ஆட்சி அமைத்தவுடன் மாற்றம் வேண்டுமென்றோம்;பழிவாங்களை அல்ல என்று அறிவுறுத்தினோம். நாம் ஒருபோதும் வன்முறையை ஊக்குவிக்கவில்லை. தலைவர்களின் சிலைகளை தகர்ப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை குலைக்கக்கூடாது” என முடித்தார்.

news source: News18

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.