இந்துத்துவம்

அறிவிக்கப்படாத அவசர நிலை: மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது; கண்டனங்கள்

மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதும், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்கள் வீடுகளில் சோதனைகள் நடப்பதும் நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது.

சட்டிஸ்கரில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வருபவரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் வெர்னான் கன்சல்வஸ், கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை, டில்லி, ராஞ்சி, கோவா மற்றும் அய்தராபாத் ஆகிய இடங்களில் செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்துள்ளன. இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 153 எ, 505, 117 120 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் கீழ் சுதா பரத்வாஜ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#பீமா_கோரோகான் பிரச்சனையை ஒட்டி ஏற்கனவே தலித்துள், பெண்ணிய செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளபோது, இந்த கைதுகளும் சோதனைகளும் புனே காவல்துறையின் கட்டளைப்படியே நடந்துள்ளன. அமைதியாக நடந்த பீமா கோரேகான் நிகழ்வை பயங்கரவாத நிகழ்வு போல காட்ட முயற்சிப்பது அடிப்படையற்றது; கண்டனத்துக்குரியது.

மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது, பயங்கரவாதச் செயல்களுக்காக கருப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது அதிர்ச்சி தந்தாலும் ஆச்சரியம் தரவில்லை.

தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும், பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிடும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களை படுகொலை செய்யும் சனாதன் சன்ஸ்தா, சிவ பிரதிஸ்தான் போன்ற அமைப்புகளை பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேசப் பற்றாளர்கள் என்று அழைப்பதும் நடக்கிறது.

இந்த கைதுகளும் சோதனைகளும், நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் முயற்சியே ஆகும்.

#இந்தக்கைதுகளையும்சோதனைகளையும்வன்மையாகக்கண்டிக்கிறோம்.
#இன்றுகைதுசெய்யப்பட்டசுதாபரத்வாஜ்கவுதம்நவ்லகாவெர்னான்கன்சல்வேஸ்,#வரவரராவ் ஆகியோரை #விடுதலைசெய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மோடி ஆட்சியின் அறிவிக்கப்படாத அவசர நிலையில் செயற்பாட்டாளர்களும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள்; சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
#வன்மையான_கண்டனங்கள்!

பிரபாத் குமார்,

மத்திய கமிட்டி, இகக(மாலெ), CPIML
புதுடெல்லி, 28 ஆகஸ்டு 2018

 

NCHRO Statement on the raids at the residences of activists

Chennai, 28, Aug 2018

இன்று டெல்லி, ஜார்கன்ட், மும்பை, மகாராஷ்டிரம், கோவா ஆகிய ஐந்து மானிலங்களில் உள்ள முக்கிய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் முதலானோர் வீடுகள் சோதனையிடப்பட்டு, சிலர் கைதும் செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வழக்குரைஞரும் பி/.யூ.சி.எல் அமைப்பின் தேசியத் தலைவருமான சுதா பரத்வாஜ், எழுத்தாளம் மனித உரிமைப் போராளியுமான கௌதம் நவ்லக்கா ஆகிய இருவரும் போலீஸ் காவலில் உள்ளதாகவும் அறிகிறோம். தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்யும்டே, செயல்பாட்டாளர் சூசன் ஆப்ரஹாம், ஜார்கன்டில் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்யும் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சாமி, ஆந்திரக் கவிஞர் வரவர ராவ், வழக்குரைஞர் அருண் ஃப்ரெய்ரா ஆகியோரது வீடுகள் சோதனை இடப்பட்டுள்ளது.

சென்ற டிச 31 அன்று புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னத்தில் தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் கூடி ‘எட்கார் பரிஷத்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினர். அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. தலித் படை வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர். இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாஓயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி இரண்டு மாதங்கள் முன் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. இன்று வீடுகள் சோதனையிடப்பட்டவர்கள் அனைவரும் அந்தக் கைதுகளைக் கண்டித்தவர்கள்.

இப்படி மக்களுக்காகப் போராடுபவர்கள் மற்றும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலித் அறிவுஜீவிகள் ஆகியோர் மத்திய – மாநில பா.ஜ.க அரசுகளால் துன்புறுத்தப்படுவதை ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று போலீஸ் காவலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்..

பேரா. அ.மார்க்ஸ் பேரா. பி. கோயா
தேசியத் தலைவர் பொதுச்செயலாளர்

One comment

  1. தேர்தல் நெருங்கியாச்சு. மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களை விலைக்கு வாங்கியாச்சு, மோடியின் அண்டப் புளுகை எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் இந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் ஊசிய வச்சு ஓட்டைப் போட்டு நாத்தத்த வெளியில் கொண்டு வர்றாங்க. அவங்கள போட்டுத் தள்ளு, இல்ல உள்ளே போடு – இதுதான் மோடியின் மந்திரம்.

    ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படும்போது, கட்டாயம் வெடிக்கச் செய்யும். மோடியைக் கொல்ல எந்த ஒரு குழந்தையும் பிறந்து வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், மோடி ஒரு பாசிஸ்ட்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: