Author Archives

மு.வி.நந்தினி

ஊடகப் பணியில் 12 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர். ‘செய்து பாருங்கள்’ இதழின் ஆசிரியர், பதிப்பாளர். ‘செய்து பாருங்கள்’ தமிழில் வெளிவரும் கைவினைப் பொருட்கள் செய்முறைக்கான முதல் இதழ்!

ஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை […]

சட்டவிரோத தேர்தல்: எச்.ராஜா

சாரண, சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளதாக பாஜக தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

https://www.facebook.com/anbe.selva/posts/1492603270806521மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்; கைது… சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டம்…   விசிக […]

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு..

கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்

அனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி. இடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை. ஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் […]

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.   நாளையும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இரா.தெ.முத்து: அனிதாவிற்காக நாளை ( செப் 2 ) ஒரு போராட்டம் நடக்கிறது. வருக தோழர்களே சென்னை தாராப்பூர் […]

நீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைந்தநிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழக சூழலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. நியூஸ் 7, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு […]

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

ஏழு லட்சமும்…ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே..
இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க…
இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட
விலைபேசி அடிக்கிறீங்க…

மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார். மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து […]

மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பா.ம.க. இளைஞரணித் தலைவர் […]

நீட் : மாணவி அனிதா ‘ படுகொலை ’ மோடியும் எடப்பாடியும்தான் குற்றவாளிகள்: புமாஇமு ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோன நிலையில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை செப்டம்பர் – 2, […]

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்?

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்? கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்ல நீதிமன்றமும் மக்கள் அமைத்தது தான் என்றும் நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். […]

அனிதாவுக்கு பிரேத பரிசோதனை செய்ய மிரட்டி கையெழுத்து வாங்கினர்: அனிதா தந்தை குற்றச்சாட்டு

அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உள்ள அனிதாவின் உடலை வாங்க அவருடைய தந்தை சண்முகம் மறுத்துள்ளார். அனிதாவின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் தன்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் […]

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிபெண் 196.5 பெற்றிருந்த அரியலூர் மாணவி அனிதா வின் தற்கொலை […]

விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்

முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்… இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.

மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்!

பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!

முட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு

ஹெச் ஜி ரசூல் அவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். தொண்டரடி பொடியாழ்வார்களில் ஒருவன் தலைவரே அது பூனையை வாசிப்பதல்ல, வீணையை வாசிப்பது என்று சொல்லி முடிப்பதற்குள் சூறைப்புயல் சூஜே ஒரு போராட்டத்தை அறிவித்தார்…ஏவுகணை சிலையின் நெற்றியில் திருநீறைப் பூசும் போராட்டம் […]

10 சதத்திற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்களை வைத்துக் கொள்வதை எதிர்த்து பேரணி

” சம வேலைக்கு சம ஊதியம் ” என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தக் கோரி ஜூலை 28 அன்று சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த ஏஐடியுசி தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளிக்கும் சட்டப்படி இரண்டு […]

லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!

திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த ‘நான்’ தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார். குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன். அஃக் பரந்தாமன் சென்னையில் […]

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த ‘பார்ப்பனர்’ தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் […]

கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

அ. மார்க்ஸ் ‘கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்’ எனும் நூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதி நண்பர் செந்தில்நாதன் அவர்களின் ஆழி பதிப்பகத்தால் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் நடைபெற்ற கலவரத்தில் (Nov 1997) […]

”பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!”

”எழுத்தாளர் பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!” என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறினார். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரி நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு […]

“என்னை பதவி விலக கட்டாயப்படுத்தினார்கள்; மக்கள் விரும்பினால் முதலமைச்சராக பதவியேற்பேன்”: ஓ.பி. எஸ் அதிரடி

காபந்து முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடத்துக்கும் மேலாக திடீர் தியானத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சில முக்கிய விஷயங்களை நாட்டு மக்களுக்கும் அதிமுக கழக தொண்டர்களுக்கும் தெரிவிப்பதாக கூறினார். […]

“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை”

“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கிறது. இதுவரை […]

மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராம மோகன ராவ் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக ராம மோகனராவின் வீட்டில் […]

ராம் மோகன்ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாலை முதல் சோதனை செய்து வருகிறது. அவருக்கு நெருக்கமானவர்களின் 13 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயவாடாவில் உள்ள ராம்மோகன் ராவின் உறவினர் வீட்டில் நடந்த சோதனையில் 40 கிலோ தங்கம் பறிமுதல் […]

நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது: இரா. முத்தரசன்

நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கிடையாது. +2 தேர்வில் […]

முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

கல்வியாளரும், முற்போக்கு சமூக சிந்தனையாளரும், மொழி சீர்த்திருத்த ஆய்வு அறிஞரும், கவிஞருமான, முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி 10.12.2016 அன்று சென்னையில் காலமானார். கல்வியாளர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக […]

மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை

அருண் நெடுஞ்செழியன் தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்: http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece… கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா […]

“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”

ஜெயநாதன் கருணாநிதி: ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா! இறைவன் […]

குழப்பங்களுக்கு முடிவு: ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்பு

முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் சட்டமன்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன் […]

“ஜெயலலிதா மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பு:` தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வர் […]

“இனிமேல் இப்படி ஒரு மரணம் எந்தத் தலைவருக்கும் நடக்கக் கூடாது”: சுப. உதயகுமாரன்

பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் இரங்கல் அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் எண்ணிறந்த தமிழ் […]

#நிகழ்வுகள்: ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிகையாளர் பா.ஏகலைவன் எழுதியுள்ள ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். விழாவில் […]

மகிஷாசுரன் அரக்கனா? அரசனா?

மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் […]

இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்!

முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. […]

ரிக் வேதம் குறிப்பிடும் பிரகஸ்பதிதான் கணபதியா? விநாயகர் சதுர்த்தியின் வரலாறு

விநாயகர், கணபதி, யானை முகன் என ஏராளமான பெயர்களில் அழைக்கப்படும் இந்துக் கடவுள் தோன்றிய எப்படி என்பது குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. சிவனும் பார்வதியும் ஆண் யானை பெண் யானை உருவம் எடுத்து உறவு கொண்டதில் பிறந்து குழந்தை என்பதில் தொடங்கி பார்வதியின் அழுக்கில் […]

“சென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம்”: எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடல்

சென்னை நகரம் பலருடைய கனவுகளை கிளர்த்தெழவைக்கும் நகரம். பகட்டான வாழ்வியலுக்கு மட்டுமல்ல, அது தன்னகத்தே அடுக்கான கதைகளைக் கொண்ட நகரம். எனக்குள் இன்னமும் கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கும் நகரம். இந்நகரத்தின் கதைகளை படிக்கும் ஆர்வம் மேலோங்கிய நேரத்தில் ‘கறுப்பர் நகரம்’ நாவலை வாசித்தேன். ஒரு படைப்பு […]

“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

குஜராத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்துக்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த தலித் மக்களின் எதிர்வினை, இந்தியா முழுமைக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறையை எதிர்த்து, வெகுண்டெழுந்து இனி செத்த மாடுகளை தோலுரிக்க மாட்டோம் என […]