இந்துத்துவம்

”சங்கிகளிடம் இருக்கும் இணைவு முற்போக்கு அமைப்புகளிடம் ஏன் இல்லை?”

ஒடியன் லட்சுமணன்

“இந்த நேரத்தில் இது தேவையா?”

“இது தேவையில்லாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்”

என்று சொல்லப்பட்ட மனிதிகளின் மலைப் பயணம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும்பாலான சங்கிகள் செல்வியின் முகப்புப் படத்தையும் பம்பை சென்றிருக்கும் பிற பெண்களின் முகப்புப் படத்தையும் போட்டு இது சி பி எம் கட்சியால் அனுப்பப்பட்ட குழு என்று தொடர்ச்சியாக ஒரு வாரகாலமாக இணையம் முழுக்க ஜல்லியடித்திருக்கிறார்கள்.

பஜ்ரங்தள் போல இயங்கும் சேவ் அய்யப்பன் கும்பலோ
“இவர்கள் மாவோ இயக்கத்தைச்சார்ந்தவர்கள்” என்று எழுதி சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள்.

அதே போல் கேரள இடதுசாரிகள் பலர் பா.ஜ. தலைவரோடு நிற்கும் சில பெண்களின் படங்களை பகிர்ந்து இதுதான் மனிதிகளின் பின்னணி என சங்கிகளின் சித்தாப்பு வேலையென்று சொல்லி வலம் வந்திருக்கிறார்கள்.

பாதுகாப்புக்குச் சென்ற சிலர் தவிர மற்ற எல்லோரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என்று தெரிந்தே இங்க இருக்கும் திடீர் ஆய்வாளர்கள் சாமியில்லன்னு சொன்னவங்களுக்கு சபரியில என்ன வேல என கேட்கிறார்கள்.

நடிகர்களிடம் நின்றுகொண்டு ஆயிரம் செல்ஃபிகளை எடுத்துப்போட்ட கும்பலொன்று இது சுயமோக விளம்பரத்துக்கு என்று எழுதுகிறது.

போலீஸ் லட்டியை தூக்கும்போது ஓடிப்போய் புதருக்குள் உட்கார்ந்துகொண்ட வீரக்குஞ்சு ஒன்று. பக்தர்கள் போர்வையில் ரவுடிகள் கல்லைக்கொண்டு எரியும்போது போலீஸ் குடைக்குள் தஞ்சமடைய ஓடிய அப்பெண்களின் வீடியோக்களை வைரலாக்கி ஓடிகாலிகள் என்று மாஞ்சு மாஞ்சு எழுதுகிறது.

மாமியா வீட்டில் தீபாவளி பரிசு வரலன்னு மனைவியிடம் ஒருவாரகாலம் மெளனவிரதமிருந்த மடச்சன் ஒன்று பெண்களுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்த அப்பெண்களைப்பார்த்து
மத்த பிரச்சினைகளின்போது இவர்கள் எங்க போனார்கள்? என்று லாவணி பாடுகிறது.

கேரள வெள்ளம் கடவுளின் கோபம் அனுபவிக்கட்டும் என்று எழுதிய கை ஒன்று கேரள வெள்ளத்தின் போது பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அனுப்பிவைத்த அப்பெண்களைப் பார்த்து வெள்ளத்தின் போது அங்க ஏன் போகலை என்று எழுதுகிறது.

அமைப்பில்லாமல்.பொதுவாக வரும் பெண்களை பம்பையிலிருந்து பாதுகாப்போடு 18 ஆம் படிக்கு சங்கிகள் கொண்டுசேர்ப்பதுபோல் இப்போது தர்ம நியாயம்பேசுகிறார்கள்.

தமிழக கேரள சங்கிகளுக்குள் இருக்கும் அடியாழ ஒருங்கிணைப்பை ஒப்பிடும்போது தமிழக கேரள இடது முற்போக்கு அமைப்புகளுக்குள் இருக்கும் ஒருங்கிணைப்பு எல்லாவகையிலும் குறைவு என்றுதான் தோன்றுகிறது.

ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; சமூக செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.