செய்திகள்

பிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும் 

ஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது?

ப. ஜெயசீலன்

திரு.நிர்மலா தேவி தனது மாணவிகளுடன் பேசும் ஆடியோ குறித்து பிறன் மனை நோக்காதா பேராண்மை பிதுங்கி வழிந்து கொண்டிருக்கும் ஏரளமான தமிழகத்து ஆண்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அந்த ஆடியோவை கேட்கும் நம்மால் உடனே புரிந்து கொள்ள முடிவது நிர்மலா இந்த விஷயத்தில் absolute amateur என்பது. இதற்க்கு முன்பு இதே போன்ற ஒன்றை வெற்றிகரமாக/தோல்விகரமாக நடத்தி முடித்து trial and error முறையில் ஒரு மேம்பட்ட sales driven உரையாடலை நடத்தும் தொனியும் அவரது பேச்சில் இல்லை. குற்றவுணர்ச்சி சம்மந்தபட்ட காரியங்களில் ஒருவரை நீங்கள் ஈடுபட ஒருவரை தூண்டுகையில் அவருக்கு நீங்கள் தரவேண்டிய அடிப்படையான உறுதிமொழி இதுக்கு யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதே. நிர்மலா loud speakerல போடுமா என்கிறார். நான்கு தோழிகளை பார்த்து ஒரு opportunity இருக்கிறது காசு, மார்க் கிடைக்கும் போலாமா என்று அல்வா மல்லிகை பூ குடுத்தா உங்க பொண்டாட்டி வருவாங்களா என்கின்ற செந்திலை போல அப்பாவியாக கேட்கிறார். நான்கு பெண்களிடம் ஒன்றாக இதை கேட்கையில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அங்கு செயல்படும் collective consciousness அந்த opportunity வேண்டாம் என்றுதான் சொல்லும் என்கின்ற அடிப்படை மனோவியல் புரிதலற்ற நிலையில்தான் நிர்மலாவின் பேச்சு உள்ளது.

நிர்மலா அந்த உரையாடலின் ஊடாக என்ன செய்ய விழைகிறார்? தனக்கு இடப்பட்ட assignmentயை நிறைவேத்தும் முனைப்பை வெளிப்படுத்துகிறார். என்ன assignment? பல்கலைக்கழக மாணவிகளை பலக்லைக்கழகத்தில் மிக முக்கியமானவர்கள் சிலரை கவனித்துக்கொள்ள தயார்படுத்துதல்.  பல்கலைக்கழகத்தில் உயரதிகாரியாய் இருக்கும் denzel washigntanனும், பிராட் பிட்டும் அவர்களுடைய அழகை கொண்டு நிர்மலாவை வீழ்த்தி அவரை இதை செய்ய சொன்னார்களா? நிச்சயம் இல்லை. அப்படியெனில் நிர்மலா தனது உயரதிகாரிகள் எதிர்பார்க்கும் சவுரியத்தை ஏற்பாடு செய்துதரும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்? உலகம் முழுவதும் வேலையிடங்களில் அமெரிக்க அதிபரின் மாளிகை உட்பட பெண்கள் பல்வேறு விதமான பாலியல் சார்ந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். அதில் எல்லா பெண்களும் எல்லா நேரங்களிலும் கொதித்தெழுவதில்லை. அதற்கு அவர்களுக்கு பிரத்தேயேகமான புற,அக காரணங்கள், அழுத்தங்கள், நெருக்கடிகள் உள்ளன. நிர்மலா ஒரு பேராசிரியராக இருந்து தனது மாணவிகளிடம் இது போன்ற ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டிய அழுத்தத்தை,தேவையை உருவாக்கிய மண்டையன் யார்? இளம் பெண்களிடம் மகிழ்ந்திருக்க விழையும் அந்த மண்டையன்களை நான் குறைசொல்லவில்லை. ஆனால் அவர்களின் இந்த செயலானது preying on the vulnerable என்கின்ற வகைமைக்குள் வருவது.

அதாவது நீ எனக்கு பணியவில்லை என்றால் என்னால் உனக்கு காயத்தை, வலியை ஏற்படுத்த முடியும் என்கின்ற அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் தனக்கு கீழ் வேலை செய்யும் அல்லது கூட வேலை செய்யும் பெண்களிடம் செலுத்த முயலும் பாலியல் ஆதிக்கம். இது பொறுக்கித்தனமானது. அது போன்ற ஒரு ஆதிக்கத்தை, நெருக்கடியை தான் நிர்மலாவும் சந்தித்திருப்பார். அவருக்கு அதன் பிரதிபலனாக சில அனுகூலங்களையும் அவர்கள் உறுதி அளித்திருக்க கூடும். இதுவே ஒரு work place discrimination தான். அதாவது ஒரு பேராசிரியையை பல்கலைக்கழக உயர் அதிகாரத்தில் உள்ள யாரோ ஒரு சில்லறை நாய் மாணவிகளை ஏற்பாடு செய்து தரும் வேலைக்கு பணித்திருக்கிறான். நிர்மலா அந்த நெருக்கடிக்கு பணிந்திருக்கிறார். அந்த உரையாடலிலும் அவர் எங்கும் மிரட்டும் தொனியிலோ அல்லது கட்டாயப்படுத்தும் தொனியிலோ பேசவில்லை. உங்களுடைய பெற்றோர்களிடம் கூட கேட்டு முடிவெடுங்கள் என்கிறார். அவருடைய குற்றம் என்ன? breach of professional ethics. பேராசியராக அவர் தன்னுடைய மாணவிகளிடம் கடைபிடித்திருக்க வேண்டிய விழுமியங்களை, எல்லைகளை அவர் மீறிவிட்டார். நிச்சயம் அதற்கான தண்டனையை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

என்னை பொறுத்தவரை she is just a unworthy lame messenger. what is the point in shooting the messenger?. அவருக்கு இதை செய்ய பணித்தது யார்? யாருக்காக அந்த மாணவிகள் தயார் செய்யப்பட்டார்கள்? இது எத்தனை நாளாக நடக்கிறது? எந்தெந்த பல்கலைக்கழகங்களில் இது நடக்கிறது? பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில்  பெண்களுக்கு இது போன்று நடக்கையில் அவர்களுக்கென்று ஏதவாது helpline உள்ளதா? இது போன்ற complaints வந்தால் அதை விசாரிப்பதற்க்கென்று பெண்கள் பங்களிப்புடன் கூடிய ஏதாவது கவுன்சில் உள்ளதா ? என்று யோசிக்க வேண்டிய நேரத்தில், நிர்மலாவை இந்த காரியத்தை செய்ய தூண்டி நோகாமல் நொங்கு சாப்பிட நினைக்கும் அந்த தற்குறி சில்லறை பசங்களின் மீது ஆவேசமும் சீற்றமும் கொள்ளாத பிறன்மனை நோக்காத பேராண்மை கொண்ட தமிழ் சமூகத்து ஆண்கள் நிர்மலாவை ஆபாசமாக வசை பாடுவது எதனால்? ஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது?  உடனடியாக நிர்மலாவின் நடத்தையை தீர்ப்பிட இவர்கள் ஆண்குறிகளை கையில் பிடித்துக்கொண்டு ஏன் கிளம்புகிறார்கள்? இவர்கள் கவலைப்பட வேண்டியது நமது பள்ளி கல்வித்துறை இயங்கும் முறை குறித்தா அல்லது அந்த பேராசிரியரின் தனிப்பட்ட நடத்தை குறித்தா?  அவரிடம் காட்டும் சீற்றத்தில் பாதிக்கூட அதில் சம்மந்தபட்டிருக்க கூடிய ஆண்களிடம் காட்டுவதாய் தெரியவில்லையே?

ஒரு திரைப்படத்தில் விலைமகளாய் இருந்த ஒரு பெண் இறந்துவிடுவாள். அவளை அடக்கம் செய்ய அந்த ஊரில் இருக்கும் எந்த ஆண்களும் வர மாட்டார்கள். உடனே சத்தியராஜ் அந்த பெண் தன்னிடம் வந்த எல்லா ஆண்களின் பெயர்களையும் விவரமாக ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பதாகவும் அவர்களாக எல்லாரும் வந்து அவளை புதைக்க உதவவில்லை என்றால் தான் அந்த புத்தகத்தை ஊர் மத்தியில் நின்று படிக்க போவதாக சொல்வார். அடுத்த நொடி ஊரில் இருக்கும் எல்லா ஆண்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவந்து அவளை புதைக்க வருவார்கள். என்ன பிரச்சனை என்றால் நிர்மலா மீது பாய்ந்து பிராண்டும் பேராண்மை கொண்ட பெருமகன்களின் பெயர் தாங்கிய புத்தகம் எங்கோ யார் வீட்டு மூலையிலோ வெளியுலகத்திற்கு தெரியாமல் கிடக்கிறது.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.