கருத்து

அழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்

கிறிஸ் கெய்ல் தன்னிடம் கேள்விகேட்ட பெண் ஊடவியலாளரை "டார்லிங்" என்ற பதத்தை பயன்படுத்தி பேசினார் என்பதற்காக கடும் கண்டனத்திற்கு உள்ளானதோடு அடுத்த தொடரிலிருந்தே நீக்கப்பட்டார்.

ப. ஜெயசீலன்

சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு பெண் பத்திரிகையாளர் அவரையும் ஒரு ஆளாக மதித்து ஏதோ ஒரு கேள்வியை கேட்க அதற்க்கு அமைச்சர் “நீங்க இன்னைக்கு அழகா இருக்கீங்க” “இன்னைக்கு உங்க கண்ணாடி நல்லாயிருக்கு” “திரும்பவும் சொல்றேன் நீங்க ரொம்ப நல்லாயிருக்கிங்க” என்று ஏதோ தான் மிக புத்திசாலிதானமாக அள்ளி வைத்து கன்னத்தை கிள்ளி கொஞ்சும் வகையில் ஒரு கியூட்டான செயலை செய்து விட்டதைப் போல பல்லிளித்து கொண்டே போய் விட்டார். அதை பார்த்த பின்பு I’m not exaggerating, I really felt furious. மருத்துவர், பொறியாளர், வக்கீல், ஊடகவியலாளர் போன்ற சொற்கள் ஆண், பெண் என இருவருக்கும் பொதுவானது. கற்று தேர்ந்த ஒருவர் அந்த தொழிலை செய்யும் பொழுது அவர்களை அவர்களின் தொழிமுறை சார்ந்த ஒருவராகத்தான் அணுகவேண்டும். ஆணோ பெண்ணோ தொழில் முறை கல்வியிலும், பயிற்சியிலும் ஒரே அளவீடுகள் தான் பின்பற்றப்படுகின்றன. ஒரு ஆணோ பெண்ணோ ஊடகவியலாளர் ஆவதற்கான கல்வியும், பயிற்சியும் ஒரே மாதிரியானது தான். அவர்கள் கல்வியையும், பயிற்சியையும் முடித்து தொழில்முறை ஊடகவியலாளராக மாறும்பொழுது அவர்களை ஒரு ஊடகவியலாளராக மட்டுமே அணுக வேண்டும் என்பது மிக மிக அடிப்படை.

ஒரு மாநிலத்தின் அமைச்சர் என்பவர் அந்த மாநிலத்தின் ஆட்சி பொறுப்பிலிருக்கும் அரசாங்கத்தின் ஒரு அதிகாரபூர்வமான பிரதிநிதி. அவர் அந்த மொத்த மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தின், ஜனநாயகத்தின், மக்களின் பிரதிநிதி. அமைச்சர் என்பவரும் ஆண் பெண் பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆண் அமைச்சர் என்பதால் ஒருவருக்கு கூடுதல் பொறுப்போ பெண் என்பதால் ஒருவருக்கு குறைவான பொறுப்போ நமது அரசியல் சாசனம் வழங்கவில்லை. அமைச்சர் என்றால் ஆணோ பெண்ணோ அவருக்கு ஒரே அதிகாரம்தான், கடமைதான். இந்நிலையில் ஊடவியலாளர் ஒருவர் ஒரு அமைச்சரை தனது ஊடக பணியின் நிமித்தம் சந்தித்து ஊடக பணி சார்ந்து அவரை ஒரு ஆமைச்சராக அணுகி ஒரு கேள்வியை கேட்கிறார். மருத்துவம் படித்தவரான விஜயபாஸ்கர் பல்லிளித்துகொண்டே ஊடவியலாளரின் அழகை appreciate செய்கிறார்.

