கருத்து

”உங்கள் கதைகளுக்காக அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்”

நம் ஊரில் இத்தனை பெண்கள் குழுவாக இப்படி ஒரு நிகழ்வுக்கு வர எவ்வளவு தடைகளைத் தாண்ட வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றையும் களைந்து அவர்கள் வெளிவர வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து கைபிடித்து கூட்டிச் சென்றவர்களை உங்கள் கதைகளில் அடைக்காதீர்கள்.

சிந்து பைரவி

மலையேற்றத்திற்குச் சென்று காட்டுத்தீயில் உயிர் விட்டவர்களை வார்த்தைத் தீயில் வாட்டியெடுக்கும் ஊடகங்களுக்கு,

சென்னை டிரெக்கிங் கிளப் என்பது 10 வருடங்களாக சென்னையில் மலையேற்றம், மாராத்தான், டிரயத்லான், சைக்ளிங், நீச்சல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தி அதன் மூலம் பல நூறு இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திசை காட்டியது.

அனைத்து நிகழ்வுகளுமே லாப நோக்கம் இல்லாமல் செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளும் முறையிலேயே நடத்தப்படும். முக்கியமாக முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படுபவை. எனவே காசுக்காக நடத்தப்படும் குழு என்பவர்கள் சற்றே மூடுங்கள்.

மலையேற்றங்கள் அனைத்துமே பல வருட அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்படும். இதற்காக தனிப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேறுபவர்கள் மட்டுமே அழைத்து செல்லப்படுவார்கள். அதிலும் CTCயின் மரம் நடுதல், கடற்கரை சுத்தீகரிப்பு, ரத்ததானம் போன்ற மற்ற தன்னார்வல நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதனால் அவர்கள் குடிக்கவோ கும்மாளமிடவோதான் அங்கு சென்றார்கள் என்று கதை கட்டுபவர்கள் நிறுத்துங்கள்.

அந்த குழுவில் சென்ற ஆண்கள் இருவரும் பலவருட அனுபவம் கொண்டவர்களும் நாடு முழுதும் பல்வேறு மலைகளில் ஏறியவர்களும் ஆவார்கள். ஆர்வக்கோளாறுகள் என்று ஒற்றை வார்த்தையில் வரையறுக்காதீர்கள்.

உங்கள் கதைகளுக்காக அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்.

நம் ஊரில் இத்தனை பெண்கள் குழுவாக இப்படி ஒரு நிகழ்வுக்கு வர எவ்வளவு தடைகளைத் தாண்ட வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றையும் களைந்து அவர்கள் வெளிவர வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து கைபிடித்து கூட்டிச் சென்றவர்களை உங்கள் கதைகளில் அடைக்காதீர்கள்.

நடந்தது ஒரு விபத்து. அவர்கள் எல்லாரும் அதில் பலியாகி இருக்கிறார்கள். அந்தத் தீயில் கருகியது பல கனவுகள். பல போராட்டங்கள். கொஞ்சமேனும் மரியாதைக் கொடுங்கள்.

காடுகளையும் மலைகளையும் நேசித்த உயிர்களை இழந்திருக்கிறோம். உயிரற்ற சடலங்களையும் உயிருக்குப் போராடும் பெண்ணின் படத்தையும் போட்டு டீஆர்பி ஏற்றத் துடிக்கும் உங்களைப் போலல்லாமல் பிற உயிர்களுக்காக நிஜமாய்த் துடித்த நன்மனங்களை இழந்திருக்கிறோம். எங்களுக்காக எப்போதும் தயாராய் இருந்த நண்பர்களை இழந்திருக்கிறோம்.

எங்களுக்குத் தெரியும் அந்த உடல்களில் ஆகக்கடைசி மூச்சு இருந்த வரை எல்லா உயிர்களையும் காப்பாற்ற மட்டுமே அவர்களின் இதயம் துடித்திருக்கும் என்று.
அந்த முயற்சியில் தோற்றே அவர்கள் உயிர்கள் போயிருக்கும்.

அவர்கள் காப்பாற்றிய உயிர்கள் அறியும் எங்கள் நண்பர்களைப் பற்றி.

உங்களுக்கு என்ன கவலை. நீங்கள் போய் உங்கள் அரசியலையும் வியாபாரத்தையும் கவனியுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.