கருத்து

நாம் எப்போதும் ரொட்டிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டுமா?

கவனியுங்கள் சென்னை மெட்ரோவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பவில்லை, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நிறைந்த தென்மாவட்ட மாணவர்கள்தான் அலைக்கழிக்க படுகிறார்கள், மேற்கு வட மாவட்ட மாணவர்களும் இருக்கலாம்

அன்பே செல்வா

ஒரு கோடிக்கும் மேற்பட்ட ​சென்னை மக்கள் பெருவெள்ளத்தில் மிதந்ததற்கு ​ஜெயலலிதா என்னும் ஒற்றை சர்வாதிகாரியின் அலட்சியமே காரணம், ஆனால் அந்த அன்று ஏற்பட்ட பெருங்கோவம் அரசிற்கு எதிராக திரும்பாமல் மழுங்கடிக்கப்பட்டதற்கு பின்னால் உங்களின் இந்த விதமான உதவிகள் தான் இருந்தன, அதுதான் அடுத்துவந்த தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றி பெறவைத்து இன்றைக்கு இந்த அடிமை அரசின் அவலங்களுக்கு நம்மை ஆளாக்கியது..

அரசியல் தீர்வை நோக்கி நகராத சமூகம் செத்து விழும்.. எந்த மீட்பர்களும் ரொட்டி கொடுத்து காப்பாற்ற முடியாது..

இன்றைக்கு நீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பிளைட் டிக்கெட் தர்றேன், ட்ரெயின் டிக்கெட் தர்றேன் என்ற உங்களின் மனிதாபிமானம் போற்றுதலுக்கு உரியது, ஆனால் இந்த பிரச்சினையின் ஆணிவேரான மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டுவருவதை பற்றிய உங்களின் அழுத்தங்களை பதிவு செய்யாவிட்டால் உங்கள் உதவும் நோக்கம் முழுமையடையாது..

எத்தனை மாணவர்களுக்கு எத்தனை வருடங்களுக்கு பிளைட் டிக்கெட் எடுத்துக்கொடுப்பீர்கள் ?

மேற்கத்திய மொழியில் சொல்வதென்றால் நிறவெறியை ஒத்த இனப்பாகுபாடு நடந்திருக்கிறது, பச்சையாக இந்திய அரசு அதன் குறிப்பிட்ட மக்கள் மீது ரேசிஸ்ட் தன்மையோடு நடந்துகொண்டிருக்கிறது, நம் சொசைட்டியின் மீது சாணி அடித்திருக்கிறது.. நம் வீடுகளில் காரி உமிழ்ந்திருக்கிறது,

கவனியுங்கள் சென்னை மெட்ரோவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பவில்லை, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நிறைந்த தென்மாவட்ட மாணவர்கள்தான் அலைக்கழிக்க படுகிறார்கள், மேற்கு வட மாவட்ட மாணவர்களும் இருக்கலாம். ஆனால் குறிப்பு ஒன்றுதான் சூத்திரசாதி படிக்க வராத என்கிறார்கள், இவ்வளவு நெருக்கடியான அவமானகரமான நேரத்தில் கூட ஒரு சொசைட்டியை அரசியல் படுத்துவதை விட்டுவிட்டு துடைத்துக்கொண்டு ரொட்டி கொடுக்கலாம் என்கிறீர்களா?..

கேரளாவிலோ குஜராத்திலோ இது நடந்திருந்தால் அந்த மக்கள் இப்படித்தான் எதிர்வினையாற்றி இருப்பார்களா?, மாட்டுக்கறி விஷயத்தில் கேரளா எப்படி நடந்துகொண்டது?, அணுஉலையோ ஸ்டெர்லைட்டோ வடமாநிலங்களில் எப்படி விரட்டியடிக்கப்பட்டது. நமக்கு எப்போது சுரணை வருவது..

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு இந்த சமூகம் மிக பலகீனமான சமூகமாக மகஜர் கொடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டதில் இரு கழக ஆட்சிகளுக்கும் பங்கிருக்கிறது. இன்னும் எவ்வ்ளவு நாட்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி இந்த சமூகத்தை காக்க போகிறோம். மக்களை அரசியல் படுத்துவது ஒன்றுதான், அரசியல் விடுதலை ஒன்றுதான் நீதியை பெற்றுத்தரும்.

கல்வி மாநிலப்பட்டியலுக்கு வரவேண்டும், இல்லையென்றால் நம் குழந்தைகள் மருத்துவ கனவை தொலைக்க வேண்டும்..
ரொட்டி கொடுத்தெல்லாம் ஒரு சமூக விடுதலையை வாங்க முடியாது.

அன்பே செல்வா, அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.