Author Archives

timestamil

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

நாடாளுமன்ற சனநாயக வானில் இப்போது ’துரோகி’ என்ற ஒலம் கேட்டப்படி இருக்கிறது. சசிகலாவை துரோகி என்கிறார் ஓ.பி.எஸ். ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஸையும் துரோகி என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நிதிஷை துரோகி என்கிறார்கள் லாலுவும் சரத் யாதவும். மோடியையும் அமித் ஷாவையும் துரோகி என்கின்றனர் அவரால் பதவி விலக்கம் செய்யப்பட்ட பா.ச.க. மூத்த தலைவர்கள்.

Advertisements

#நிகழ்வுகள்: தரமணி திரைப்படம் குறித்த கலந்துரையாடல்

வாசகசாலை ஒருங்கிணைக்கும் தரமணி திரைப்படம் குறித்த கலந்துரையாடல் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகின்றனர் திரைப்பட இயக்குநர் வடிவேல் மற்றும் ஊடகவியலாளர் விஜி பழனிசாமி. ரசிக பார்வையில் கருத்துகளை பகிர்கிறார்கள் குழலி மற்றும் சஜித். அதன் பிறகு கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது.

#நிகழ்வுகள்: யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் மூன்று நாவல்கள் அறிமுகக் கூட்டம்

யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் மூன்று நாவல்கள் அறிமுகக் கூட்டம் சென்னை இக்சா மையத்தில் நடைபெறுகிறது. தலைமை : கே.என்.சிவராமன் வாழ்த்துரை : சீராளன் ஜெயந்தன் பாக்கியம் சங்கர் கணபதி சுப்ரமணியன் நூல் குறித்துப் பேசுபவர்கள் கனவு ராட்டினம் குறித்து – கிருஷ்ணமூர்த்தி அற்றைத் திங்கள் […]

தரமணி: ஆல்தியாவும் ஆல்தியா நிமித்தமும்!

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் ‘சினிமா’. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன்.

ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு 

பெண் நாய்/அடிமை என்னும் பொருள்படும் ஆங்கில bitch தமிழில் தேவுடியாவாக மொழிமாற்றம் அடைகையில் தரமணி என்பதன் ஆங்கில  மொழிபெயர்ப்பு feminism என்பதாக இருக்குமோ? இருக்கலாம்? நீட்டினால் நமது கழுத்தை…

#நிகழ்வுகள்: மக்களை பிளவுபடுத்து சாதிய, மதவாத ‘சமூக உருவாக்க’ அரசியல் கருத்தரங்கம்

மோடியின் பாஜக அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானது. இதுவரை கண்டிராத கொடுங்கோல் அரசு இது. எவரையும் விட்டுவைக்காத, யாரையும் வாழவிடாத அரசு இது. மாநில அரசுகளை ஒடுக்கி, மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாது, மக்களை, சாதி, மத, இன அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. சாமானிய […]

இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?

மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. சமூக அரசியல் இயக்கங்கள் ஏற்படுத்திய சமூக தாக்கங்கள் ஒரு பின்புலமாகக்கூட ஏன் நவீன தமிழ் இலக்கியப் போக்குகளில் குறிப்பாக நவீன இலக்கியத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியை நாம் விவாதிக்கத்தான் […]

கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து

கும்பகோணம் பள்ளி தீவிபத்து உயர்நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2004 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 […]

கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு!

“சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”

#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்!

இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும்.

அன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்!

2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.

கழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்

தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள்.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்

நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் உணர்வுப்பூர்வமான உரைகளாலும் வளம் சேர்த்துவந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் எதிர்பாரா மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக நெருக்கமான தோழராகவும் இயங்கி […]

கடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்

பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.

அஞ்சலி: கவிஞர்; விமர்சகர் ஹெச்.ஜி ரசூல்

ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும் தமிழ் கவிதை மரபிற்கு நவீன இஸ்லாமிய சிந்தனையாளராகவும் அவரது பங்களிப்புகள் ஆழமானவை.

வெனிசுலாவின் எதிர்காலம் ..?

வெனிசுலாவில் நிறுவப்பட்ட அரசானது, சோசலிச பொருளாதார கொள்கைக்கு ஆதரவளிக்கிற அரசே தவிர, பாட்டாளிகள் விவசாயிகளின் சர்வாதிகார அரசல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக வடிவத்திலான வர்க்க சமரச ஆட்சியில் எதிர்கட்சிகளை உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக ஒடுக்குவது சாத்தியமற்றது. உழைக்கும் மக்கள் திரளின் ஆதரவின்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிற மதுராவின் முடிவு அவருக்கு எதிராக திரும்பவே செய்யும்.

நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்?

தாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர். 

அமித்ஷாவின் 300% சொத்து அதிகரிப்பும் மானிய ரத்தும்

இஸ்லாமியர்களை கொல்லலாம். தலித்துகளை கொல்லலாம். மதவாதத்தை திணிக்கலாம். வரலாற்றை மாற்றலாம். அரசியல் அமைப்பை திருத்தலாம். அதற்கு பன்னாடுகள், அதிகபட்சம் போனால் சின்னதாக கண்டனம் கொடுக்கும். அதற்கு மேல் ஒன்றும் செய்யாது.

“நீங்கள் வெர்ஜினா?”: பீகார் மருத்துவ கல்வி நிறுவனம் விண்ணப்பத்தில் கேட்கிறது!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஊழியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதில், திருமணமாகாதவரா? கணவர்/மனைவியை இழந்தவரா? கன்னித்தன்மை இழக்காதவரா? என […]

“நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது?”: சிறையில் இருக்கும் பேரா.சாய்பாபா தனது மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்திருக்கிறோமா? ஏன் நம்முடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டது? நம்முடைய கனவுகள் ஏன் குற்றமாக்கப்பட்டன?

லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது; பட்டாசு வெடித்த மக்கள்: காரணம் என்ன?

திருக்கோவிலூர் போலீசாரால் 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்பெண்களின் உறவினர்கள் 9 பேரை விழுப்புரத்தில் ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர் ஆய்வாளர் தமிழ்மாறன்.

“பன்றி” யார்? : பகுதி -2

வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் “நிலா காய்கிறது” பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது.

ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது மோடி அரசாங்கம் போர் தொடுக்கிறது!

கார்கில் தினத்தை நினைவுகூரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேஎன்யு துணை வேந்தர், ஜேஎன்யுவுக்கு தற்போது பயன்பாட்டில் இல்லாத ராணுவ பீரங்கிகள் வாங்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தேஜமு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மாணவர் மத்தியில் ராணுவத்தின் மீதான பற்றை […]

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு பயிற்சி: சுப. உதயகுமாரன் அழைப்பு

இது நீங்களே தலைவராகும் காலம் தோழர்களே! நீங்கள் இல்லையென்றால், வேறு யாராலும் முடியாது. இப்போது இல்லையென்றால் வேறு எப்போதும் முடியாது!

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

#நிகழ்வு:நூலகம் தொடக்க விழா; பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனுடன் கலந்துரையாடல்!

பள்ளிகளில் நூலகம் அமைப்பது என்பது ஒரு கனவுத் திட்டம். அமைப்பதோடு நில்லாமல் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வதும் அவசியமாக இருக்கிறது.

ஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை

இப்போது இன்னொரு பெயர் திடீரெனெ பிரபலமாகிவிட்டது ஜுனைத் என்ற பதினாறு வயது பையனை ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்கள் ரத்தம் வெள்ளத்தில் மிதக்கும் படங்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன ஒரே நாளில் நாம் பிரலமாவதற்கு தேச பக்தர்களால் நாம் கொல்லபடுவதைவிட சிறந்த வழி […]

நிழலழகி – 9: நம் சமூகத்துக்குத் தேவை ‘ஆர்ச்சி’கள்!

அதுவரை காதலுக்காகவும், காதலனுக்காகவும் எதையும் செய்துவந்த அர்ச்சனா தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டதும், காதல் கணவனையும் தூக்கி எறியத் தயங்கமாட்டாள்.

நிகழ்வுகள்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படம் திரையிடல்

சலாம் பொன்னுராக்கர் நினைவு கூறும் வகையில், அவர் இயக்கிய ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்ற ஆவணப்பட திரையிடல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது. திரையிடலுக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி, ஆவணப்பட இயக்குநர் பூவிழி ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது. […]

சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

கே. ஏ. பத்மஜா கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் […]

உதிர்ந்த கறுப்பு மலருக்கு அஞ்சலி

இரவிக்குமார் “கறுப்புமலர்கள்”, “சகாராவைத் தாண்டாத” ஒட்டகங்கள் முதலான தனது புதுக்கவிதைகளால் ஒரு காலத்தின் தமிழ்க் கவிதைத் தேரை முன் நகர்த்திய 75 வயது வரை வாழ்ந்த கவிஞர் நா.காமராசன் மறைவுக்கு கவியார்ந்த அஞ்சலி! நா. காமராசன், தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் […]

நக்சல்பாரியின் 50: லீலா மஜூம்தார் – சாருவின் துணைவியார் மட்டுமல்ல!

சி. மதிவாணன் “என் தாய் லீலா சாரு மஜூம்தாரின் துணைவியார் மட்டுமல்ல“, என்று சொல்கிறார் அவரின் மகன் அபிஜித். அவர் இப்போது CPI ML (Liberatin) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும் கூட. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் கூட. “என் தாய் சுதந்திரப் போராட்ட […]

ஜிஎஸ்டி: ஆபாச நூல்களுக்கு வரிவிலக்கு; குழந்தை நூல்களுக்கு 12% வரியா?

குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட  12 சதவீத ஜி.எஸ்.டி வரியை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஜூலை, 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. […]

இப்போது பரிணாமம் நிகழவில்லையா?

இப்போது ஏன் புழு வகைகளிலிருந்து மீன்கள் தோன்றவில்லை? இப்போது ஏன் மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் பரிணமிக்கவில்லை? இப்போதும் அது நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!

கடுகு-தமிழர் உணவில் நீக்கமற நிறைந்திருக்குமொரு உணவுப் பொருள். வட மற்றும் கிழக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இன்றும் சமையலுக்குப் பயன்படுவதோடு, கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்டது கடுகு. தேனீக்கள் வளர்ப்பிலும், பாரம்பர்ய மருத்துவத்திலும், கடுகுச் செடிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட கடுகு, பகாசுர பன்னாட்டுக் […]

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!

சந்திரமோகன் உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் ‘வான்னா க்ரை’ (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக […]

தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்!

சரவணன் சந்திரன் இந்தச் சூழலில், வேறு யார் முதல்வரானாலும் சரி தமிழகத்தைக் கட்டிக் கொண்டு அழ முடியாது என்றுதான் தோன்றுகிறது. நாக்கு வெளியே தள்ளி விடும். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர் ஆகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமுமே நம்பிக்கையின்மையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய குடை மர்மம் […]

ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா?

குமார் அம்பாயிரம் சீமை கருவேல் மரங்கள் அகற்றப் படுவது குறித்து இருவேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இது மக்களுக்கான எரிபொருள் வேலைவாய்ப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா? இம்மரத்தை […]

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

சந்திரமோகன் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி […]