இந்துத்துவம்

”கர்நாடகத்தில் ஒருபோதும் பாஜக ஆட்சியைப் பிடிக்காது!”: பிரகாஷ் ராஜ்

இந்துத்துவ பிரிவினை அரசியலை கடுமையாக எதிர்த்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.  #justasking என்ற ஹாஷ் டேக்கை உருவாக்கி தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் சொல்லிவருகிறார். மே மாதம் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து த வயர் இணையதளத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கும் அவர், தான் பாஜக -வை எதிர்ப்பதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.

“எனக்கு பாஜகவினர் மீது தணிப்பட்ட பகை எதுவும் இல்லை. ஆனால் பாஜகவின் அரசியல், பிரித்தாளும் கொள்கையை எதிர்க்கிறேன்.  பாஜக மக்களை பயன்படுத்துகிறது என்பதை சொல்ல விரும்புகிறேன். என்னுடைய மொழியை எளிமையாக பயன்படுத்துகிறேன். மக்கள் மீதான அக்கறையை அவர்களுக்கு நேரிடையாக சொல்ல வேண்டும். அரசியல்வாதிகளை நம்பாதீர்கள், அவர்கள் சொல்வதை, செய்வதை நம்பாதீர்கள் என நான் சொல்கிறேன். நான் சொல்வதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்” என பதிலளித்திருக்கும் பிரகாஷ் ராஜ்,

“மதவாத அரசியல் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, நான் தவறாக பேசுகிறேன் என நிரூபிக்க முடியுமா என பாஜகவினரை கேட்கிறேன். பீகார், மேற்கு வங்கத்தில் மதக்கலவரங்கள் நடந்தபோது, பாஜக அவற்றை முன்நின்று நடத்தியது. கத்துவா, உனா பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாஜக தலைவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது உடைக்கக்கூடும் என்கிற பயத்தில் அம்பேத்கர் சிலைகளுக்கு கட்டாய பாதுகாப்பு அளிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். அரசியல் சாசனத்தின் மீது அதன் கோட்பாடுகள் மீது தாக்குதல் நடக்கிறது. பிப்ரவரி 14   சாதி-மத-இனங்களை மறுத்து இணைந்த இளைஞர்களை தடிகளை எடுத்து அடிக்கக் கிளம்பும் நபர்கள் ஒருபோதும் கைதாவதில்லை. இன்னும் நாம் எதை இழக்கவில்லை என ஒரு கேட்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் மதவாத அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவுதான், இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து.”

கர்நாடக தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் பிரகாஷ்ராஜ்,

“உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்; சிந்தியுங்கள். நீங்கள் சிந்திக்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்கவில்லை என்றால் தார்மீக ரீதியாக அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். மோடியை கேளுங்கள்; அமித் ஷாவைக் கேளுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள்” என சொல்லும் அவர் அமித் ஷா குறித்து கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார்.

“நான் கேட்கிறேன்…யாரிந்த அமித்ஷா? அவரை இந்த அளவுக்கு ஏன் கொண்டாட வேண்டும்? அவரைப்  பார்த்து நீங்கள் பயம் கொள்ள வேண்டும். அவரால் நினைத்த நபர்களை வாங்க முடியுமா? அல்லது அவர் அதிபுத்திசாலியா? அதனால் மக்களை தீவிரவாதிகளாக்க முடியுமா? இதெல்லாம்தான் இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்கான இலக்கணமா?” என்கிற பிரகாஷ்ராஜ், பாஜகவின் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ முழக்கம் நாட்டுக்கு நல்லதா எனவும் கேட்கிறார்.  எதிர்க்கட்சியே இல்லாத இந்தியா வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்கு எனவும் சுட்டிக்காட்டுகிறார். பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் வினவுகிறார் ராஜ்.

உங்களுடைய செயல்பாடுகளுக்கு எத்தகைய எதிர்வினை வந்துகொண்டிருக்கிறது என்கிற கேள்விக்கு,

“என்னுடைய சில விளம்பரங்களை நிறுத்தினார்கள், சில இந்தி படங்களும்கூட.  அவர்களுக்குப் புரியவில்லை, இழப்புகளை சமாளிக்கும் அளவு நான் பணக்காரனாகத்தான் இருக்கிறேன். நான் நேரடியாகவே கேட்கிறேன்… முடிந்தால் தென்னிந்திய படங்களில் நடிப்பதை தடுத்து பார்க்கட்டும். 2019-ல் மோடி பிரதமராகப் போவதில்லை. என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது கர்நாடகத்தில் பாஜகவால் அரசமைக்க முடியாது. அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள், நம்பிக்கையை இழக்கட்டும். அதித்யநாத்தும் அமித் ஷாவும் கர்நாடகத்தில் தலைவர்களாகவும் ஒருபோதும் ஆக முடியாது. நான் மக்களிடம் கேட்கிறேன், தலைவர்களை தேர்ந்தெடுத்து சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: