கருத்து

ஸ்டீபன் ஹாக்கிங்:தமிழர்களின் கண்ணீரில் மிதக்கும் “கால” கொடுமை

ப. ஜெயசீலன்

ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்த பொழுது தமிழ் முகநூல் பரப்பில் ஒரு பெரும் சோகம் கவிழ்ந்ததை நினைவு கூறுகிறேன். தரமான ஒரு கூறு ஆப்பிள்களை சல்லிசான விலைக்கு பசி பிணியில் வாடும் ஆதரவற்ற  குழந்தைகளுக்கு தினமும் விற்று பிழைத்து வாழ்ந்த ஆயா இறந்தால் அந்த குழந்தைகள்  எப்படி வருந்துமோ அப்படி வருந்தினார்கள் ஆப்பிள் பொருட்களை எதற்கு வாங்குக்குகிறோம் அல்லது ஏன் வாங்க விரும்புகிறோம் என்றே தெரியாமல் வாங்கியும்/ஏங்கியும் வந்த  நம் ஊர் குழந்தைகள். அய்யயோ இனிமே ஆப்பிள் கம்பனியின் நிலைமை என்னாகுமோ என்று ஒய்யால குடுத்த காசுக்குமேல கூவுராண்டா என்று என்னை திகைக்க வைத்த பதிவுகளும் அதில் உண்டு. அமெரிக்கர்களே ஆப்பிள் நிறுவனரின் சாவிற்கு அவ்வளவு பதறியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஆப்பிள் என்னும் நிறுவனத்தை மிகுந்த லாபகரமான நிறுவனமாக நிர்வகித்த ஒரு திறமையான, மிக கறாரான, கடுமையான, பாரபட்சமற்ற லாபநோக்கோடு, வெற்றிகரமாக நிர்வகித்து 56 வயதில் இறந்த ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இறந்ததற்கு நம் ஊரில் கவிழ்ந்த சோகம் நமக்கு எதை உணர்த்துகிறது?  100,200 டாலர் பெறாதா சீன தயாரிப்பை ஆப்பிள் லேபிள் ஒட்டி 700,800 டாலருக்கு விற்ற தில்லாலங்கடியாக இருந்தாலும் இயற்கையின் நடைமுறையின் மண்டியிடத்தான் வேண்டும் என்னும் உண்மை முகத்தில் அறைந்ததால் ஏற்பட்ட சோகமா? கூட இருந்த நண்பனின் கண்டுபிடிப்பையும், நண்பனோடு சேர்ந்து தொடங்கிய நிறுவனத்தையும் தந்திரமாய் தனதாக்கி கொண்டவரின் தந்திரம், மரணத்தின் முன் செல்லுபடியாகவில்லையே என்கின்ற பேருண்மை புரிந்து, எத்தனை கோடி பணம் குவித்தாலும் வாழ்வின் நிரந்தரத்தனமை நமக்கு எப்போதும் அருகில்தான் உட்கார்ந்திருக்கும் என்னும் உண்மை புலப்பட்டதால் ஏற்பட்ட பயத்தில் ஏற்பட்ட சோகமா?
இவை காரணங்களாக நான் உணரவில்லை. அப்படியென்றால் ஒருவேளை அடிப்படை மானுட நாகரீகம் கருதி யாறிறந்தாலும் அது சோகம்தானே..காசா பணமா ஒரு rip போட்டு வைப்போம் என்று போட்டிருப்பார்களோ ? அப்படியென்றால் தினமும் நம்மூரில் எத்தனையோ அநீதியின் பேரில் எத்தனையோ உயிர்கள் பறிக்கப்படுகிறதே ? குறிப்பாக 2 ஆயிரம் வருட பொறுக்கித்தனமான சாதியின் பெயரால் எத்தனையோ உயிர்கள் பறிக்கப்படுகிறதே, அப்பொழுதெல்லாம் இவர்கள் நவத்துவரங்களையும் மூடிக்கொண்டு அக்கினிவெயில் சாலையில் விழுந்து கெட்டிப்பட்ட மாட்டுச்சாணியை போலிருந்தார்களே அதை எப்படி புரிந்து கொள்வது? சரி basic courtesyம் கிடையாது, தத்துவார்த்த காரணங்களும் கிடையாது…அப்படியென்றால் என்னவாகவிருக்கும் என்ற கேள்விக்கு ஆணித்தரமாக பதில் சொல்லியிருக்கிறது இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கின்சின் மரணம்.
இருபது வயதில் இறந்திருக்க வேண்டியவர் 76 வயது வரை தனது உடல் நல குறைபாடுகளையெல்லாம் தாண்டி ஒரு மிக முக்கியமான இயற்பியல் பங்களிப்பை அளித்து, அதோடு மானுடத்தை வழிநடத்த வேண்டியது, கூடியது அறிவியல்தானே தவிர கடவுள்களும் மதங்களும் அல்ல என்ற புரிதலை விரிவாக, வலுவாக விதைத்து மறைந்திருக்கிறார். கம்பீரமான, கண்ணியமான வாழ்வு. வாழ்வின்மீதும் வாழ்தலின் மீதும் பற்றுதலையும்/தீவிரத்தையும் விதைக்கக்கூடிய உதாரண மனிதர். சிறப்பு. நன்று.
அவரின் மரணத்திற்கு சமூக வெளியில் கண்ணை கசக்கியவர்களும், இரங்கற்பா பாடியவர்களும், கவிதை எழுதியவர்களும் யார்? பாவம் ஜீ, சக்கர நாற்காலியில ஒக்காந்துகிட்டே பல ஆராய்ச்சி பண்ணியிருக்காப்ல…மனசு கஷ்டமா இருக்கு ஜி என்கின்ற ரீதியில் பீல் பண்ணுகிறவர்கள் ஒரு வகையில் ஸ்டீபனை சிறுமை படுத்துகிறார்கள் என்றாலும் பரவாயில்லை.பாதகமில்லை. அவர்களை விட்டுவிடலாம். ஹிந்து மதம்போன்ற அயோக்கியத்தனமான மதத்தை பின்பற்றிக்கொண்டு, சாதி பார்த்து, ஜாதகம், நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து கொஞ்சம் கூட உடல்/மனம் கூசாமல் திருமணம் செய்துகொண்டு, சாதியை அனுதினமும் பயின்று கொண்டு, ஜநாயகத்தின் மீதும், சமத்துவத்தின் மீது பற்றற்று பன்றிகளை போல வாழ்ந்து கொண்டிருக்கும் பன்றிகள் ஸ்டீபன் மரணத்திற்கு கண்ணை கசக்குவது தான் நகை முரண்.
ஏனென்றால் அறிவியல் ஒரு வகையில் ஆழ்ந்த அரசியல் தத்துவங்களையும் கோட்பாடுகளையுமே விதிகளாக கொண்டிருக்கிறது.  உதாரணத்திற்கு “ஒவ்வொரு வினைக்கும் அதற்கெதிரான எதிர்வினை உண்டு” என்பதாகட்டும், “மிகுஅழுத்தத்திற்கு ஆளாகும் அணு பெரும்சக்தியாக வெடிக்கும்” என்பதாகட்டும் ” எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்” என்பதெல்லாம் நாம் வெறும் இயற்பியல் சார்ந்த சிந்தனையாக கடந்து போக முடியாது. இவையெல்லாம் ஒரு அரசியல் தத்துவ கோட்பாடுகளை வலியுறுத்தும் கருத்துக்கள்/உண்மைகள். மிக அடிப்படையான astronomy வாசிப்பு கூட நமக்குள் பெரும் கிளர்ச்சியையும், தத்துவார்த்த கேள்விகளையும், சக மனிதர்களின் மீது அன்பையும் விதைக்க கூடியது. இந்நிலையில் எந்த வகைமைக்குள்ளும் வராதா, ஒரு வகையில் ஸ்டீபன் போன்ற உன்னதமான அறிவியலாளர்களின் கோட்பாடுகளுக்கு நேர் எதிராக, நன்றாக படித்திருந்தும், ஸ்டீபன் போன்ற அறிவியலாளர்களின் அறிவியல் கருத்துக்களை அடையக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிருந்தும், தாங்களாக தேர்ந்தெடுத்து, சாதி போன்ற சில்லறைத்தனங்கள் நிரம்பிய சில்லறை பசங்களாகத்தான் வாழ்ந்து சாவோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் சில்லறை பசங்கள் என்னா மயித்துக்கு ஸ்டீபன் போன்ற ஒருவரின் இறப்பிற்கு வருந்துகிறார்கள்?
