செய்திகள்

“மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்!

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்தை பகை நாடாகக் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள், ரயில்கள், சுங்கச்சாவடிகள் அனைத்தையும் முடக்கும் போராட்டங்களை அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நடத்தி வருகின்றன. ஆனாலும் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கவில்லை.

ஐம்பது ஆண்டுகள் பொறுத்தவர்கள் ஐந்து மாதம் பொறுக்கக் கூடாதா என அகந்தையான அறிக்கைகள் பாஜகவின் தரப்பிலிருந்து வருகின்றன. மேலும் வெட்டுக்காயத்தில் உப்பை தேய்த்தது போல் வெளி மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். சார்புடைய துணை வேந்தர்களை தமிழக பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் நியமித்து வருகிறார். தமிழக கல்வித்துறையை காவிமயமாக்கும் செயலாகும் இது. உங்களால் என்ன செய்ய முடியும்? என தமிழகத்திற்கு பா.ஜ.க. சவால் விடுகிறது.

தமிழகத்தின் உரிமைக்காக எல்லோரும் போராடிக் கொண்டிருக்கும்போது சூதாட்டப் புகழ் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஏப்ரல் பத்து அன்று சென்னையில் நடத்த உள்ளனர். இந்த வக்கிரத்தனத்தை கைவிடும்படி பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆயினும் கிரிக்கெட் ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குடிக்கும் நீருக்குக் கூட காவிரியில் இனி நமக்கு உரிமை இருக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் பொறுப்போடு போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் கிரிக்கெட்டை நடத்துவது சீரணிக்க முடியாத ஒன்றாகும். கிரிக்கெட் ரசிகர்கள் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, இப்போட்டியை புறக்கணிக்க முன்வர வேண்டும்.சென்னை கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீறி நடத்த முயற்சித்தால் தமிழகம் உரிய பாடம் புகட்டும்.

மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறையின் டெபெக்ஸ்போ கண்காட்சியை திறந்து வைக்க ஏப்ரல் 12 அன்று மோடி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடிக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும். மோடி திரும்பும் இடமெல்லாம் கறுப்புப் பதாகைகளும் கொடிகளும்தான் அவரை வரவேற்கும். எவ்வாறு ஏப்ரல் ஐந்து அன்று தமிழகமே திரண்டதோ அதே போல் “மோடியே திரும்பிப்போ” என்ற முழக்கத்தோடு அவரவர்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், பொது மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது. மோடிக்கு எதிராக எல்லா பகுதிகளிலும் மக்களோடு இணைந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஏப்ரல் 12 அன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

மேலும் வருகிற 10-4-2018 அன்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்ட நெய்வேலி என்.எல்.சி முற்றுகை போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s