சந்திரமோகன்

அண்மையில் இந்தியா வந்திருந்த ட்விட்டரின் செயல் அதிகார் ஜாக் டோர்சே, ட்விட்டரில் ட்ரோல்களால் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின், அனைவரும் குழு படம் எடுத்துக்கொண்டனர். அப்போது “பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்” என்ற வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்தார் ஜாக். இந்தப் படம் ட்விட்டரில் வெளியாகி பார்ப்பனர்கள் சர்ச்சையை கிளப்பினர்.
அவருக்கு எதிராக,பார்ப்பனர்கள் திட்டமிட்டு நாள் முழுவதும் ட்வீட் செய்து மன்னிப்புக் கேட்க வைத்தனர். “சிறும்பான்மை பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அந்த வாசகம் இருப்பதாகவும், ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அவர் அதனை வைத்திருப்பது உலக சிறும்பான்மையினருக்கு எதிரான ஆதிக்க போக்காக இருக்கிறதென்றும்” ஒரு நாள் முழுக்க ட்வீட் செய்து மன்னிப்பு கோர செய்தனர்.
மனிதத்தன்மையற்ற சாதீய ஆதிக்கத்தின், பெண்ணடிமைத் தனத்தின் தோற்றுவாயான பார்ப்பனியத்தை எதிர்த்தால், பார்ப்பனர்கள் மன்னிப்பு கேட்க வைப்பார்கள் என்றால், அதனை மீண்டும் மீண்டும் எதிர்ப்பது நமது தலையாய கடமையாகும்.
பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்! #SmashBrahminicalPatriarchy!
நொறுக்க வேண்டியது பார்ப்பனிய ஆணாதிக்கத்தை மட்டுமல்ல!பார்ப்பனியத்தையே நொறுக்கவேண்டும்!
“ஒரு மனிதன் ஒரு மதிப்பு” என்பதை ஏற்காதது பார்ப்பனியம்!
சகமனிதனை தாழ்ந்தவனாக கருதுவது பார்ப்பனியம்!
சக மனுஷியை அடிமையாக கருதுவது பார்ப்பனியம்!
தனக்கு தான் அறிவு உள்ளது, புனித தன்மையும் உள்ளது என்பது பார்ப்பனியம்!
தான் தான் சரி, மற்றவர் எல்லாம் முட்டாள் என்பது பார்ப்பனியம்!
தன்னை மீறி யாரும் வளரக்கூடாது என்பது பார்ப்பனியம்!
வளர முயற்சித்தால் அடக்க அல்லது அழிக்க முயற்சிப்பது பார்ப்பனியம்!
இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடை பார்ப்பனியம்!
எனவே நொறுக்கப்பட வேண்டியது பார்ப்பனியம்.
சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.