குழந்தைகள் நலம்

அப்பா தான் ஹீரோ!

உண்மையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வயதில் 'குட் டச்' என்னும் விஷயத்தை வீட்டில் ஒரு அப்பா அதிகமாய் கொடுக்கும் போது தான் வெளியில் வேறு நபர் தொடுகையில் அது நல்ல தொடுதலா அல்லது அபாயகரமான தொடுதலா என்ற விஷயத்தை பிள்ளைகளால் வித்தியாச படுத்தி உணர முடியும்.

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் வீட்டிற்கு தேவதை வந்தாச்சு என்று கொஞ்சும் அப்பாக்கள் அதிகம். மழலையாய் மகள் இருக்கும் போது அவளை தூக்கி கொண்டு சுற்றுவதும் , வேலை முடிந்து களைப்பாய் வீடு வரும் போது சிந்தி சிந்தி ஒரு குவளை தண்ணீர் கொண்டு வரும் மகளைப் பார்த்து இதுக்கு தான் ஒரு பொம்பள பிள்ளை வேணும்ங்கிறது என்று பெருமிதம் கொள்ளுபவர் அப்பா .

ஆனால் ஒரு கட்டத்தில் பெண் பிள்ளைகள் பருவ வயதை நெருங்கும் போது சில அப்பாக்கள் இயல்பாய் பெண் பிள்ளைகளை விட்டு விலகுகின்றனர். பருவ வயதை பெண் குழந்தைகள் நெருங்கியவுடன் அவளிடம் அதிகம் பேசுவது கிடையாது, அவள்
அருகில் உட்காருவது இல்லை, அவளை கொஞ்சுவது இல்லை, அதிகமான நேரங்களில் அவளிடம் கண்டிப்பாய் நடந்து கொள்ளுவது என்று இறுக்கமாய் மாறும் அப்பாக்கள் ஏராளம். இவர்களை இப்படி விலகி நிற்க வைப்பதற்கு இந்த சமூகமும் ஒரு காரணம் எதற்க்கெடுத்தாலும் நாளைக்கு வேற வீட்டுல போய் வாழ போற பிள்ளை என்ற பொறுப்புணர்வோடு மட்டும் மாறும் அப்பாவின் இந்த திடீர் மாற்றம் உண்மையில் பெண் பிள்ளைகளை மனதளவில் பாதிக்கும். பருவ வயதில் சரியான தோழனாய் ஒரு பெண்ணிற்கு அவள் அப்பா இருந்து விட்டால் அவள் வாழ்க்கையில் எந்த ஆணிடமும் ஏமாந்து போக மாட்டாள். உங்கள் மகளுக்கு நீங்கள் ஹீரோவாக, தோழனாக இருக்க சில வழிகள் :

  1. பெண் பிள்ளைகளை ஒரு அப்பா பாராட்டும் பொது தலையை வருடுவதோ, தட்டிக் கொடுப்பதோ, கையை பிடித்து கொண்டு சாலையில் நடப்பதோ தவறு இல்லை. உண்மையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வயதில் ‘குட் டச்’ என்னும் விஷயத்தை வீட்டில் ஒரு அப்பா அதிகமாய் கொடுக்கும் போது தான் வெளியில் வேறு நபர் தொடுகையில் அது நல்ல தொடுதலா அல்லது அபாயகரமான தொடுதலா என்ற விஷயத்தை பிள்ளைகளால் வித்தியாச படுத்தி உணர முடியும் . தவிர இந்த வயதில் அவர்களுக்கு இயல்பாய் ஒரு பாதுகாப்பு உணர்வு அதிகம் தேவைப்படும். உங்களின் நம்பிக்கையான தொடுதல் அதை ஈடு செய்யும் .

  2. பெண் பிள்ளைகள் அவர்கள் விருப்பு, வெறுப்பு வகுப்பு விஷயங்கள் என பேசும் போது காது கொடுத்துக் கேளுங்கள். பெண் பிள்ளைகள் சமாச்சாரம் என்று ஒதுக்கி விடாதீர்கள். இதை எல்லாம் அவள் அம்மா கேட்டுக் கொள்ளுவாள் எனக்கு இதை கேட்க பொறுமையும், நேரமும் இல்லை என்று அலட்சியம் காட்டாதீர்கள். இது மறைமுகமாய் பிள்ளைகள் மனதில் அப்பாவிற்கு என் சார்ந்த விஷயங்கள் மேல் ஆர்வம் இல்லை என்ற மன நிலையை பிள்ளைகளுக்கு கொடுக்கும். இதனால் அவர்களும் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பர்.

  3. பருவ வயது மக்களுடன் இதை மட்டும் தான் பேச வேண்டும் என்று உங்கள் உரையாடல்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள். எல்லா உரையாடல்களிலும் போதனைகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மிக இயல்பாய் உங்கள் மகளுடன் பேசலாம். உண்மையில் இந்த வயதில் பிள்ளைகள் போதனைகளை கண்டு விலகி ஓடுவர். நீங்கள் வெறும் அறிவுரை சொல்பவராய் மட்டும் உங்கள் மகளுடன் இருந்தால் அவள் உங்களை கண்டால் விலகி ஓட தானே செய்வாள்?

  4. உங்கள் மகளுக்கு நீங்கள் அவள் மேல் அன்பாய் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். கண்டிப்பை மட்டுமே காட்டி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகள் தவறு செய்யும் போதும் அவள் செய்த தவறை வெறுக்கிறீர்கள் அவளை வெறுக்க வில்லை என்ற உண்மையை புரியவையுங்கள். இது அவளுக்கு ஏதும் பிரச்சனை வரும் போது உங்களிடம் வந்து பகிர்ந்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தரும். அப்பா இதை நிச்சயம் புரிந்து கொள்ளப் போவதில்லை நாமே சமாளிப்போம் என்று பிரச்சனையை மறைக்கும் எண்ணம் பிள்ளைகளிடம் உண்டாகாது.

  5. உங்கள் அறிவையும், நேரத்தையும் வெறும் பணம் சம்பாதிப்பதில் மட்டும் செலவிடாமல் உங்கள் பிள்ளைகளை போல கொஞ்சம் டெக்னாலஜி அறிவையும் வளர்த்துக்கொள்ளுங்கள். இது பிள்ளைகளை கண்காணிக்க உதவும்.

  6. உங்கள் மனைவியை நீங்கள் மரியாதையாய் நடத்தும் போது அப்பாவிற்கு பெண்கள் மேல் இருக்கும் மதிப்பையும் அம்மா மேல் இருக்கும் பாசத்தையும் பிள்ளைகள் அழகாய் புரிந்துகொள்ளுவர். இந்த வயதில் அம்மாவை மரியாதை இல்லாமல் அலட்சியமாய் பிள்ளைகள் பேசுவதற்கு முக்கிய காரணம் அப்பா தான்.

எனவே , உங்களிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களே உங்கள் பிள்ளைகள் மனதில் உங்களை ஹீரோ வாக உயர்த்தும் .

கே. ஏ. பத்மஜா, உளவியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். மழலையர் பள்ளி நிர்வாகத்தில் 10 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். குழந்தை வளர்ப்பு ஆலோசகர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.