வகை: இந்தியா

மாட்டிறைச்சி கொலை; ஓடும் ரயிலில் கும்பல் வன்முறைக்கு பலியான 16 வயது சிறுவன்

ஹரியானாவில் உள்ள தனது கிராமத்துக்கு டெல்லியிலிருந்து ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த 16 வயது ஜுனைத், கும்பல் வன்முறைக்கு பலியானார். தனது சகோதரர்கள் நால்வருடன் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட டெல்லியிலிருந்து மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார் ஜுனைத். தங்களுடன் பயணித்த சக பயணிகள் இவர்களை மத ரீதியாக கேலி […]

பாஜக செய்தித் தொடர்பாளரை வெளியேற்றியதுதான் ரெய்டுக்கு காரணமா?

மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதித்தது. அதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விவாதம் ஒன்றை நடத்தியது. அந்த விவாதத்தை நெறியாள்கை செய்தவர் நிதி ரஸ்தான் என்ற பத்திரிகையாளர்.  இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரதிநிதி, மனித உரிமை செயல்பாட்டாளர், திமுக […]

“ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்”: சிபிஐ சோதனை குறித்து எண்டீடிவி

வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய எண்டீடிவி நிறுவனர் பிரனாய் வீட்டில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தவறனான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலை எண்டீடிவி மீதும் அதன் புரோமோட்டர்கள் மீதும் சிபிஐ ஏவிவிட்டுள்ளதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

NDTV நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை; வழக்கு பதிவு

எண்டீடிவி இணை நிறுவனரான பிரனாய் ராயின் டெல்லி மற்றும் டெராடூனில் உள்ள வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 48 இழப்பு ஏற்படுத்தியதற்காக பிரனாய் ராய் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ராய் மீதும் ஹோல்டிங் நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு […]

ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் மேலும் இரண்டு அணு உலைகள்!

ரூ. 50 ஆயிரம் கோடியில் பாதித் தொகையை ரஷ்யா கடனாக வழங்கும் எனவும் இந்திய அணுசக்தி கழகம் மீதித்தொகையை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு

மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அரிசி பீருடன் பீஃப் பார்டி கொடுக்கப்படும் என மேகாலயா மாநிலத்தின் கரோ மாவட்ட பாஜக தலைவர் பச்சு சம்பூகோங் மராக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு இறைச்சிக்காக […]

ஜிஎஸ்டி: ஆபாச நூல்களுக்கு வரிவிலக்கு; குழந்தை நூல்களுக்கு 12% வரியா?

குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட  12 சதவீத ஜி.எஸ்.டி வரியை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஜூலை, 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. […]

தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!

கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில்  கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு […]

வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..

குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப மாதங்களாக தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் அவர்கள் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் […]

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு?

  சி. மதிவாணன் பாரம்பரிய அறிவு தரவுகள் நூலகம் (Traditional Knowledge Database Library -TKDL), என்ற ஒன்றை அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research) என்ற அரசு நிறுவனம் நடத்திக்கொண்டு வந்தது. TKDL என்று அந்த […]

பகுத்தறிவை கண்டு பயப்படுவது ஏன்? சீத்தாராம் யெச்சூரி கேள்வி

வலதுசாரிகளும், நாக்பூர் பல்க கலைக் கழக துணை வேந்தரும் பகுத்தறிவுச் சிந்தனையை எதிர்கொள்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். நாக்பூரில் ராஷ்ட்ரகந்த் துக்காதோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சீத்தாராம் யெச்சூரி சனிக்கிழமையன்று, ‘‘ஜனநாயகமும் அதன் […]

ஐரோம் சர்மிளாவின் தோல்விக்காக வருத்தப்பட வேண்டியதில்லை; ஏன்?

ஜி. கார்ல் மார்க்ஸ் நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் […]

இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…

கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான  குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை. கன்னடப்படமான […]

டெல்லி பல்கலை பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை; பாஜகவின் நீதித்துறை தாக்குதல் !

