கருத்து

கர்நாடக தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் செய்த தவறு…

மாதவராஜ்

மாதவராஜ்

காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை பாஜக தலைவர்களும், ஊடக மேதாவிகளும் அடித்த அரட்டைகளும், ஆடிய ஆட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு சமயத்தில் பிஜேபி 112 முன்னிலை என்று காட்டியதும், “That is the magic number” என்று ஓவென்று பாஜக தொண்டர்களை விட ஊடக அறிவிப்பாளர்கள் கத்தித் தொலைத்தார்கள். தாமரைச் சின்னம் பொறித்த கொடிகள் ஆனந்தக் கூத்தாடியதை திரும்பத் திரும்ப காண்பித்துக் கொண்டிருந்தனர்.

முன்னிலை மேலும் அதிகமாகி 117 என்றதும் ஊடகங்களின் கூச்சல் மேலும் அதிகமாகியது.

“தேர்தல் முடிவுகளையே மோடி என்னும் மந்திரம் அப்படியே புரட்டிப் போட்டு விட்டது”

“காங்கிரஸின் இறுதி அத்தியாயம் கர்நாடகாவில் எழுதப்படுகிறது”

“மோடி அலை ஓய்ந்தது என்றவர்கள் வாயடைக்கப்பட்டது”

“சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் எடுபடவில்லை”

“தென்னிந்தியாவில் பிஜேபி அழுத்தமாக கால் பதித்துவிட்டது”

இந்தியாவின் வரைபடத்தை காண்பித்து, பிஜேபி ஆளும் மாநிலங்களையெல்லாம் காவி நிறத்தில் காண்பித்து “இந்தியா முழுவதும் காவிப் புயல்” என தோள் தட்டினார்கள்.

கர்நாடகா பிஜேபி தலைவர், ”எங்களுக்கு இன்னும் ஏமாற்றமே. 127 தொகுதியில் ஜெயிப்போம் என நினைத்தோம். பார்ப்போம். இன்னும் நேரம் இருக்கிறது” என தெனாவெட்டாக பேசினார்.

”போதும், போதும்” என நிர்மலா சீதாராமன் கொண்டாட்டத்தோடு பொய்யாய் மறுக்க மறுக்க, ரவிசங்கர் பிரசாத் அவருக்கு இனிப்பை ஊட்டினார்.

“இது மோடிக்கு கிடைத்த வெற்றி. மோடி காட்டும் development-க்கு கிடைத்த வெற்றி. மோடி முன்மொழிந்த புதிய இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. மோடி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டும் வெற்றி.” என இறுமாப்போடு நிர்மலா சீதாராமன் அடுக்கிக் கொண்டே போனார்.

ஆனால் இத்தனை அலப்பறைகளும் பிஜேபியினர் செய்துகொண்டு இருக்கும்போது, பிஜேபி பெற்ற வாக்குகள் சதவீதம் 37 ஆகவும், காங்கிரஸ் பெற்ற வாக்குகள் சதவீதம் 38 ஆகவும் இருந்தன. காங்கிரஸை விட ஒருசதவீதம் ஓட்டு குறைவாக வாங்கிக்கொண்டு, “மோடியின் ஆட்சிக்கு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்” என நெஞ்சு நிமிர்த்துவதற்கு காவிக்கும்பலால்தான் முடியும்.

காங்கிரஸின் வாக்குகளோடு, மதச்சார்பற்ற ஜனதாதளம் பெற்ற வாக்குகளையும் கூட்டினால் 56 சதவீதமாகிறது. பிஜேபி அருகிலேயே இல்லை. ‘It’s a complete sweep for BJP’ என்றும் ‘Entire Karnataka is with Modi’ என்றும் ரிபப்ளிக் டிவி சொல்லியபடி முகமெல்லாம் ஒரே சிரிப்பாய் இருந்தது.

மெல்ல மெல்ல பிஜேபி ஒவ்வொன்றாக குறைந்து 110 என்ற முன்னிலை வந்ததும், கொஞ்சம் அதிர்ச்சி தெரிந்தது. ஆனால் கெத்தை விடாமல் பிஜேபி தொடர்ந்து தேர்தலில் எப்படி சாம்பியனாகிறது என்று தொடை தட்டி விவாதித்தார்கள். மேலும் இறங்கி 106 என்று வரவும் இறுக்கமானார்கள். “குமாரசாமி முதலமைச்சராக இருக்கட்டும். மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்” என காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததும் எல்லாம் முடிவுக்கு வந்தது.

“பிஜேபியை வெளியே தள்ள எதிரிகள் இணைந்தார்கள்’ என எரிச்சலோடு டைட்டில் போட்டு அடுத்து என்னவாகும் என விவாதிக்க ஆரம்பித்தார்கள். இனிப்புகளும், தாமரைக் கொடி அசைவுகளும் காணாமல் போயின. எல்லா சேனல்களிலும் மாற்றி மாற்றி தலைகாட்டி வந்த நிர்மலா சீதாராமன் அதன் பிறகு எங்கே போனார் என்று தெரியவில்லை.

பிஜேபி சொல்வது போல காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருக்கலாம். ஆனால் பிஜேபி இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கே எதிரி. அதனை வீழ்த்த காங்கிரஸ் இப்போது ஒரு ‘செக்’ வைத்திருக்கிறது. ஆட்டத்தின் அடுத்த நகர்வில் பிஜேபி ஆட இருக்கும் Foul play தெரிகிறது. பார்ப்போம்.

ஆனாலும் கொட்டம் இப்போதைக்கு அடங்கி இருக்கிறது.

காங்கிரஸுக்கு இந்த புத்தி தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால், இந்தியாவே கர்நாடகா தேர்தல் முடிவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இப்போது.

மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: