கருத்து

தமிழக மாணவர்களுக்கு மட்டும் சோதனை என்கிற சித்ரவதை ஏன்?

தேர்வெழுத வந்தவர்களை மனிதர்களாக, தன் வீட்டுப்பிள்ளைகளாக மலையாளிகள் நடத்தினார்கள். ஆனால் தமிழகத்தின் நிலை?

ஜாபிர் பாக்கவி

நேற்றைய தினம் முழுக்க திருவனந்தபுரத்தில் நியூஸ் செவன் குழுவினருடன் கழிந்தது. நியூஸ் செவனுக்காக திருவனந்தபுரத்தின் பல சென்டர்களுக்கும் சுற்றினேன்.

அங்கெல்லாம் கண்கூடாக கண்ட, தேர்வு எழுதிய மாணவர்களிடம் நேரடியாக கேட்டறிந்த தகவல் என்னவெனில் எந்த மையத்திலும் மாணவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை. முழுக்கை ஆடையை அறுத்து அரைக்கையாக ஆக்கவில்லை; துரியாேதனன் சபை போல் துப்பட்டாவை இழுக்கவில்லை; புர்கா அணிந்து வந்தவர்கள் புர்காவுடனேயே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்கள்.

வெயிலில் வாட வைக்காமல் வெயிட்டிங்க் ஹால் அமைத்திருந்தார்கள்; படபடப்பு, பதட்டம் நீங்க எல்லாருக்கும் தண்ணீர் புகட்டியிருக்கிறார்கள். பேனாவைக்கூட அவர்களே பரிசோதித்து வழங்கியிருக்கிறார்கள். அதாவது பொதுவாக மாணாக்கர்களுக்கு மையத்தினர் தான் பேனாவை வழங்குவார்கள். புதிய பேனாக்களில் சில எழுதாதமல் அடம்பிடிக்கலாம். அதை மாற்றி வாங்குவதற்குள் நேரமும் குறையும்; மாணாக்கர்களுக்கு பதட்டமும் கூடும். எனவே இங்குள்ள சென்டர்களில் அவர்களே பேனாவை பரிசோதித்து பார்த்த பிறகு வழங்கியிருக்கிறார்கள்.

ஆதார் கார்டையெல்லாம் மலையாளிகள் பரிசோதிக்கவில்லை. வாசலில் செக்யூரிட்டிகள் மாணவர்கள் வைத்திருந்த கலர் போட்டாே ப்ளஸ் அவர்கள் முகத்தையும் ஒரு பார்வை பார்த்து உள்ளே அனுமதித்தார்கள்.

ஐடி கார்டு, ஆதார்கார்டு போட்டோவை வைத்து ஆளை சரிபார்க்க நாசா விஞ்ஞானிகளால் கூட முடியாது என்பதை மூளையுள்ள மலையாளிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.  என்றாலும் குறித்த நேரத்தினுள் சென்டருக்குள் சென்றுவிட வேண்டும் என்ற ஒரேயொரு விசயத்தில் கறாராக இருந்தார்கள். அதைக்கூட மனிதாபிமான முறையில் செயல்படுத்தினார்கள்;

பள்ளியின் வெளியிலும், சாலையில் சற்று தூரத்திலும் ஆட்களை நிறுத்தி “சீக்கிரம் வாருங்கள். இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது, இன்னம் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கிறது, இன்னும் மூன்று நிமிடங்கள் தான் இருக்கிறது; சீக்கிரம் வாருங்கள் என்று விரைவுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

மொத்தத்தில் தேர்வெழுத வந்தவர்களை மனிதர்களாக, தன் வீட்டுப்பிள்ளைகளாக மலையாளிகள் நடத்தினார்கள். உண்மையும் அதுதானே! சில ஆயிரம் தமிழர்களைத் தவிர மீதியெல்லாேரும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தானே. அவர்களுடன் நமது பிள்ளைகளையும் அவ்வாறே நடத்தினார்கள்.

ஆனால் தமிழகத்தின் நிலை? மேலே நான் சொன்னதில் ஏதாவது வசதிகள் தமிழகத்தில் அளிக்கப்பட்டதா? மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள்! எத்தனை துச்சாதனன்கள்!
ஏனிந்த இழிநிலை? இது எப்போது மாறும்?

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.