இந்துத்துவம் கருத்து செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது!

தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர். நீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.

சந்திரமோகன்

சந்திர மோகன்

உத்திர பிரதேசம், உத்தர்கண்ட், ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப், சண்டிகார், மத்திய பிரதேசம், பீகார், மஹாராஷ்டிரா என எங்கெங்கு காணினும், வட இந்தியா முழுவதுமாக தலித் அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காவல்நிலையங்கள், பஸ்கள், கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. கோபமுற்றுள்ள தலித்துகள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

காவிப் பாசிஸ்டுகளின் ஆட்சியில்,SC & ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தை ஒழித்துக் கட்டும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள சமத்துவ வாழ்வுரிமை விதிகளை பறிக்கும் வகையிலும், தில்லி உச்ச நீதிமன்றம் மார்ச் 20 ந் தேதியன்று, படுமோசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. இந்த புதிய உத்தரவின் அடிப்படையில் சாதீய வன்கொடுமையில் ஈடுபடும் சக்திகள் கைதாகாமல் தப்பித்துக் கொள்ள வழிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர்.

நீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.

நீதிபதி உதய் உமேஷ் லலித், பாஜக தலைவர் அமித் ஷா வின் அவப்பெயர் பெற்ற சோராபுதீன் கொலை வழக்கிலும், மற்றொரு கிரிமினல் வழக்கிலும் அவருக்காக வாதாடியதற்காக நீதிபதியாக்கப் பட்டவர்.

இந்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் தான் தலித் விரோத, அரசியலமைப்புச் சட்ட விரோத தீர்ப்பை எழுதியுள்ளனர்.

பார்ப்பனீய உச்ச நீதிமன்றத்தின் இந்த அரசியலமைப்புச் சட்ட விரோத உத்தரவை மறுபரிசீலனை Review செய்ய வேண்டும் என பல அமைப்புகளும் கோரியுள்ளன.

உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், SC&ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி உடனே விசாரிக்க வேண்டும் எனவும் நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள், ஏப்ரல் 2 இன்று நாடு தழுவிய முழு அடைப்பை அறிவித்தன. CPIML Liberation மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தலித் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஊக்கமாக பங்கேற்றுள்ளன.

இந் நிலையில், காவிகளின் அடிவருடியாக மாறி வருகிற உச்ச நீதிமன்றம் இப் பிரச்சினையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என ஆணவமாக பதில் அளித்துள்ளது.

சாது மிரண்டால் காடு தாங்காது என்பதற்கேற்ப, வட இந்தியா முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ; தலித் செயற்பாட்டாளர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

தலித்துகள் தங்களுடைய சமத்துவத்திற்கான_ சட்டப்_பாதுகாப்பை வென்றெடுப்பார்கள்! தலித் விரோத பாஜக ஆட்சிக்கு மரண அடி கொடுப்பார்கள்!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

வன்கொடுமை திருத்தத்தை எதிர்த்து போராடிய தலித்துகள் மீது மத்திய பிரதேச அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதி 21 பேர் பலியானார்கள்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: