வகை: கருத்துரிமை

தமிழகத்தில் தொடர்கிற கைதுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்..

வரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன.

Advertisements

கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில், நெல்லை போலீஸால் கைதுசெய்யப்பட்டார். […]

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் ஆதவன் தீட்சண்யா எழுதிய குறிப்பு: “’என்டிடிவி இந்தியா’ செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் […]

ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

ச. பாலமுருகன் இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு […]

“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான […]

‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களாக விளங்குகின்றன என்று அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.தேசியவாதம் மற்றும் பேச்சுரிமை தொடர்பான விவாதங்களில் மத்திய அரசின் படுமோசமான நடவடிக்கைகளின் மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் கோபாவேசத்தை எழுப்பியுள்ள […]

“எது உண்மையான புரட்சிகர கட்சி?”

சிந்தன் “எது உண்மையான புரட்சிகர கட்சி?” “என்னைவிட நீ என்ன பெரிய புரட்சி பண்ணிட்ட?” “நீ கலந்துக்கிற தேர்தலால் புரட்சியைக் கொண்டுவந்துவிடமுடியா?” “லெனின் கூட புரட்சிக்கான சூழல் வரும்வரையில் தற்காலிகமா தேர்தலில் போட்டியிடலாம்னு சொல்லிருக்கார். நீ வெறுமனே போஸ்டர் அடிச்சிட்டே புரட்சி பண்ணிடுவியா?” இப்படியான […]

’பகத் சிங் தூக்கிடப்படும்போது “பாரத் மாதா கி ஜே” சொன்னார்’: பிஜேபி புதிய ஆய்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், பிரிட்டிஷார் ஆட்சியில்,  பகத் சிங் தேச விரோத வழக்கில் சிறை சென்றார். அதேபோல, கன்னையா குமார் சிறை சென்றிருக்கிறார் என்று கூறினார். சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாவின் ஷாநவாஸ் ஹூசைன்,  […]

மதுரையில் நடக்கவிருந்த ’இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்’ கருத்தரங்குக்குத் தடை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த  ‘இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்’ என்ற கருத்தரங்கம் காவல் துறையால் இறுதி நேரத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், திவ்ய பாரதி தனது முகநூலில், ‘சூல் வாசிப்பு தளம் சார்பாக இன்று நடக்க இருந்த முழு நாள் கருத்தரங்கிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு. […]

#விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”

தமயந்தி இரண்டு நாட்களாய் இணையத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆணவக் கொலைக்கெதிரான கட்டுரை( புகைப்படம் ) பார்த்த போதே அதன் பின்னிருக்கும் அரசியல் எனக்கு நன்கு புரிந்தது. இணையத்தில் இதைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் அரசியல் புரிதலும் அவசரமான பழி வாங்கும் சொற்களும் மிக ஆபாசமாக […]

உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள்

“கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்

கடந்த மூன்று நாட்களாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்ணையா குமார் சோஃபாவில் அமர்ந்திருப்பது போலவும் சோஃபாவின் கைப்பிடி பகுதியில் அந்தப் பெண் அமர்ந்து, கண்ணையா தோளில் கைப் போட்டிருப்பது […]

#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் […]

பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் […]

“நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

வி. சபேசன் சீமான் இரண்டு கோட்பாடுகளை கொச்சைப்படுத்துகிறார். ஓன்று திராவிடம் மற்றது தமிழ்த் தேசியம். இந்த இரண்டு கோட்பாடுகள் பற்றிய மிகத் தவறான விடயங்களை இளைஞர்களுக்கு சீமான் போதிக்கிறார். திராவிடத்தின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் பற்றுள்ள ஒருவன், இதை அலட்சியப்படுத்தி விட்டு கடந்து […]

#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் […]

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே… ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் […]

”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…

பிணையில் வெளிவந்த கன்னய்யா குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வியாழன் இரவு ஆற்றிய உரை குறித்துதான் இந்தியா இப்போது பேசிக்கொண்டிருக்கிறது. அவர் உரை குறித்து ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் செய்த அவதானிப்புகளின் தொகுப்பு இங்கே…   தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் […]

தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட்,  காவலர் சீருடை அணிந்து,  நீதிமன்றம் அழைத்து வருகிறது […]

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ… தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் […]

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் […]

#JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

1977-ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர், சீதாராம் யெச்சூரி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்). எமர்ஜென்ஸிக்கு எதிராக போராடிய காரணத்தால் சில […]

கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக […]

#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா […]

ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர்.  போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட […]

ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை

விஜயசங்கர் ராமச்சந்திரன் கன்ஹையா குமாருடன் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அஷுதோஷ் குமார் யாதவ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா பிரபலமான ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர். ரஷ்யாவைக் குறித்த ஆய்வு மாணவரான யாதவ் கூறுவதைக் கேளுங்கள்: “நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் வசித்தோம். எங்கள் குடும்பம் […]

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை […]

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. […]

” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

அப்சல் குரு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டு பேரில் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளனர். அதில் உமர் காலித், அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். காரணம் அவர் இஸ்லாமியர் என்பதுதான். […]

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி “தி வயரில்” கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் […]

காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. […]

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு […]

“ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை தி. நகரின் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஊடகங்கள் அனைத்தும் திமுக ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டன; ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகிறது என குற்றம்சாட்டினார். அப்போது நிருபர்கள், “ஜனநாயகம் விலை போய்விட்டதாக […]

நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை

கொங்கு பகுதியின் சாதிய குழுக்களின் வன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த ஒலிப்பதிவு வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டாலும் இணையத்தில் முதன் முதலாக பதிவேற்றியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம். இதன் விளைவாக கொலை மிரட்டல் விடுத்த சாதியவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் […]

ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

வில்லவன் இராமதாஸ்  தமிழ் இந்து கட்டுரையில் த.ந.த.ஜவின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை விமர்சனம் செய்து சமஸ் எழுதியிருக்கிறார். அது விமர்சிக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை பல இசுலாமியர்களே விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சமஸ் வார்த்தைகளில் ஒரு நுட்பமான அரை இந்துத்துவ பிரச்சாரம் இருக்கிறது. […]

#விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!

மீரா கதிரவன் சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் “கொல்லப்பட்டும்”வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது! கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் […]