விஜபாஸ்கரிடம் இந்த கேள்வியை கேட்டவர் ஒரு ஆணாக இருந்திருக்கும் பட்சத்தில் விஜயபாஸ்கர் நல்லா டைட்டா ஜீன்ஸ் போட்டு பின்பக்கம் நல்லா எடுப்பா கடிச்சு வைக்கலாம் போலிருக்கு என்று காமெடிக்கு கூட objectify செய்து சொல்லியிருப்பாரா ? 100 சதவிகிதம் சொல்லி இருக்க மாட்டார். பின்பு ஏன் அந்த பெண் ஊடகவியலாளரை அவருடைய தொழில்முறை சார்ந்த கண்ணியதோடு அணுகாமல், நடத்தாமல் நீ என்னவாகயிருந்தாலும் எனக்கு நீ வெறும் பெண்தான் என்று நிறுவும் தோரணையில் அந்த பெண்ணின் அழகை குறித்து ஒரு கமெண்ட் பாஸ் செய்து objectify செய்கிறார்? அதற்க்கு அந்த பெண் உன் மூஞ்சி எப்ப பார்த்தாலும் கேவலமாத்தான் இருக்கு பதிலுக்கு காமெடி பண்ணியிருந்தால் அமைச்சரும் அவருடைய அடிபொடிகளும் அந்த பெண்ணை விட்டிருப்பார்களா? அரசியல் சாசனத்தின் மீது ஆண் பெண் போன்ற எந்த பேதமுமற்று விறுப்பு வெறுப்பு அற்று கடமையாற்ற உறுதிமொழி அளித்து மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அமைச்சர் ஊடவியலாளருடன் செல்லம் கொஞ்சி விளையாட அந்த பெண் என்ன அமைச்சரின் கேர்ள் பிரண்டா? அமைச்சரின் இந்த பொறுக்கித்தனமான செயல் அந்த பெண்ணையும், அந்த பெண்ணின் குடும்பத்தையும், அந்த பெண்ணின் கணவனையோ, காதலனையோ எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாக்கிருக்கும் என்று நமது பண்னி மேய்க்க கூட லாயக்கில்லாத அமைச்சர்களுக்கு தெரியுமா?அமைச்சரின் அந்த செயல் உலகின் எந்த நாட்டிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல.

ஹிலாரி கிளின்டன் secretary of states ஆக இருந்தபொழுது ஏதோ ஒரு ஆப்ரிக்கா நாட்டிற்கு சென்றிந்தார். பெண்களின் நிலை மிகவும் பின்தங்கிருந்த நாடு அது. அவரிடம் கேள்வி கேட்ட ஒரு பத்திரிகையாளர் ஹிலாரி, கிளிண்டனின் மனைவி என்னும் பொருளில் கிளிண்டனை பற்றிய கேள்வியை முன்வைக்க சட்டென்று சினம்கொண்ட ஹிலாரி இங்கு வந்திருக்கும் தான்தான் அமெரிக்காவின் secretary of states என்றும், அதுசார்ந்த எல்லாவற்றுக்கும் தான் பதிலளிக்க முடியும் ஆனால் கிளிண்டனை பற்றிய கேள்வியை கிளிண்டனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் கோபமாக சொன்னார். அதவாது தன்னை secretary of states என்பதாக மட்டுமே பார்த்து அதற்கான மரியாதையை நீங்கள் எனக்கு தந்தாக வேண்டும் மாறாக ஒரு மனைவியாக, பெண்ணாக என்னை பார்க்க முயலாதீர்கள் என்பதே அதன் அர்த்தம். 2 வருடங்களுக்கு முன்பு கிறிஸ் கெய்ல் ஆஸ்திரேலியாவில் நடந்த 20/20 மேட்சில் தன்னிடம் கேள்விகேட்ட பெண் ஊடவியலாளரை “டார்லிங்” என்ற பதத்தை பயன்படுத்தி பேசினார் என்பதற்காக கடும் கண்டனத்திற்கு உள்ளானதோடு அடுத்த தொடரிலிருந்தே நீக்கப்பட்டார். இவையெல்லாம் ஒரு processionalயை அதுவும் பெண்ணாகயிருக்கும் பட்சத்தில் அவருடைய பாலினம் சார்ந்து அணுகுவது சில்லறை தனம் என்பது உலகமுழுவதும் நாகரீக சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதற்கான சட்டென எனக்கு நினைவில் வந்த  சிறு உதாரணங்கள்.

இது ஒரு மிக சிக்கலான புரிந்துகொள்வதற்கு கடினமான விசயம் அல்ல. ஆனால் நமது சமூகம் பல வகையிலும் ignorant ஆகவும், politically insensible ஆகவும் உள்ளது. நமது சமூகத்தை பொறுத்தவரை இது எல்லாம் ஒரு விஷயமே அல்ல. “விடுங்க விளையாண்டுட்டு போறான். யாருகிட்ட விளையாட்றன் அவன் அத்தை பொண்ணுதானா” என்று சொல்லும் மண்டையன்கள் உள்ள சமூகம் இது. பெண்களை சீண்டுவது, அவர்கள் குளிக்கும் போது துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுவது எல்லாம் அவதாரா புருஷர்களின் விளையாட்டு மற்றும் கேளிக்கை. இது போன்ற சமூகங்களில் இருந்து வரும் ஆண்களுக்கு நான் உட்பட அதுபோன்ற கசடுகளை மனதிலிருந்து decoding செய்ய நம்மிடம் கல்விமுறையிலோ, சமூகத்திலோ, குடும்பத்திலோ, கலாச்சாரரீதியாகவோ எந்த சிஸ்டமும் இல்லை. நாம் சில தவறுகளை அய்யோக்கியத்தனங்களை பொறுக்கித்தனங்களை இன்னமும் acknowledge செய்யவும் இல்லை, அவை தவறு என்று உணர்ந்துகொள்ளவும் இல்லை.

இந்நிலையில்தான் மஹாராஷ்டிராவிலிருந்து மணியாட்ட வந்துள்ள ஒரு புரோகிதர் ஒரு ஊடகவியலாளரின் கன்னத்தை தட்டி உள்ளார். மிக மிக ஆபாசமான அருவெறுப்பான கொதிக்க வைக்கும் செயல் அது. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மெல்போர்னில் தனது ஒன்றரை வயது மகளை மருத்துவரிடம் கூட்டி சென்றுள்ளார். அந்த மருத்துவர் 60 வயதை தாண்டிய முதியவர். அந்த குழந்தையின் வயிற்றை பரிசோதிக்க அந்த குழந்தையின் வயிற்றை தொட அனுமதிகேட்டிருக்கிறார். அதற்கு நண்பர் தாரளமாக என்று சொல்ல அந்த மருத்துவர் தாயின் அனுமதி வேண்டும் என்று சொல்லி நண்பரின் மனைவி சரியென்று சொன்ன பிறகே அந்த குழந்தையை தொட்டிருக்கிறார். இதை பற்றி நண்பர் வியப்பாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். இதைத்தான் sensible என்பது. அந்த மருத்துவர் இந்த குழந்தை எனது கொள்ளுப்பேத்தியின் வயது என்று தூக்கிகொஞ்சவில்லை. ஏன் என்றால் அவர் மருத்துவராக தனது professional code மற்றும் professional standardயை பின்பற்ற  முழுவதுமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார், அதை கடைபிடிக்கிறார்.  நம் ஊரில் புரோகிதர் ஒரு தொழில்முறை ஊடகவியலாளரின்  கன்னத்தை பொறுக்கித்தனமாக தட்டி விட்டு பேத்தி வயது என்று சில்லரைத்தனமாக சமாளிக்கிறார். இதில் ஒரே ஆறுதல் அந்த பெண் வலிமையாக இதற்க்கு எதிர்வினையாற்றியிருக்கிறார். புரோகிதர் கன்னத்தை தட்டும் புகைப்படத்தில் அந்த பெண்ணை தவிர யார் முகத்திலும் அதிர்ச்சியோ எரிச்சலோ இல்லை. எல்லா முகங்களிலும் புன்முறுவலே இருக்கிறது. இதைத்தான் நான் cultural insensibility என்று சொல்கிறேன். அங்கு இருப்பவர்களுக்கு தங்கள் கண்முன் ஒரு தவறு நடக்கிறது என்று உணரந்துகொள்ளவே  நேரமாயிருக்கிறது. இதுபோன்ற சம்பவத்தின் போது அடுத்த நொடி செவிலை அப்பும் ஒரு பெண்ணிற்காக நாம் காத்திருப்போம். அந்த பெண் நமது சமகாலத்திலேயே நம்முடன் நிச்சயம் இருக்கிறார் என்கின்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் குறித்து யோசிக்க ஆரம்பித்தால் திரும்பவும் நம் சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் பேதங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் இவை எல்லாவற்றையும் நிலைத்திருக்க செய்யும் சாதியம் அதற்க்கு கருத்தாக்க வலிமையை தரும் ஹிந்துமதம் என்றே முடியும். …நாம என்னதான் செய்யறது.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.