சந்திரமோகன் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு, பாஜக ஆட்சி செய்யும் மஹாராஸ்ட்ராவின் கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவரோடு JNU மாணவர் ஹேம் மிஸ்ரா உட்பட நால்வர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். கார்ப்பரேட்டுகள் நலன் பாதுகாக்க, பழங்குடியினர் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் […]

புதுக்கோட்டை, காரைக்கால் ஹைட்ரோகார்பன் திட்டம் சில தகவல்கள்

அருண் நெடுஞ்செழியன் 2020 ஆண்டுக்குள்,எண்ணெய் எரிவாயு இறக்குமதியை பத்து விழுக்காட்டிற்கு குறைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப கடந்த 2015 ஆம்ஆண்டில் சிறு எண்ணெய் வயல்Discovered Small Field (DSF)கொள்கை உருவாக்கப்பட்டது. அதாவது பெரும் எண்ணெய் வயல்களின் எண்ணெய் எரிவாயுவை எடுப்பதைப் போல சிறு எண்ணெய் […]

கருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு வழங்கும் மெகா குலுக்கல் பரிசுகள்!

நாடு முழுவதும் ரொக்கமில்லா மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 340 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தினமணி வெளியிட்டுள்ள […]

மோடிக்கு பொருளாதாரம் புரியுமா? அவர் பெற்ற பட்டத்தை ஏன் காண்பிக்க மறுக்கிறார்?: அரவிந்த் கெஜ்ரிவால்

ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு மோடி பெற்ற கல்வியறிவு என்ன? என கடுமையாக சாடியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். “மோடி என்ன படித்திருக்கிறார் என தெரிந்துள்ள மக்கள் விரும்புகிறார்கள். அவரால் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள […]

வரதட்சணையை புது ரூபாய் நோட்டுகளில் தரவில்லை; மணப் பெண் அடித்துக் கொலை

மத்திய அரசின் செலாவணி நீக்க அறிவிப்பு பல உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொலைகளையும் நிகழ்த்தி வருகிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரங்கிபூர் என்ற ஊரில் புதிய ரூபாய் நோட்டுக்களில் வரதட்சணை பணத்தை தரவில்லை என்பதற்காக மணப் பெண், மணமகன் வீட்டீனரால் […]

“உள்நாட்டு போர் உண்டாக்கும் திட்டமிருக்கிறதா?”: வங்காளத்தில் இராணுவம் குவிக்கப்பட்டது குறித்து மமதா காட்டம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பேரணி நடத்தினார். மோடியை அரசியலிலிருந்து நீக்கியே தீருவேன் என ஆவேசத்துடன் பேட்டியளித்தார். இந்நிலையில் வங்காளத்தில் உள்ள […]

சில்லறை தட்டுப்பாடு; பயண செலவுக்கு இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டினர்

மோடி அறிவித்த செல்லாத நோட்டு அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் தெருக்களில் நிற்க, வெளிநாட்டினர் தெருக்களில் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் புஸ்கர் நகரில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த பயணிகள், தங்களுடைய பயணத்துக்காக வித்தைகளைக் காட்டி பிச்சை எடுத்துள்ளனர். […]

நபார்டு வங்கி மூலம் ரூ.21,000 கோடி விவசாயக் கடன்…

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்குவதற்கு நபார்டு வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “தற்போது ரபி பருவச் சாகுபடி நடைபெற்று வருவதால், […]

ஒடிசாவில் இரண்டு மாதங்களில் 300க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் மரணம்

ஒடிசா மாநிலத்தில் பழங்குடிகள் அதிகமாக வாழும் மல்கன்கிரி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்  உயிரிழந்துள்ளனர். Japenese Encephelitis என்ற ஒருவகை வைரஸ் தொற்று நோய் காரணமாக இறந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சத்து குறைபாடும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் அதிக […]

கருப்புப் பண ஒழிப்புக்கு இதுவரை 72 பேர் பலி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என தீடீரென அறிவித்தார்.  செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார். செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக வங்கிகளில் வரிசையில் காத்துக் […]

பிக் பஜாருக்கு ’வங்கி’ அனுமதி தரப்பட்டது எப்போது? என்னதான் நடக்கிறது இங்கே?: சீதாராம் யெச்சூரி

பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை மறு நாள் முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இங்கே என்ன […]

டெபிட் கார்டு மூலம் ரூ. 2000 பெறலாம்: மத்திய அரசின் முகவராக பிக் பஜார்!

ரூ. 500. ரூ. 1000 நோட்டுகள் தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக, மத்திய அரசு பெட்ரோல் பங்குகளில் செல்லாத நோட்டுக்களுக்கு சில்லறை பெறலாம என அறிவித்திருந்தது. இந்நிலையில் பிக் பஜார் என்ற தனியார் ரீ […]

ஜேஎன்யு மாணவர் நஜீப்பை தாக்கியது ஏபிவிபி அமைப்பினரே; முதற்கட்ட விசாரணையில் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் பட்துவான் பகுதியை சேர்ந்தவர் நஜீப் அகமது(27). இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறையில் ஆய்வுப் படிப்பினை மேற்கொண்டு வந்தார். பொதுவாக பல்கலைக்கழகத்தில் நல்ல நடத்தை யைக் கொண்ட மாணவராகவும், கல்வியிலும்சிறந்த மாணவராகவும் விளங்கி வந்துள்ளார். இதுவரை அப்பல்கலை.யில் ஒழுங்கீன செயல் உள்ளிட்ட […]

தூக்கம் இல்லாமல் தொடர்ந்து பணி: வங்கியிலேயே மயங்கி விழுந்த ஊழியர்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை தடை செய்தார் இந்திய பிரதமர் மோடி. இந்த திடீர் அறிவிப்பால் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் காத்திருக்கின்றனர். அறிவிப்பு வந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் கூட்டம் குறையவில்லை. வங்கி ஊழியர்கள் […]

உள்ளூர் பிரச்சினைகளையும் கேளுங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதி மன்றங்கள் மற்றும் மாநில தலைமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய அரசை கண்டித்து, திருவனந்தபுரம் ரிசர்வ் பேங்க் முன்பாக, கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் நாளை சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேரள முதல்வர் பினராயி […]

செல்லாத நோட்டுக்குப் பதிலாக வங்கிகளில் வழங்கப்படும் தொகை ரூ.4,500ஆக உயர்வு

செல்லாத நோட்டு அறிவிப்பால் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் டிசம்பர் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.4,000 வரை ரொக்கமாகவும், மீதத்தொகை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என்றும் […]

ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும்: ரிசர்வ் வங்கி

புதிய நோட்டுகளுக்கான தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் இயங்கி வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் […]

90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே: மார்கண்டேய கட்ஜு

ரூபாய் 500 மற்றும் 1,000 நோட்டுகளை திரும்பபெறும் அரசின் நடவடிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜு, இன்றைய பணவீக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலானவர்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பழைய […]

‘புதிய இந்தியா பிறந்தது’: மோடியின் நடவடிக்கை குறித்து ரஜினி

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் ரஜினி காந்த்,  இதன் மூலம் புதிய இந்தியா பிறந்தது என தனது ட்விட்டர் பதிவில் புகழ்ந்திருக்கிறார். ரஜினியின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன. திரை செயல்பாட்டாளர் […]

’துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு!

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடியாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘நவீன கால துக்ளக்’ போல மோடி செயல்படுவதாக தாக்கியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான மணிஷ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், முகது […]

ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் […]

என்டிடிவி ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடையை நிறுத்திவைத்தது மத்திய அரசு

என்டிடிவி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடை உத்தரவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பதான்கோட் விமானப் படைத் தாக்குதலின்போது இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட பாதுகாப்பு உத்திகளை, விதிகளை மீறி ஒளிபரப்பியதாக கூறி என்டிடிவியின் ஹிந்தி செய்தி சேனலுக்கு வரும் 9-ஆம் தேதி ஒருநாள் […]

அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதிக்கத் தயார்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இதுவரை […]

ஜேஎன்யூ மாணவர் நஜிப் அகமதுக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவியிடம் போலீஸின் அத்துமீறல்

ஜேஎன்யூவில் காணாமல் போன மாணவர் நஜிப் அகமதுவுக்காக நேற்று டெல்லியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் நஜிப்பின் தாய், சகோதரி ஆகியோரும் ஜேஎன்யூ மாணவர்களும் திரளாக கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்களை மிகக் கடுமையாக அடித்து இழுத்து கைது செய்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் […]

என்டிடீவி சேனலுக்கு மத்திய அரசு தடை

பதான்கோட்டில் இந்திய ராணுவ தளத்தின் மீது பாக். ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் நடத்திய தாக்குதல் குறித்து  செய்தி வெளியிட்ட என்டிடீவி  இந்தி செய்தி சேனலுக்கு ஒரு நாள் முழுக்க தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 9-ஆம் தேதி முழுநாளும் ஒளிபரப்பு ரத்து […]