சரி சில்லறை பசங்கள் சில்லறைத்தனமாக இருப்பார்கள். நம் ஊரில் நாம் மதிக்கும் கலைஞர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எப்படி? தோழர் ரவிக்குமார் எனக்கு அவரின் மரணம் தனிப்பட்ட முறையில் இழப்பு. ஏனென்றால் அவருடைய time travel கருத்துக்களை பின்பற்றி சிறுகதை எழுதியிருக்கிறேன் என்று ஓக்க மக்க இரங்கல் சொல்கிறார். “நீல குழல் விளக்கு””கடைசி கோப்பை மது” போன்ற அதி உன்னதமான, கவிதையின் உட்சபட்ச சாத்தியங்களை அடைந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஸ்டீபனுக்கு எழுதிய கவிதையில் கடவுள் துகளை கண்டடைந்தவர், அணுவால் வந்த உலகம் அணுவால்தான் அழிவும் என்று சொன்னவர் என்று ஸ்டிபனுக்கே  தெரியாத விஷயங்களை கவிதையில் எழுதினார். நல்லவேளையாக நான் theguardian,comல் நெஜமாலுமே ஸ்டிபனை தெரிந்த ஒருவர் எழுதிய இரங்கல் கட்டுரையை படித்திருந்ததால் தல நீங்க சொன்னது தப்பு அப்படி ஒரு சம்பவமே நடக்கல என்று கமெண்ட் இட்டதை கவிஞர் டெலீட் செய்ததோடு இரங்கல் கவிதையில் டிங்கரிங் வேலை செய்து அறிவியலை குறைத்து உணர்வை கூட்டிவிட்டார். இதுவரை 595 பேர் அதை லைக்கியிருக்கிறார்கள்.
கானா பாடகர்கள் தங்களது பேட்டியில் சாவு வீட்டிற்கு சென்று இறந்தவரை பற்றி விசாரித்து அதை வைத்து பாட்டுக்கட்டி தாங்கள் கானா பாடுவோம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன், அவர்களிடம் ஒரு நேர்மை இருக்கிறது. அதாவது காசிற்கு பாடினாலும் இறந்தவரை பற்றி தெரிந்து பாட வேண்டும் என்று. அந்த நேர்மை கூட இல்லாமல் அய்யோ எதையாவது வாங்கி ஆகணுமே இந்த தெரு என்ன விலைனு கேளு என்று பரபரக்கும் கௌண்டமணியை போல அய்யயோ ஸ்டிபனு செத்துட்டானே நான் கவிதை எழுதியாகணுமே என்று பரபரக்கும் அவசரம் ஏன்? அனிதா மரணத்தின் போது தான் ஒரு பயணத்தில் இருந்ததாகவும், ஆனந்த விகடனிலிருந்து தொலைபேசியில் அழைத்து அனிதா இறந்துவிட்டார், இந்தவாரம் பதிப்பு தொடங்கப்போகிறது உடனே ஒரு கவிதை எழுதி தாருங்கள் என்று நியூயார்க் காம்போசிங்கிலிருக்கும் ரஹ்மான் சென்னையிருக்கும் வைரமுத்துவிடம் கேட்பதை போல கேட்க, வைரமுத்து situation கேட்பதை போல மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் அனிதாவின் பின்புல தகவல்களை பெற்று அதைவைத்து ஒரு மரத்தடியில் காரை நிறுத்த சொல்லி அனிதாவுக்கு கவிதை எழுதியிருக்கிறார். இதை யார் சொன்னார் எனக்கு? மனுஷ்யபுத்திரனேதான் இதையும் முக நூலில் பதிவிட்டிருந்தார். இப்படி தொழில்முறை கான பாடகர்களை போல யாரு என்னவென்று விசாரித்து அனிதாவுக்கு கவிதை எழுதிய நேர்மையை கூட ஸ்டிபனுக்கு செய்யாமல் கடவுள் துகளை அவர் கண்டுபிடித்தார் என்று காமெடி பண்ணும் அவசரம் மனுஷ்யபுத்திரன் போன்ற பெரிய ஆளுமைகளுக்கே ஏன் ஏற்படுகிறது? இதை சொல்ல காரணம் கவிஞரை குறை சொல்லும் நோக்கத்தோடு அல்ல. மாறாக ஒரு பரிதாபமான சிறுமியின் சாவு எப்படி நம் சமூகத்தில் பாசாங்கோடு அணுகப்படுகிறது, அது எப்படி ஒரு systematic ஆக ஒரு சமூக ஒழுங்கோடு அதாவது மொத்த தமிழ் சமூகமும் ஒரு நொடியில் பரிசுத்தமாகி அனிதாவை தங்கையாக்கி அழகுபார்த்து அழுது தீர்த்தார்கள் என்பதையும் சொல்லவே சொல்கிறேன். அப்படி சிறுமி அனிதாவிற்கே rip போட்ட அண்ணன்களும் அக்காள்களும் ஸ்டிபனுக்கு rip போடுவதில் என்ன ஆச்சர்யம்? தர்மபுரி சம்பவத்தின் மீது பொச்சை மூடிக்கொண்டிருந்த நம் சமூகம்தான் சிரியாவில் விழும் குண்டுகளுக்கு பதறுகிறது இல்லையா? அந்த அருவெறுப்பான பாசாங்கைதான் சொல்கிறேன்.
நம்முடைய சமூகம் உலகத்திலேயே ஒரு மிக மிக அயோக்கியத்தனமான ruthless சமூகம்.ஒரு சமூகமாக நாம் மாந்தநேயமற்ற, சக உயிர்களின் மேல் compassion, empathy அற்ற காட்டுமிராண்டிகள் நிரம்பிய சமூகம். நம் சமூகத்தில் பாதி பேர் இப்படி இல்லையென்றாலும் கூட இந்நேரத்திற்கு சாதி அழிந்திருக்கும், ஹிந்து மதம் ஆட்டம் கண்டிருக்கும். 95% சதவீகித்தினர் சில்லறை பசங்கள் என்கின்ற காரணத்தினால்தான் இன்னமும் அது சாத்தியப்படாமல் இருக்கிறது. இந்த சில்லறை பசங்கள் இயேசு சொல்லும் வெளிவேடக்காரர்களை போன்றவர்கள். 4,5 இளநீர் குடித்தால் வரும் சிறுநீரை போல தங்களின் மனம் அன்பின், கருணையின் ஊற்று என்று நிறுவுவதிலும், தாங்கள் அடிப்படையில் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள் என்பதை மறைக்க தாங்களும் அறிவியல் சார்ந்த வாழ்வறத்தை பயில்பவர்கள்தான் என்றும், சாதியை பயிலும் பன்றிகள்தான் என்றாலும், சங்கரும், கோகுல்ராஜும் கொல்லப்பட்டபோது மனதிற்குள் சிரித்துக்கொண்டவர்கள்தான் என்றாலும்  தாங்களும் அடிப்படை  நாகரீகத்தை கடைபிடிப்பவர்கள் தான் என்றும், நாள் நட்சத்திரம் பார்த்து ஜாதகம் பார்த்து அய்யர் தாலி எடுத்து குடுத்து கல்யாணம் பண்ணிய பழ பசங்கள்தான் என்றாலும் தாங்களும் contemporary வாழ்வைத்தான் வாழ்கிறோம் என்றும்  நிறுவும் தேவையும், ஆசையும், வேட்கையும் இவர்களுக்கு இருக்கிறது. இந்த போலியான சமூக வேட்கைதான் கலைஞர்களையும், அறிவு ஜீவிகளையும் உடனடியாக அவர்களை express செய்ய நிர்பந்திக்கிறது/நெருக்கடிக்குள்ளாகிறது. but the plain truth is this dickheads empathy and compassion is nothing but bullshit.  ஒரு இறப்பை கொண்டாடுவது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமோ அதே  போல ஒரு இறப்பிற்காக தாங்கள் வருந்துவதாக பாசாங்கு செய்வதும் காட்டுமிராண்டித்தனமானது, அருவெறுப்பானது. இவர்களின் இரங்கல் நாடகத்தை ஏளனம் செய்வது ஸ்டிபன் மீதான மரியாதை குறைவினால் அல்ல இவர்களின் கூச செய்யும் பாசாங்குகளால் தான்.
இவர்களின் இரங்கல்கள் குறிப்பாக ஸ்டீபன் போன்றவர்களுக்குகான இரங்கல்கள் அவரை அவமானப்படுத்துபவையே. பெரியார் இறந்தபொழுது  யாராவது ஒரு அய்யர்வாள் “பெரியாரின் வெண்தாடி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை அப்படியே பிடுங்கி எனது பூணுலாக கட்டிக்கொள்ள ஏங்கிருக்கிறேன். கடைசியில் அது நிறைவேறவே இல்லை. rip” என்று facebook status போட்டிருந்தால் தி.க வினர் அவரை என்ன செய்ய நினைத்திருப்பார்கள்? அதையேதான் ஸ்டிபனுக்கு இரங்கல் பாடும் லகுடபாண்டிகளை பார்த்தாலும் எனக்கு தோன்றுகிறது.
ப.ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: