செய்திகள்

மோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி

கர்நாடக ஆளுநர் வஜுபய் வாலா, பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தைக் கண்டித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், நீதிபதி டி.ஒய். சந்திரசூத் அடங்கிய அமர்வு ஜெத்மலானி தன்னுடைய மனுவை அதற்கென்று ஒதுக்கப்பட்ட அமர்வில் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். வாய்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக  இருந்தவர் ராம்ஜெத்மலானி .

இந்த மனு குறித்து ஊடகங்களிடம் பேசிய ஜெத்மலானி, நரேந்திர மோடியை அகற்றுவதே இதன் பின்னால் உள்ள நோக்கம் என தெரிவித்தார். “மோடியை அகற்றுவதே மீதமுள்ள ஒரே பணி” என்ற அவர், உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

பாஜகவின் குதிரை பேரம் குறித்து பேசிய அவர், “இது குதிரை பந்தயம் அல்ல, கழுதை பந்தையம். ஊழலுக்கான வெளிப்படையான அழைப்பு… ஜனநாயக்கத்தை அழித்து விட்டுத்தான் அவர்களால் வாக்குகளை வாங்க முடியும்” என கடுமையாக சாடினார்.

நரேந்திர மோடியுடன் ஆளுநருக்கு உள்ள நெருக்கத்தின் காரணமாகவே ஆளுநரின் பாஜகவுக்கு சாதகமான நடவடிக்கைகள் உள்ளன என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பான்மை பெறாத நிலையில் பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக முதல்வரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். எடியூரப்பாவின் பதவியேற்பை தடை செய்யக்கோரி காங்கிரஸ், மஜத உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால், நீதிமன்றம் நீராகரித்தது. எடியூரப்பாவின் பதிலைக் கேட்டிருந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு வழக்கை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரிக்க தள்ளி வைத்துள்ளது. இந்த அமர்வில் ஜெத்மலானியின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.