கருத்து

எந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது சாதியச் சிந்தனை: குட்டி ரேவதி

இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இதுவரை போராட்டக்களத்தில் பணயமாக, இரையாக வைக்கப்பட்டது ஒடுக்கப்பட்டவர்களின் உடல்கள் தான்.

குட்டி ரேவதி

குட்டி ரேவதி

உடல் என்பது ஆயுதமா?

அண்ணல் அம்பேத்கர் கருத்தியல் படி, நம் உடல் என்பதே ஆயுதம் இல்லை. இந்த நம்பிக்கை நிறைய தற்கொலைகளுக்குத் தான் நம் மக்களை அழைத்துச் செல்லும். உடல் என்பது ஆயுதம் என்பது அதிகாரச் சிந்தனை. அது விடுதலைச் சிந்தனை அன்று.

அப்படி அது விடுதலைச் சிந்தனை என்றால் ஏன் அதிகாரச் சாதியில் இருப்போர், அதிகாரத்தில் இருப்போர் தற்கொலை செய்து கொள்வது இல்லை, தன்னை அழித்துக் கொள்வது இல்லை.

நெஞ்சில் துப்பாக்கி ஏந்தும் துணிவு வேறு. இதை நாம் கருத்தியலுக்கான போராட்டமாக, சிந்தனையாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இதுவரை போராட்டக்களத்தில் பணயமாக, இரையாக வைக்கப்பட்டது ஒடுக்கப்பட்டவர்களின் உடல்கள் தான்.

இந்தியாவில் அதிகார வர்க்கம் பெற்ற விடுதலையாகக் கூவிக்கொள்வது எல்லாம் நம் மக்களின் கொல்லப்பட்ட உடல்கள் மேல் தாம்.

இந்தியாவின் உடலரசியல் என்பதும் சமூக அரசியலில் உடலை இணைத்துப் பேசுவதும் நீண்ட விரிவான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உரியது. இந்த நிலையில், நம் மக்கள் ஒவ்வொருவரின் உயிரும் மிக மிக அவசியம்.

அனிதாவையே எடுத்துக் கொள்வோம். சமூகத்தின் அடித்தட்டிலிருந்து எழுந்து வரும் ஒருவர் குடும்பமாகப் போராடிப் பெறும் கல்வியறிவும் அவரின் பொருளாதார பலமும், அவரின் வலிமையும் அவர் பெறும் வாய்ப்புகளும் அவர் பெறவேண்டிய நல்வாழ்வும் அவரின் சிந்தனையும் அவர் பலமும் சமூகத்திற்கு ஒரு நூற்றாண்டு முயற்சிக்கு, பல தலைமுறைகளின் போராட்டத்திற்கு இணையானது, நண்பர்களே!

எந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது, சாதியச் சிந்தனை. இதை மாற்றி வைப்போம், இதிலிருந்து வெளியேறுவோம்.

உடல் என்பது ஆயுதம் என்ற நம்பிக்கையிலிருந்து வெளியேறுவது தான் நாம் அடிமைச்சிந்தனையிலிருந்து முழுமையாக வெளியேறுவதாகும்.

மாவீரன் கிட்டு கதை நல்ல கதை தான். சாதியால் ஒடுக்கப்படும் ஓர் இளைஞன் வீறு கொண்டு எழுந்து வரும் கதை தான். ஆனால் அந்தக் கதையிலும் இதே பிரச்சனை இருந்தது. சாதி வழியாக ஒடுக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு சமூகப்படியாகப் போராடி எழுந்து வந்து பின் தன்னைத்தானே தியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவது மீண்டும் சமூகத்தின் அதிகாரச் சிந்தனைக்குத் துணை போவதே.

எதைக் காரணம் காட்டியும் அவர் அதைத் துறக்கத் துணியக்கூடாது. ஏனெனில், தனியொருவர் பெறும் உரிமை எதற்கும் அவர் மட்டுமே காரணம் இல்லை.

சிந்தனை தான் ஆயுதம்!

குட்டி ரேவதி, எழுத்தாளர், திரை இயக்குநர்.

முகப்புப் படம்: நீட் தேர்வு குளறுபடிகள் மூலம் தன் மருத்துவ கனவு கலைந்துபோனதாக தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.