இலக்கியம்

#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி

நண்பர்களே….

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.

சுமார் 200,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்றிலக்கியங்களிலும் இதையொட்டிய செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது 1957 இல் GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY வெளியிட்டுள்ள “தூதுத் திரட்டு” என்ற தொகுப்பு நூல். அத்தொகுப்பில் உள்ள “சங்கரமூர்த்தி ஐயரவர்கள் விறலிவிடு தூது” என்ற நூலில் சில செய்திகள் பதிவாகி உள்ளன. Metoo போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களாக 1 அரசு அதிகாரிகள், 2 கோவில் அதிகாரிகள், 3 பணம் படைத்த பிரபுகள், 4 மிகப் பெரிய வணிகர்கள், 5 ஊர்கணக்குப் பிள்ளை, 6 கடைநிலை அரசு ஊழியர் 7 செல்வாக்குப் பெற்ற “பெரிய” மனிதர்கள் போன்ற பலருடைய குணாம்சங்களும் அவர்களை அனுசரிக்காத பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள அத்தகைய பகுதிகளில் (பக்.108,109,110,111) சிலவற்றை உங்கள் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன். இந்நூலினுள் பேசப்படும் பல செய்திகள் கொச்சையாகவும் பச்சையாகவும் உள்ளதால் நான் இதை இங்கு பதிவிடவில்லை. நூலை படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இந்த இணைப்பை தருகிறேன். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர்.  முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

எழுதிய நூல்கள்:பொற்காலங்களும் இருண்ட காலங்களும், கோவில் நிலம் சாதி, பொய்யும் வழுவும்

Advertisements

2 கருத்துக்கள்

  1. ஆண்மேலாதிக்க சமுகத்தில் காலத்துக்குக் காலம் பெணெழுச்சிகள் நடந்துதான் வருகின்றன என்பதை ஆதரங்களுடன் காட்டியமைக்கு நன்றி. என்றுதான் இப்பிரச்சனைக்கு ஓர்தீர்வுவருமோ? அழித்தொழிக்கப்பட்ட தாய்வழி சமூகம் மீண்டும் நிறுவப்படவேண்டும். அதுவரை போராட்டங்கள் எழுவதும் தணிவதுமாக நடந்கொண்டேயிருக்கும். தொடரட்டும் தனது முடிவுவரை.

    Like

Arinesaratnam Gowrikanthan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: