வகை: இடதுசாரிகள்

கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்.. “எழுத்தாளர் எஸ். […]

அஞ்சலி: நக்சல்பாரி மூத்த தலைவர் கோவை ஈஸ்வரன்

தமிழ் உணர்வில் துவங்கி தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி, நக்சல்பாரி இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் விதையிட்டவர்.. அதேசமயம், இடது ஒற்றுமைக்காக அந்தக் காலத்திலும் பணியாற்றியவர்.

நக்சல்பாரியின் 50: லீலா மஜூம்தார் – சாருவின் துணைவியார் மட்டுமல்ல!

சி. மதிவாணன் “என் தாய் லீலா சாரு மஜூம்தாரின் துணைவியார் மட்டுமல்ல“, என்று சொல்கிறார் அவரின் மகன் அபிஜித். அவர் இப்போது CPI ML (Liberatin) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும் கூட. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் கூட. “என் தாய் சுதந்திரப் போராட்ட […]

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

கம்யூனிஸ்டுகளை சந்தேகப்படலாமா?

மாதவராஜ் சி.பி.எம் கட்சியின் தலைமை உயர்ஜாதி பிராமணர்கள் கையில் இருக்கிறது, அதுதான் சிபிஎம் கட்சியின் பின்னடைவுக்கும், தவறான நிலைபாடுகளுக்கும் காரணம் என்று இங்கு பேசப்படுகிறது. மட்டமான கிண்டலும், நக்கலுமாக இந்தக் கருத்துகள் சொல்லப்பட்ட போதிலும், கம்யூனிஸ இயக்கத்தை எதாவது சொல்லி களங்கப்படுத்த வேண்டும் என்ற […]

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாதவராஜ் பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து […]

மாவோயிஸ்டுகள் .. அதிதீவிர இடது சீர்குலைவுவாதிகள்: மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் குறித்து பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், ‘THINKING TOGETHER’ என்ற தலைப்பில் கேள்வி – பதில் வெளியாகி வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும்,பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் பதிலளிக்கிறார். சமீபத்தில் கேரளத்தில் மாவோயிஸ்டுகள் காவல்துறை […]

தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!

சந்திரமோகன் தோழர்.கணேசன்/பி.வி.எஸ் என்று தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட தோழர்.பி.வி.சீனிவாசன் அவர்கள், நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 6 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், டில்லியில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 79. டில்லியில் உள்ள CPIML […]

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை நலிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ (90) காலமானார். இதை கியூப அரசு தொலைக் காட்சி அறிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஹவானாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இறந்ததாக கியூப ஊடகம் […]

மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத் துள்ளன.இது தொடர்பாக […]

மாற்று ஏற்பாடுவரை பழைய ரூபாய்த்தாளே தொடர வேண்டும்: சிபிஎம் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 3 நாள் சிறப்பு மாநாடு நெல்லையில் நவம்பர் 12 முதல் நடந்துவருகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, […]

முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!: ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழா அழைப்பு

மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு  மற்றும் ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த உழைக்கும் மக்களே! வாழ்க்கையில் நமக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கையே பிரச்சினையாக […]

நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கொடியேற்றத்துடன் துவக்கம்

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு நவ.7ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட […]

தொடரும் என்கவுண்டர்; எமர்ஜென்ஸி நிலையைப் போன்ற போலீஸ் ஆட்சியின் அறிகுறி!

முதலில், கொடூரமான குஜராத் படுகொலை நிகழ்த்த சங் பரிவாரை சுதந்திரமாக அனுமதித்து, பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்து, குஜராத்தில் மோடி தனது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டார். சட்டத்தின் ஆட்சியை இப்படி முழுவதுமாக சீர்குலைவுக்கு உள்ளாக்கியதை நியாயப்படுத்த, (குஜராத் கவுரவம் […]

சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

சந்திரமோகன் 4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் […]

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக்கிய விந்தன்!

