இந்துத்துவம்

பொது இடங்களில் இஸ்லாமியர் தொழுகை செய்யக்கூடாது: ஹரியாணா முதல்வரின் பேச்சுக்கு எழுத்தாளர் தஸ்லிமா ஆதரவு

மசூதிகளில் மட்டுமே இஸ்லாமியர் தொழுகை செய்யலாம்; பொது இடங்களில் அல்ல என பேசியுள்ளார் ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

ஹரியாணாவில்  உள்ள குருகிராமில் திறந்த வெளியில் இஸ்லாமியர் தொழுகை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி குழுக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில முதல்வர், பொது இடங்களில் தொழுகை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அதனால், மசூதிகளில் அல்லது ஈத் கா எனப்படும் திறந்த வெளி வழிபாட்டிடங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இடப்பற்றாக்குறை இருந்தால் தனி நபர்களின் இடங்களில் நடத்தலாம், பொது இடங்களில் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனோஹர் லால் கட்டாரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள அவர், பொது இடங்களில் வழிபாடுகளை செய்யும் மற்ற மதத்தினரும் இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு தடையை ஏற்படுத்து சரியல்ல என்கிறார்.

 

 

முன்னதாக, குருகிராமில் ஏப்ரல் 20 ஆம் தேதி காலி மனை ஒன்றில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, சம்யுத் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவ இயக்கத்தினர் ரகளையில் ஈடுபட்டனர். ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ராதே ராதே’ என்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டு இஸ்லாமியர்களின் தொழுகைக்கு இடையூறு செய்தனர். இவர்களில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஆளும் பாஜக அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கைதை கண்டித்துக்கு இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தியதோடு, கட்டாரிடம் இஸ்லாமியர்கள் 50%க்கும் மேல் வசிக்கும் இடங்களில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கக்வேண்டும் என்கிற மனுவையும் அளித்தனர்.

இதேபோல, சென்ற வெள்ளிக்கிழமையும் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தொழுகைக்கு இந்துத்துவ குழுக்கள் இடையூறு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநில நிர்வாகம் எந்த இடங்களில் தொழுகை நடத்தலாம் என அறிவுறுத்தும் விதமாக பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s