ஊடக அரசியல்

தந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது

தந்தி டிவியை முழுக்க இந்துத்துவம், ஸ்டெர்லைட், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாற்றியது பாண்டே இழைத்த தமிழர் விரோத பெருங்குற்றம்.

ராஜ்தேவ்

தந்தி டிவியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறியிருக்கும் பாண்டே விலகலுக்கான முதன்மை காரணத்தை இரண்டாம் பட்சமாகவும்; இரண்டாம் பட்சமான அல்லது பொய்யான ஒன்றை முதன்மைக் காரணமாகவும் கூறியிருக்கிறார்.

நிர்வாகத்துடனான மோதலை அது எங்கு தான் இல்லை என்ற ரீதியில் நம்மை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூறி விட்டு; ஒரு வேளை தன் தரப்பு நியாயத்தை கூறினாலும் நிர்வாகம் அதை ஏற்காது என்றும் கூறியுள்ளார். அப்படியென்றால் தந்தி டி.வி நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு முற்றிப்போன காரணம் இருப்பதை பாண்டே ஒத்துக்கொண்டிருக்கிறார். நோட்டீஸ் காலம் வரைக்கும் கூட அவர் பணியாற்ற அனுமதிக்கப்படாததும் தெரிய வருகிறது.

டைம்ஸ் நவ் – லிருந்து அர்னப் வெளியேற்றப்பட்ட போது தனக்கேற்பட்ட மோசமான அனுபவங்களை கூறினார். நோட்டீஸ் காலத்தின் கடைசி நாட்களில் தனது அலுவலக இருப்பிடம் செல்லக்கூட அனுமதிக்காததை கூறினார். தந்தி டி.வி.யை பயன்படுத்தி பண ஆதாயம் அடைந்தது அல்லது தனது அஜெண்டாவுக்கு தந்தி டி.வி.யை முழுக்க வளைக்க நினைத்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் பாண்டே மீது இருந்திருக்க வேண்டும். உண்மையான காரணத்தை வெளியே சொல்வதை பாண்டே கவுரவக் குறைச்சலாக எண்ணியிருக்க வேண்டும்.

தந்தி டிவியில் தனது ஒரேவிதமான வேலை பாணி அயர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பாண்டே கூறுகிறார். தினமும் உண்ணும் வெஜிடேரியன் உணவு கூட பாண்டேவுக்கு அயர்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக அதை விட்டுவிட்டு பீஃப் சாப்பிடுவாரா? தந்தி டிவியிலிருந்து விலகும் எண்ணம் சில நாட்களாக தனக்கு ஏற்பட்டிருந்தது என்று கூறுவதை மட்டும் நம்பலாம். அது தந்தி டிவி பாண்டே மீது கொண்ட சந்தேகத்துக்கு பிறகு தோன்றிய எண்ணமாக இருக்க வேண்டும்.

தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர்களுக்கு வழிவிடவும் எடுத்த முடிவு என்று பெருந்தன்மையாக ஒரு பச்சைப்பொய்யை கூறியிருக்கிறார். பாண்டே ஒரு பத்திரிகையாளனே அல்ல; மோசமான அரசியல்வாதி என்று நமக்கு வருகின்ற சந்தேகத்தின் அடிப்படையே இது தான். நித்தியானந்தாவை பெரிய மகான் என்று இன்னமும் நம்பும் ஆசிரமப் பக்தர்களை போல பாண்டே கூறுவதை அவரது ரசிகக் குஞ்சுகள் மட்டுமே நம்ப முடியும்.

கடைசியாக பாண்டே தன்னுடன் வேறு சிலரும் விலகியிருப்பதாக கூறியிருக்கிறார். அவர்கள் யாரென்று தெரியவில்லை. ஹரிஹரன், கார்கே, (அது என்னடா… பாண்டே, கார்கே…) அசோகவர்த்தினி இவர்களனைவரும் பாண்டேவின் ஆட்கள்தான். தந்தி டிவியில் இருந்து விலகி ரிபப்ளிக் டிவி சென்ற ஹரிஹரனுக்கு அங்கு வேலை பிடிக்காததால் மறுபடியும் தந்தி டிவியில் செயல்பட வாய்ப்பளித்தது தந்தி டி.வி.யில் பாண்டே செலுத்திவந்த ஆதிக்கத்தின் ஒரு பச்சை குறியீடு.

பழைய தினத்தந்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு செய்திகளை அதிகளவு வெளியிட்டது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அதிகளவு செய்திகளை வெளியிட்டதை தமிழ்த் தேசிய அமைப்புகள் பாராட்டி ‘வாழிய வாழிய தினத்தந்தி’ என்று தினத்தந்தி அலுவலம் முன்பு கோசங்கள் போட்டன. ஆளும் கட்சி ஆதரவு என்ற சமரசத்துக்கு அப்பாலிருந்த தினத்தந்தியின் தனித்துவம் அது. தந்தி டிவியை முழுக்க இந்துத்துவம், ஸ்டெர்லைட், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாற்றியது பாண்டே இழைத்த தமிழர் விரோத பெருங்குற்றம். காலந்தாழ்ந்த நடவடிக்கை என்றாலும் தந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது.

ராஜ்தேவ், சமூக-அரசியல் விமர்சகர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.