சுந்தரவள்ளி ஒரு படைப்பாளி சமூகத்தின் செவியாக இதயமாக கண்ணாக இருக்க வேண்டும். சமகால நிகழ்வுகளை அவற்றின் மீதான கண்ணோட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று மாக்சிம் கார்க்கி கூறுகிறார்.அந்த வழியில் எழுத்தாளர் விந்தன் சமூகத்தின் ஆன்மாவாக இருந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு பிறந்து 1975 […]

“அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தைப் பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம்”

அ. பாக்கியம் இன்றைய தினமணியில் திருவாளர் மதி அவர்களின் கார்ட்டூன் பகுதியில் எழுதியிருப்பது அப்பட்டமான திசை திருப்பலாகும். சீத்தாராம் யெச்சூரியின் ஒற்றை வார்த்தையை வெட்டி எடுத்து முடிவை அறிவிக்கும் மூர்க்கத்தனமான எழுத்தாகும். மதியுள்ள மனிதர்கள் அனைவரும் மாந்தர்களின் வாழ்வின் மீது பற்று வைத்து சீத்தாராம் […]

கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை இங்கேயே பாதுகாத்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென […]

“கிளர்ந்தெழுங்கள்.. கலகத்தின் பதாகையை உயர்த்திப் பிடியுங்கள்”: பகத் சிங்

“விடுதலை வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்தான் முதல் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் (என்பதை மறவாதீர்கள்). தனக்கென்று தனி உரிமைகள் உள்ள வர்க்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தன் உரிமையை அனுபவிக்க மட்டுமே முயற்சி செய்வார். அவருக்குக் கீழ் உள்ளவரை ஒடுக்குவதற்கு முடிந்தவரை அனைத்தையும் செய்வார். […]

தோழர் பாலனின் நாயக்கன் கொட்டாய்!

கண்ணன் செப் 12-ஆம் தேதி தோழர். அப்பு, தோழர்.பாலன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி நத்தம், நாயக்கன் கொட்டாய் பகுதிக்கு சென்றோம். நத்தம் கிராம மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். அப்பகுதியில் அமைந்திருந்த பம்பு செட்டில் அனைவரும் குளித்துவிட்டு இருவர் இருவராக பிரிந்து அப்பகுதி கிராம […]

இசைக்கலைஞர் திருவுடையான் குடும்பப் பாதுகாப்பு நிதி தாருங்கள்: தமுஎகச வேண்டுகோள்

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.வேலாயுதம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக உழைப்பாளி மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த முற்போக்கு இசைக்கலைஞர் திருவுடையானின் எதிர்பாரா மரணம் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடதுசாரி இயக்க மேடைகளிலும் பெரியாரிய […]

பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடுமுழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் ஏன் என சீத்தாராம் யெச்சூரி அளித்திருக்கும் கேள்வி-பதில் அறிக்கை: ஏன் இன்றைய தினம் (செப்டம்பர் 2) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது? 12 கோரிக்கைகளை முன்வைத்து, […]

“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “யாரிந்த வனிதா மோகன்? கோவை,பிரிக்கால் ஆலையின் […]

தோழமை அன்பின் திருவுடையான்: ஸ்ரீரசா

ஸ்ரீரசா 2016 ஆகஸ்டு 29ம் தேதியின் காலைப் பொழுது ஒரு கலைஞனை விழுங்கிக் கொண்டா விடிய வேண்டும்? ஓர் அகால நேரத்தில், வாடிப்பட்டியின் நெடுஞ்சாலையோரம் மரணத்தின் பாடலால் இசைக்கப்பட்ட அபூர்வக் கலைஞன் திருவுடையான். தானே பாடுவான், அருமையாகத் தபேலாவோடு விரல்களை விளையாட விடுவான். தபேலா […]

மக்கள் பாடகர் திருவுடையான்: அஞ்சலி!

தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்ற போது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், […]

பத்தி: நீலம் – பச்சை – சிவப்பு : தலித் அரசியல் குறியீடாகுமா!

அன்புசெல்வம் குஜராத் – உனா எழுச்சி தேசம் தழுவிய பேரியக்கமாக உருவெடுக்க வேண்டும் என்பதில் பலருக்கும் ஆர்வம். அதற்கான சூழல் உடனடியாக அமையவில்லை என்றாலும் குறைந்த பட்சம் “தலித் – ப‌ழங்குடியினர் – இஸ்லாமியர் – இடதுசாரி” அமைப்புகளையாவது ஒருங்கிணைப்போம் என்கிற குரல் ஒலிக்கத் […]

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

  பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் […]

பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

சந்திர மோகன் தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளீ) பேரவையின் நிறுவனத் தலைவரும், தென்னிந்திய பழங்குடியினர் யூனியன் தலைவருமான மதிப்பிற்குரிய K.A.குணசேகரன் அவர்கள், 71 வயதில் நோயின் காரணமாக இறந்தார். மாலை 4 மணியளவில், பள்ளிப்பாளையம் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. கொல்லிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட […]

மார்க்சியத்தை மார்க்சியத்தால் வீழ்த்துவது: ரங்கநாயக்கம்மா நூலை முன்வைத்து…

சி.மதிவாணன் தமிழ்நாட்டிற்கு புதியதோர் புத்தகம் வருகை தந்திருக்கிறது. ரங்கநாயகம்மா என்ற ஒரு எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் குறளி பதிப்பகத்தால் (ஆங்கிலம் வழி) தமிழில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஸ்வீட் ஹோம் என்ற […]

அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

சந்திர மோகன் நிலங்கள் பறிபோனதால் திருப்பதி காடுகளில் சாகின்றனர்! கல்வராயன் மலையானது, சேலம்,விழுப்புரம் மாவட்டங்களில் 600 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்த இலட்சக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்களைக் கொண்டதாகும். 50,000 ற்கும் மேற்பட்ட (தமிழ் பேசுகின்ற) “மலையாளி” பழங்குடியினர் வசிக்கும் முக்கியமான மலையும் ஆகும். […]

புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்

பிரேம்   ஆதிக்க பக்தி கொண்ட, அடக்குமுறையை நியாயப்படுத்துகிற கட்சிகளின், அமைப்புகளின் அடிப்படை உளவியல் தகவமைப்பு, “நீயே உலகம், உன்னால்தான் அனைத்தும், நீயே அனைத்தையும் செய்தாக வேண்டும். நீ மற்றும் இறைமை கொண்ட கட்சி அல்லது அமைப்பு மட்டும்தான் இந்த உலகம். அதற்காக நீ […]

“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான […]

அஞ்சலி: தோழர் நவமணி

பிரதாபன் ஜெயராமன் 1946ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி, கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. கடற்படையிலிருந்த இந்திய வீரர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க ஆங்கிலேய அரசு கடுமையான ஒடுக்கு முறையை ஏவிவிட்டது. […]

படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாருக்கு கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் ஆறுதல்

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிக்கள் கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாரைச் சந்தித்து  ஆறுதல் கூறினர். கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஜிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிசாவின் தயாருக்கு தேவையான உதவிகளை […]

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் […]

“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு  திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் […]

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் […]

“எஸ்.வி.ஆர் தலைமறைவாகத் திரியும் தீவிரவாதியா?”: தமிழகத்தில் கருத்துரிமை பறிப்பு!

தமிழகத்தின் முக்கியமான மார்க்சிய அறிஞரான எஸ். வி. ராஜதுரை குறித்த ஆவணப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் கடும் விமர்சனத்தை அரசு மீது வைத்துள்ளனர். ‘தமிழகத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவதாக’ குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த முகநூல் பதிவொன்று: Chandra […]

கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

கேரளத்தில் ஆட்சியமைத்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேரளத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு ஆகும். கேரள அரசியல் வரலாற்றில் அனைத்து அரசாங்கங்களிலுமே ஒரே ஒருபெண் அமைச்சர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையே இருந்தது. இதை […]

பினராயி விஜயனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக  பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு […]